ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

இந்தியாவை சேர்ந்த ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தனது ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை வழங்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

இந்தியாவை சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜேஎஸ்டபிள்யூ குழுமம் (JSW Group) இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தற்போது புத்தாண்டு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் தனது ஊழியர்களுக்கு ஜேஎஸ்டபிள்யூ குழுமம் 3 லட்ச ரூபாயை வழங்கவுள்ளது. இந்த திட்டம் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

இந்தியாவை சேர்ந்த முன்னணி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் பணியாற்றும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஒன்றிய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் மானியங்களை வழங்கி வருகின்றன.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

தங்களது எலெக்ட்ரிக் வாகன கொள்கைகளின் கீழ் அரசுகள் இந்த சலுகைகளை வழங்கி கொண்டுள்ளன. இதே பாணியில் ஜேஎஸ்டபிள்யூ குழுமமும் தனது ஜேஎஸ்டபிள்யூ எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், பசுமை முயற்சியாக இந்த புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. பொதுவாக வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

இதன் காரணமாகவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் தயங்குகின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் முயற்சி மிக சிறப்பான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் 3 லட்ச ரூபாயை வழங்குவதால், அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது எளிமையான விஷயமாக இருக்கும்.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

இது இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும் ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை குறைந்து, பொருளாதார நிலை மேம்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

இதற்கிடையே 3 லட்ச ரூபாயை வழங்குவதுடன், ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தனது அனைத்து அலுவலகங்கள் மற்றும் பிளாண்ட்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என பிரத்யேகமாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் மற்றும் பார்க்கிங் இடவசதியையும் ஏற்படுத்தவுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் ஊழியர்கள் இவற்றை இலவசமாகவே பயன்படுத்தி கொள்ளலாம்.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

ஊழியர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் நோக்கம் என ஜேஎஸ்டபிள்யூ குழுமம் கூறியுள்ளது. இனி வரும் காலங்களில் இந்தியாவின் மற்ற நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கையை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

எனவே ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் நடவடிக்கை முன் மாதிரியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதுடன், பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சிக்கனமானவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் பெரிதாக செலவு ஆகாது.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

எனவே ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் நடவடிக்கை, அதன் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் அரசுகளின் நடவடிக்கைக்கும், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் முடிவு ஆதரவு அளிப்பதாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுடன், எத்தனால், சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் தற்போது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இந்திய கம்பெனி... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க!

அவரே ஹைட்ரஜன் கார் ஒன்றை சமீபத்தில் வாங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மாற்று எரிபொருட்களுக்கு மக்கள் மாற வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக அமைச்சர் நிதின் கட்காரி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இவர் மிக நீண்ட காலமாக மாற்று எரிபொருட்களுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

Most Read Articles
English summary
Jsw group will pay rs 3 lakh incentive to employees to buy an electric vehicle
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X