சும்மா கெத்தா... ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் காம்பேக்ட் எஸ்யூவி... இந்தியாவை கலக்க வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட் கார்களுக்கு போட்டியான ரகத்தில் புதிய எஸ்யூவி மாடலை ஜீப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய மாடலை போட்டியாளர்களைவிட அதிக மதிப்புவாய்ந்த அம்சங்களுடன் களமிறக்க ஜீப் திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து விரிவாகப் பார்க்கலாம்.

சும்மா கெத்தா... ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் காம்பேக்ட் எஸ்யூவி... இந்தியாவை கலக்க வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

எஸ்யூவி கார்களுக்கு பல தசாப்தங்களுக்கு முன் பிள்ளையார் சுழி போட்ட ஜீப் நிறுவனம் இந்தியாவிலும் பெரிய அளவிலான ரசிகர்களை வசியம் செய்து வைத்துள்ளது. இந்த நிலையில், ஜீப் நிறுவனத்தின் தற்போதைய மாடல்கள் பட்ஜெட் கார் வாங்க நினைக்கும் இந்தியர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது.

சும்மா கெத்தா... ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் காம்பேக்ட் எஸ்யூவி... இந்தியாவை கலக்க வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

இந்த குறையை போக்கும் விதத்தில், இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் புத்தம் புதிய மாடலை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய மாடலானது ரூ.10 லட்சத்திற்குள் ஆரம்ப விலை இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சும்மா கெத்தா... ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் காம்பேக்ட் எஸ்யூவி... இந்தியாவை கலக்க வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

மேலும், தற்போது இந்தியாவில் 8 சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்துமே ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் மாடல் மட்டுமின்றி, ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி மூலமாக தெரியவந்துள்ளது.

சும்மா கெத்தா... ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் காம்பேக்ட் எஸ்யூவி... இந்தியாவை கலக்க வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

ஜீப் காம்பேக்ட் எஸ்யூவியின் விலை உயர்ந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதாவது, ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு உகந்த சில சிறப்பு தொழில்நுட்பங்களுடன் இந்த புதிய ஜீப் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும்.

சும்மா கெத்தா... ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் காம்பேக்ட் எஸ்யூவி... இந்தியாவை கலக்க வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

இந்த புதிய எஸ்யூவியில் சிட்ரோன் நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவியில் வழங்கப்படும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும் என தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

சும்மா கெத்தா... ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் காம்பேக்ட் எஸ்யூவி... இந்தியாவை கலக்க வரும் புதிய ஜீப் எஸ்யூவி!

அடுத்த ஆண்டு ஜீப் காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காம்பஸ் எஸ்யூவி அடிப்படையிலான புதிய 7 சீட்டர் மாடலையும் ஜீப் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 13, 2021, 17:40 [IST]
English summary
According to report, Jeep is planning to offer AWD system of it's compact SUV in India.
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+