ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது... விலை தடாலடியாக குறைய வாய்ப்பு!

ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களின் மனம் கவர்ந்த ஜீப் ரேங்லர் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளதையடுத்து, விலை தடாலடியாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது... விலை தடாலடியாக குறைய வாய்ப்பு!

இந்தியாவின் பிரிமீயம் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் ஜீப் ரேங்லர் எஸ்யூவி முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் நான்காம் தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் தற்போது இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது... விலை தடாலடியாக குறைய வாய்ப்பு!

இந்த நிலையில், இந்தியர்களுக்கு சரியான விலையில் வழங்கும் பொருட்டு, ரேங்லர் எஸ்யூவியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஜீப் நிறுவனம் முடிவு செய்தது.

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது... விலை தடாலடியாக குறைய வாய்ப்பு!

அதன்படி, ஜீப் ரேங்லர் எஸ்யூவியை முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் பணிகளை ஜீப் நிறுவனம் துவங்கி இருக்கிறது. ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் ஆலையில் இந்த எஸ்யூவி உற்பத்தி செய்யப்படுகிறது.

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது... விலை தடாலடியாக குறைய வாய்ப்பு!

அடுத்த மாதம் 15ந் தேதி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் ஜீப் ரேங்லர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்ட மாடலைவிட இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் மாடலின் விலை தடாலடியாக குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது... விலை தடாலடியாக குறைய வாய்ப்பு!

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 264 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது... விலை தடாலடியாக குறைய வாய்ப்பு!

ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கான செலக்ட் டிராக் ஃபுல் டைம் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இதனால், எந்த ஒரு சவாலான இடங்களிலும், சாலைகளிலும் பயணிக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது... விலை தடாலடியாக குறைய வாய்ப்பு!

ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் டேஷ்போர்டு உள்ளிட்டவற்றில் மாறுதல் இருக்கும் என தெரிகிறது. 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யு-கனெக்ட் 4சி என்ஏவி கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது... விலை தடாலடியாக குறைய வாய்ப்பு!

இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் ரேங்லர் எஸ்யூவி ரூ.63.94 லட்சம் முதல் ரூ.68.94 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைத்து வந்தது. இதனைவிட சில லட்சங்கள் குறைவான விலையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜீப் ரேங்லர் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep has announced that the local assembly of the 2021 Wrangler has commenced in India.
Story first published: Tuesday, February 23, 2021, 17:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X