உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

உலகின் விலையுயர்ந்த காரை அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் தம்பதியினர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

உலகின் மிக விலையுயர்ந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. 'போட் டெயில்' என்கிற பெயரில் அதிக சொகுசு வசதிக் கொண்ட அக்கார் களமிறங்கியது. தமிழில் இதன் பெயர் 'படகின் வால்' ஆகும். இக்காருக்கு ரூ. 200 கோடி என்ற உச்சபட்ச விலையை ரோல்ஸ் ராய்ஸ் நிர்ணயித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

காரின் அரை பாதியை லக்சூரி வசதிக் கொண்ட காராகவும், மீதி பாதி பகுதியை படகின் உருவத்திற்கு இணையாகவும் ரோல்ஸ் ராய்ஸ் வடிவமைத்திருக்கின்றது. அந்தவகையில், காரின் பின் பகுதிக்கே படகின் அமைப்புக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, படகின் வால் பகுதி போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மிக முக்கியமான சிறப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

குறிப்பாக, பட்டாம்பூச்சியின் இறகை போல் திறக்கும் கதவுகள், அதற்குள் பொருட்களை வைத்து கொள்வதற்கு ஏதுவான பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரு பிரிவுகளாக காணப்படும் இப்பெட்டகத்தின் ஓர் பகுதியில் பானங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

இத்துடன், அந்த பானங்களை ஹாயாக அமர்ந்து குடிப்பதற்கு ஏதுவாக குடை ஒன்றை தாங்கி நிற்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அதிக சொகுசு வசதிகளை நிறைந்த காரையே, யார் முதல் நபராக வாங்கியிருக்கின்றனர் என்பது குறித்த தகவலையே ரோல்ஸ் ராய்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

இவ்வளவு விலையுயர்ந்த காரை யாருங்க வாங்கியிருக்காங்க என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம், உலகின் மிக அதிக சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வரும் இசை ஜோடிக்களான ஜே ஸி (Jay Z)மற்றும் பெயோன்ஸ் (Beyonce) தம்பதியினரே வாங்கியிருக்கின்றனர்.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

இருவருக்கும் பிரபல பாடகர்கள் ஆவார்கள். பாடலை எழுதுவது, இசைப்பது என இசை சார்ந்த பல தொழில்களை அவர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையிலேயே சொகுசான பயணங்களுக்காக கடல் நீல நிறத்திலான ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில் சொகுசு காரை புதிதாக அவர்கள் வங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

போட் டெயில் காரின் பின் பகுதியின் ஒரு பக்கத்தில் பானங்களை வைக்கும் வசதிக் கொடுக்கப்பட்டிருப்பதாக மேலே கூறியிருந்தோம். இதேபோன்று மற்றொரு பகுதியில் உணவு பண்டங்களை சாப்பிட பயன்படும் பாத்திரங்களை வைப்பதற்கு ஏதுவான அறை மற்றொரு பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

இத்தகைய வசதிகள் இதில் இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே போட் டெயில் காரை நீண்ட தூர மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு ஏற்ற வாகனம் என ரோல்ஸ் ராயஸ் குறிப்பிடுகின்றது. அவ்வாறு இந்த காரில் பிக்னிக் செல்லும்போது மேற்கூரையை தேவை என்றால் மடித்துக் கொண்டோ (மேற்கூரை இல்லாத நிலை) அல்லது மேற்கூரை விரித்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

இந்த சிறப்பு வசதியும் போட் டெயில் மாடலில் வழங்கப்பட்டிருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதன் மிக மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றான ஸ்வெப்டெயில் மாடலை தழுவியே போட் டெயிலை உருவாக்கியிருக்கின்றது. 19 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்காரில் 6.75 லிட்டர் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

ஜே ஸி, பெயோன்ஸ் தம்பதியினரின் முதல் குழந்தைக்காக இக்கார் வாங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ப்ளூ ஐவி என்ற பெயரில் இவர்களுக்கு 9 வயது மகள் உள்ளார். இவரின் பெயரை ஒத்த நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில் விற்பனைக்கு வந்திருக்கின்ற காரணத்தினாலேயே இக்காரை அவர்கள் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

இணையத்தின் வாயிலாக வெளி வந்திருக்கும் இந்த தகவலை ஜே ஸி, பெயோன்ஸ் தம்பதியினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமோ அரசல் புரசலாகவே இதுகுறித்த தகவலை வெளியிட்டிருக்கின்றது.

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கிய பாடகர் ஜோடி... ரூ. 200 கோடி செலவில் காரை வாங்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

Source: RR

அதாவது, போட் டெயில் காரின் உரிமையாளர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும், அவரும், அவரது மனைவியும் இசை தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் அது கூறியிருந்தது. இந்த தகவல்களின் அடிப்படையிலேயே உலகின் மிக மிக விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில் காரின் முதல் உரிமையாளர்கள் ஜே ஸி-பெயோன்ஸ் தம்பதியினர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jay-Z and Beyoncé Are The First Owners Of Rolls-Royce Boat Tail. Read In Tamil.
Story first published: Friday, June 4, 2021, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X