புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியானது

ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியானது

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் சந்தைப் போட்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ஏராளமான வசதிகள் மற்றும் மதிப்பு கூட்டும் அம்சங்களுடன் தங்களது மிட்சைஸ் எஸ்யூவி மாடல்களை கார் நிறுவனங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன.

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியானது

இந்த நிலையில், மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் மிக முக்கிய விஷயத்தை கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. அதன்படி, மிட்சைஸ் எஸ்யூவி சந்தையில் 7 சீட்டர் மாடல்களை களமிறக்கும் முயற்சிகளில் அனைத்து நிறுவனங்களும் இறங்கி இருக்கின்றன.

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியானது

இந்த சந்தையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி சிறந்த 7 சீட்டர் மாடலாக இருந்து வந்தது. இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி என 7 சீட்டர் மாடல்கள் வரிசை கட்டி வருகின்றன.

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியானது

விரைவில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலும் வர இருக்கிறது. இந்த சூழலில், அடுத்ததாக ஜீப் நிறுவனமும் தனது காம்பஸ் அடிப்படையிலான 7 சீட்டர் மாடலை களமிறக்க உள்ளது. இந்த புதிய மாடல் எச்-6 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியானது

தற்போது இந்த எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடல் அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியானது

ஜீப் காம்பஸ் அடிப்படையிலான மாடல் என்பதால், முன்புறத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள் இருக்கும். ஆனால், பக்கவாட்டில் சி பில்லருக்கு பின்பகுதியில் அதிக மாற்றங்கள் தெரியும். இந்த எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை தரும் வகையில் இருக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியானது

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் மல்டிஜெட் டர்போ டீசல் எஞ்சின்தான் புதிய 7 சீட்டர் மாடலிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியானது

இந்த புதிய மாடலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் இருக்கைகள், கேப்டன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய மாடலானது ஜீப் நிறுவனத்தின் சகன் ஆலையில் உர்பத்தி செய்யப்படும். வலது பக்க ஸ்டீயரிங் வீல் கொண்ட மாடலானது இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 18, 2021, 12:27 [IST]
English summary
According to report, Jeep is planning to launch Compass 7 seater model in India by mid of next year.
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+