முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சனாக வெளிவரவுள்ள கிராண்ட் கமெண்டர் எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

உலகளவில் பிரபலமான ஜீப் தயாரிப்பு வாகனமாக விளங்கும் காம்பஸ் எஸ்யூவி மாடலின் 7-இருக்கை வெர்சனை விற்பனைக்கு கொண்டுவர இந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

கிராண்ட் கமெண்டர் என்கிற பெயரில் கொண்டுவரப்படும் இந்த 7-இருக்கை எஸ்யூவி காரின் முதல் ஸ்பை படங்கள் சில வாரங்களுக்கு முன்பு தான் சீனாவில் இருந்து வெளியாகி இருந்தன. இந்த படங்களில் சோதனை கிராண்ட் கமெண்டர் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் இருந்தது.

முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

இந்த நிலையில் கிராண்ட் கமெண்டரின் இரு சோதனை மாதிரிகள் இந்திய சாலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் இரு சோதனை கார்களும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளன

முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

கிராண்ட் கமெண்டர், இந்தியாவின் ஜீப் நிறுவனம் அசெம்பிள் செய்யவுள்ள மூன்றாவது மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை கார்கள் மறைப்பால் மறைக்கப்பட்டு இருந்தாலும், அவற்றின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை ஓரளவிற்கு நம்மால் அறிய முடிகிறது.

முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

அதுமட்டுமில்லாமல் இவை இரண்டிற்கும் பின்னால் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் 5-இருக்கை காம்பஸ் கார் வருவதால் இவை 7-இருக்கை கிராண்ட் கமெண்டர் கார்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை. தோற்றத்தில் கூடுதல் நீளத்தை தவிர காம்பஸுக்கும், இந்த 7-இருக்கை வெர்சனுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.

முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

உட்புறத்தில் மூன்றாவது இருக்கை வரிசை கொண்டுவரப்படுவதால், காரின் பின்பகுதி வேண்டுமானால் இரண்டிலும் சற்று வித்தியாசப்படலாம். அதேபோல் இதே காரணத்தினால் கிராண்ட் கமெண்டர் காரின் மேற்கூரை கடைசி வரையில் தட்டையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதை இந்த ஸ்பை படங்களில் கூட பார்க்கலாம்.

முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

மூன்றாவது இருக்கை வரிசைக்கென கூடுதலாக கால்-பகுதி கண்ணாடி ஜன்னல் இந்த காரில் வழங்கப்பட உள்ளது. இதனுடன் சக்கர வளைவுகள் இந்த 7-இருக்கை காரில் வளைவாக கொடுக்கப்பட உள்ளன. காம்பஸில் இந்த வளைவு சதுரமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

ஆனால் காம்பஸின் அதே 17 இன்ச் V-வடிவிலான டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் தான் இந்த 7-இருக்கை வெர்சனிலும் தொடரப்படுவதற்கு வாய்ப்புள்ளது. கிராண்ட் கமெண்டரின் முன்பகுதியை இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடியவில்லை.

முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

இருப்பினும் ஜீப்பின் அடையாளமான 7-ஸ்லாட் க்ரில் முன்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் என்பது மட்டும் உறுதி. அதேபோல் பக்கவாட்டிற்கும் சேர்த்து வளைக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட்களையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

முதல்முறையாக இந்தியாவில் காட்சிதந்த ஜீப் காம்பஸின் 7-இருக்கை வெர்சன்... கிராண்ட் கமெண்டர்!!

பருமனான பொனெட் மற்றும் பேஸ் தட்டுடனான முன்பக்க பம்பர் காருக்கு கூடுதல் கம்பீரத்தை வழங்கும் விதத்தில் இருக்கும். என்ஜின் அமைப்பை 5-இருக்கை காம்பஸில் இருந்து பெற்றுவரவுள்ள இந்த 7-இருக்கை எஸ்யூவி காரின் அறிமுகத்தை 2022ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Grand Commander SUV Compass 7 Seater Spied In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X