அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகமான லம்போர்கினி உருஸ் கிராபைட் காப்ஸ்யூல் காரை வாங்கியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள படத்தினையும், இந்த புதிய லம்போர்கினி காரில் அந்த அளவிற்கு அப்படி என்னென்ன வசதிகள் உள்ளன என்பதையும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். ரசிகர்களால் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் இவருக்கு நமது தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

மற்றொரு முன்னணி தெலுங்கு நடிகர் ராம்சரண் உடன் ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்கிற பிரம்மாண்ட படத்தில் நடித்துவரும் ஜூனியர் என்டிஆர், இதற்கிடையில் தான் இந்த லம்போர்கினி உருஸ் காரை முன்பதிவு செய்து டெலிவிரி எடுத்துள்ளார்.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

Image Courtesy: Automobili Ardent India/Instagram

மெகா ஸ்டாரிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன். அதில் தற்போது லம்போர்கினி உருஸ் கிராபைட் காப்ஸ்யூல் காரும் ஒன்றாக இணைந்து கொண்டது. இந்திய சந்தையில் மிக சமீபத்தில் தான் உருஸ் கிராபைட் காப்ஸ்யூல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

இந்திய வாடிக்கையாளரால் வாங்கப்பட்ட முதல் உருஸ் கிராபைட் காப்ஸ்யூல் கார் இதுதான். இந்த புகழுக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் சொந்தக்காரர் ஆகியுள்ளார். பெங்களூர் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இந்த லம்போர்கினி உருஸ் கார் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

அது ஹைதராபாத்தில் உள்ள மெகா ஸ்டாரின் வீட்டில் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. ஜூனியர் என்டிஆர் வாங்கியிருக்கும் காரும் கிராபைட் காப்ஸ்யூல் வெர்சனுக்கு உண்டான ஆரன்சியோ ஆர்கோஸுடன் நீரோ நோக்டிஸ் மேட் (லத்தீன் மொழிகள்) நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உருஸ் பேர்ல் காப்ஸ்யூல் எடிசன் உடன் மற்றொரு ஸ்பெஷல் எடிசனாக இணைந்து கொண்ட புதிய கிராபைட் காப்ஸ்யூஸ் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

இது லம்போர்கினி உருஸ் காரின் வழக்கமான விலையை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். உருஸ் பேர்ல் காப்ஸ்யூல் காருக்கும், புதிய உருஸ் கிராபைட் காப்ஸ்யூல் காருக்கும் இடையில் தோற்றத்தில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

உருஸ் பேர்ல் காப்ஸ்யூல் காரினை சமீபத்தில் தான் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வாங்கியிருந்தார். இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் அதி வேகமான லக்சரி எஸ்யூவிகளுள் ஒன்றாக விளங்கும் லம்போர்கினி உருஸ் அதன் கட்டிங்-எட்ஜ் டிசைனினால் பலரை கவர்ந்து விடுகிறது.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

அதுமட்டுமின்றி அதன் கம்பீரமான தோற்றமும் நம்மை வசீகரிக்கக்கூடியதாக உள்ளது. இந்த பெயிண்ட் உடன் கிட்டத்தட்ட இதே மாதிரி இருக்கும் மற்றொரு கருப்பு நிற பெயிண்ட் தேர்வையும் இந்த ஸ்பெஷல் எடிசன் காருக்கு லம்போர்கினி நிறுவனம் வழங்குகிறது.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

இந்த நிறங்களை வெவ்வேறு விதமான கலவையில் மொத்தம் 16 விதமாக உருஸ் கிராபைட் காப்ஸ்யூல் காரை லம்போர்கினி விற்பனை செய்கிறது. இவற்றுடன் கூடுதல் அழகு சேர்க்க கருப்பு நிறத்தில் பின்பக்க டிஃப்யூஸரையும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

இந்த ஸ்பெஷல் எடிசன் லக்சரி எஸ்யூவி காரில் நன்கு பெரியதாக 23 இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்பெஷல் எடிசனின் உட்புற கேபின் ஆனது அடர் அனோடைஸ் அலுமினியம் மற்றும் மேட் ஃபினிஷிங்கில் கார்பன் ஃபைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

அறுகோண தையல்கள் மற்றும் லெதர் உள்ளீடுகளுடன் அல்காண்ட்ரா இருக்கைகள் உருஸ் கிராபைர் காப்ஸ்யூல் காரில் வழங்கப்படுகின்றன. மற்றப்படி ஸ்டாண்டர்ட் உருஸ் எஸ்யூவி காரில் வழங்கப்படும் 4.0 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் தான் இந்த ஸ்பெஷல் எடிசன்களிலும் கொடுக்கப்படுகிறது.

அறிமுகமான சூட்டோடு புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கி போட்ட முன்னணி நடிகர்!! விலை ரூ.3 கோடியை தாண்டுது

இதனுடன் 8-ஸ்பீடு இசட்.எஃப் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. சுமார் 2.2 டன்களில் எடையை கொண்டிருந்தாலும், இந்த லம்போர்கினி சொகுசு எஸ்யூவி கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடலாம். இதன் டாப்-ஸ்பீடு 305kmph ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jr NTR Buys Lamborghini Urus Graphite Capsule Edition.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X