பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த ஓர் பிரபல நடிகர் பேன்சி நம்பருக்காக ரூ. 17 லட்சத்தைச் செலவழித்திருப்பது ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர், அண்மையில் லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல் பதிப்பு (Lamborghini Urus Graphite Capsule Edition) சொகுசு காரை டெலிவரி பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் பார்வையும் ஜூனியர் என்டிஆர் இன் பக்கம் திரும்பியது.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

ஏனெனில் அந்த அவ்வளவு அதிக விலைக் கொண்ட மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட சொகுசு கார் இதுவாகும். இதன் விலையும் மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஓர் காரை வாங்கியதன் காரணத்தினால் இந்திய வாகன உலகின் தலையங்கத்திலும் அவர் இடம் பிடித்தார். இந்த நிலையில் மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவல் ஜூனியர் என்டிஆர் குறித்து தற்போது வெளிவந்திருக்கின்றன.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது புதிய காருக்கான பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்திருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் கைரதாபாத் ஆர்டிஓ அதிகாரிகள் டிஎஸ் 09 எஃப்எஸ் 9999 (TS 09 FS 9999) எனும் எண்ணை ஏளம் விட்டிருக்கின்றனர்.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்த ஏலத்தில் பலர் பங்கு பெற்றிருக்கின்றனர். அதில் ஒருவராக ஜூனியர் என்டிஆரும் பங்கு பெற்றிருக்கின்றார். மிகவும் விறுவிறுப்பாக நடை பெற்ற ஏலத்தில் பலர் இந்த பேன்சி பதிவெண்ணை வாங்க லட்சக் கணக்கில் ஏலம் கேட்டனர்.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

அனைவரையும் மிஞ்சும் வகையில் ஜூனியர் என்டிஆர் அப்பதிவெண்ணை ரூ. 17 லட்சத்திற்கு ஏலம் கேட்டிருக்கின்றார். இதைத் தொடர்ந்து ஆர்டிஓ அதிகாரிகள் ஜூனியர் என்டிஆருக்கே அப்பதிவெண்ணை வழங்குவதாக அறிவித்தனர். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகையுமே மிரள வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

ஜூனியர் என்டிஆர் இடத்தில் இருக்கும் பல்வேறு கார்கள் 9999 எனும் பதிவெண்ணைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன. இவரின் தாத்தா என்டிஆர் (நந்தமுரி தரகா ராம ராவ்), தாத்தாவின் அப்பா தொடங்கி பலர் 9999 என்ற பதிவெண் கொண்ட கார்களை பயன்படுத்தி இருக்கின்றார். ஆகையால், தனக்கும் இந்த பதிவெண் மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டதாக முன்னதாக நடைபெற்ற நேர்காணல் நிகழ்வு ஒன்றில் ஜூனியர் என்டிஆர் கூறிந்தார்.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

இதன் அடிப்படையிலேயே தற்போது ரூ. 17 லட்சம் செலவில் பேன்சி பதிவெண்ணை அவர் வாங்கியிருக்கின்றார். இந்த பதிவெண் அண்மையில் வாங்கப்பட்ட லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல் பதிப்பு காருக்காக வாங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

இந்தியாவிலேயே லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல் பதிப்பு காரை வாங்கிய முதல் நபர் இவரே ஆவார். ஆகையால், இக்காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக இப்பதிவெண் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த கார் வழக்கமான உருஸ் எஸ்யூவியைக் காட்டிலும் 20 சதவீதம் அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

வழக்கமான லம்போர்கினி உருஸ் எஸ்யூவி இந்தியாவில் ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கிராஃபைட் கேப்ஸ்யூல் எடிசனில் மட்டுமின்றி பேர்ல் கேப்ஸ்யூல் எனும் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

இந்த எடிசனை அண்மையில் நடிகர் ரன்வீர் சிங் டெலிவரி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை அனைத்தும் எஞ்ஜின் விஷயத்தில் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. ஆனால், அணிகலன், சிறப்பம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் ஆகியவற்றில் சற்று வித்தியாசமானதாக காட்சியளிக்கின்றன.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

கம்பீரமான தோற்றம், கட்டிங்-எட்ஜ் டிசைன் ஆகியவற்றால் இந்த சொகுசு கார் தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களைக் கவர்ந்து வருகின்றது. இதுமட்டுமின்றி பல்வேறு கவர்ச்சிகரமான வசதிகளை இக்காருக்கு தயாரிப்பாளர் வழங்கி வருகின்றார். கூடுதல் சொகுசு வசதிகளையும், கூடுதல் அழகு சேர்ப்பையும் நிறுவனம் ஆப்ஷனலாக வழங்கி வருகின்றது.

பதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு!

உருஸ் எஸ்யூவி கார்களில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் பயன்படுத்தப்பட்ட இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பியையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் உச்சபட்சமாக மணிக்கு 305 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் என்பது உருஸ் எஸ்யூவியின் கூடுதல் சிறப்பு. இதேபோல், 12.8 செகண்டுகளுக்கு உள்ளாக பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jr ntr buys fancy number worth rs 17 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X