கமெண்டரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! புதிய டீசரை வெளியிட்டது ஜீப்!

இந்திய சந்தைக்கான ஜீப்பின் புதிய 7-இருக்கை எஸ்யூவி கார் விரைவில் உலகளவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிலையில் இந்த புதிய எஸ்யூவி காரின் டீசர் படத்தினை ஜீப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த டீசர் வீடியோவில் காரின் உட்புறம் காட்டப்பட்டுள்ளது. ஜீப்பின் இந்த புதிய 7-இருக்கை எஸ்யூவி கார் கிட்டத்தட்ட காம்பஸ் கொண்டிருப்பது போன்றதான உள்ளமைவில் கேபினையும், டேஸ்போர்டையும் கொண்டுள்ளது.

கமெண்டரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! புதிய டீசரை வெளியிட்டது ஜீப்!

பிரேசிலில் இந்த 7-இருக்கை கார் கமெண்டர் என்ற பெயரில் வெளிவரவுள்ளதை ஏற்கனவே ஜீப் உறுதிப்படுத்திவிட்டது. கமெண்டர் பெயரை இந்த டீசர் வீடியோவில் காரின் 10.25 இன்ச் டிஜிட்டல் ஓட்டுனர் திரையில் பார்க்க முடிகிறது.

கமெண்டரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! புதிய டீசரை வெளியிட்டது ஜீப்!

இந்த திரையுடன் 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவையையும் பார்க்கலாம். இந்த திரைகள் அனைத்தும் காம்பஸில் இருப்பவையே. தனித்து தெரிவதற்காக கமெண்டரில் தேவைக்கு ஏற்றாற்போல் மடக்கி வைத்துக்கொள்ள முன் இருக்கைகள் வழங்கப்பட உள்ளன.

கமெண்டரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! புதிய டீசரை வெளியிட்டது ஜீப்!

இதுமட்டுமின்றி பவர் டெயில்கேட்டும் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி, தானியங்கி அவசரகால ப்ரேக்கிங் என அட்வான்ஸ்டு ஓட்டுனர் உதவி அமைப்புகளும் கமெண்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த டீசர் வீடியோவில் காரின் இருக்கைகள் மெல்லிய பழுப்பு நிற லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கமெண்டரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! புதிய டீசரை வெளியிட்டது ஜீப்!

இத்தகைய ப்ரீமியம் தரத்திலான அலங்கரிப்பும் கமெண்டரை காம்பஸை காட்டிலும் விலைமிக்கதாக காட்டுகிறது. இருக்கைகளுடன் முன் மைய ஆர்ம்ரெஸ்ட்டும் லெதரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ம்ரெஸ்ட்டில் ‘1941 ஜீப்'என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கமெண்டரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! புதிய டீசரை வெளியிட்டது ஜீப்!

1941 என்பது ஒரிஜினல் வில்லிஸ் ஜீப் உருவான ஆண்டாகும். மேலும் இந்த டீசரில் காரின் இரண்டாவது இருக்கை வரிசை 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளதையும் காணலாம். இதன் 6-இருக்கை வெர்சனிலும் கேப்டன் இருக்கைகள் மத்திய இருக்கை வரிசையில் வழங்கப்பட உள்ளன.

கமெண்டரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! புதிய டீசரை வெளியிட்டது ஜீப்!

காரின் மைய கன்சோலை இந்த டீசர் வீடியோவில் பார்க்க முடியவில்லை. எப்படி இருந்தாலும் காம்பஸை கொண்டுள்ளதை போன்று தான் பெற்றுவரும். எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக்கை பெற்றுவரவுள்ள கமெண்டர் மாடலில் பாதை மோட்களை தேர்வு செய்ய சில்வர் நிற மாற்றியும், 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்திற்கான பொத்தான்களும் வழங்கப்பட உள்ளன.

கமெண்டரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! புதிய டீசரை வெளியிட்டது ஜீப்!

முந்தைய டீசர்களில் புதிய ஜீப் கமெண்டரின் வெளிப்பக்கத்தை பார்த்திருந்தோம். முன்பக்க க்ரில் டிசைனை கிராண்ட் செரோக்கியுடன் கமெண்டர் பகிர்ந்து பெற்றுவரவுள்ளது. இதனால் உட்புறம் மட்டுமின்றி வெளிப்புற தோற்றத்திலும் இந்த புதிய 7-இருக்கை எஸ்யூவி கார் காம்பஸில் இருந்து வேறுப்படும்.

கமெண்டரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! புதிய டீசரை வெளியிட்டது ஜீப்!

ஜீப்பின் இந்த புதிய 3-இருக்கை வரிசை எஸ்யூவி கார் 2-லிட்டர் டீசல் மற்றும் டர்போ-பெட்ரோல் என இரு விதமான என்ஜின்களையும் தேர்வுகளாக பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஜீப் வ்ராங்லரில் இருந்து வழங்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
New Jeep 7-Seater Interior Teased, Gets Same Dashboard As The Compass.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X