அதிக பவர்ஃபுல்லான Defender எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை கேட்டீங்கனா வாய பிளப்பீங்க!

Jaguar Land Rover நிறுவனம் அதிக பவர்ஃபுல்லான Defender எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அதிக பவர்ஃபுல்லான Defender எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை கேட்டீங்கனா வாய பிளப்பீங்க!

சொகுசு கார் உற்பத்தியாளரான Jaguar Land Rover, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் Defender எஸ்யூவி ரக காரில் 90 மற்றும் 110 ஆகிய இரு வேரியண்டுகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவ்விரு வேரியண்டுகளிலேயே மிக அதிக திறனை வெளிப்படுத்தும் வி8 எஞ்ஜினால் இயங்கக் கூடிய புதிய தேர்வை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக பவர்ஃபுல்லான Defender எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை கேட்டீங்கனா வாய பிளப்பீங்க!

இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தளப்பக்கத்தில் வி8 எஞ்ஜினால் இயங்கக் கூடிய Defender எஸ்யூவி கார் பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு ஆரம்ப விலையாக ரூ. 1.82 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வி8 எஞ்ஜின் கொண்ட டிஃபெண்டர் எஸ்யூவியின் standard மற்றும் Carpathian Edition ஆகிய இரு வேரியண்டுகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன.

அதிக பவர்ஃபுல்லான Defender எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை கேட்டீங்கனா வாய பிளப்பீங்க!

நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே மாறுபட்ட டிசைன் கொண்ட மாடலாக V8 எஞ்ஜினுடன் விற்பனைக்கு வந்திருக்கும் Defender உருவாக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, இதன் Carpathian Edition பிரத்யேகமாக Carpathian Grey நிறத்தாலும், கருப்பு நிறத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

அதிக பவர்ஃபுல்லான Defender எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை கேட்டீங்கனா வாய பிளப்பீங்க!

முற்றிலும் விநோத தோற்றத்தை வழங்கும் வகையிலேயே கருப்பு நிறம் காரின் ஹூட், ரூஃப் மற்றும் டெயில்கேட் ஆகியவற்றிற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன் சேடின் பாதுகாப்பு ஃப்லிமும் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், இந்த வி8 எஞ்ஜின் கொண்ட Defender அதிக திறனை வெளிப்படுத்தும் காராக மட்டுமின்றி அதிக கவர்ச்சியான தயாரிப்பாகவும் காட்சியளிக்கின்றது.

அதிக பவர்ஃபுல்லான Defender எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை கேட்டீங்கனா வாய பிளப்பீங்க!

இக்கவர்ச்சியான தோற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் ஆங்காங்கே வி8 எனும் சின்னம் காரின் உடல் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, நான்கு பைப்புகள் வால்பகுதியில், 22 இன்சிலான அலாய் வீல்கள் மற்றும் 15 இன்சிலான டிஸ்க் மற்றும் நீல நிற காலிபர்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதிக பவர்ஃபுல்லான Defender எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை கேட்டீங்கனா வாய பிளப்பீங்க!

தொடர்ந்து, அட்டகாசமான வசதிகளை வழங்கும் வகையில் 11.4 இன்சிலான தொடுதிரை காரின் கேபினுக்குள் வழங்கப்பட்டிருக்கின்றது. Defender எஸ்யூவியில் 5.0 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது Jaguar Land Rover நிறுவனத்தின் மிக அதிக திறன் கொண்ட மோட்டாராகும்.

அதிக பவர்ஃபுல்லான Defender எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை கேட்டீங்கனா வாய பிளப்பீங்க!

இது அதிகபட்சமாக 525 பிஎச்பி மற்றும் 625 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 8 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். மேலே கூறியதைப் போல் Defender குடும்பத்திலேயே மிக அதிக வேகமாக செல்லும் கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் இதன் டாப் ஸ்பீடு இருக்கின்றது. இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 240 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

அதிக பவர்ஃபுல்லான Defender எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை கேட்டீங்கனா வாய பிளப்பீங்க!

குறிப்பாக, வெறும் 5.2 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை இக்கார் எட்டிவிடும். முன்பு, Jaguar Land Rover நிறுவனம் Defender 90 காரில் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வை வழங்கியது. 2.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே இக்காரை நிறுவனம் வழங்கியது.

Most Read Articles

English summary
Jlr launches most powerful defender suv in india
Story first published: Friday, August 27, 2021, 19:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X