உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

விலையுயர்ந்த கார் மற்றும் காரில் வந்த இளைஞர்களைக் வனத்துறை அதிகாரிகள் கொத்தாக தூக்கியிருக்கின்றனர். இந்நிகழ்வுகுறித்த முழு விபரத்தையும் கீழே காணலாம், வாங்க.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான காலத்தில் பலர் வேலையை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக தொண்டு நிறுவனங்கள் சில உதவிகளை வழங்கி வருகின்றன. உணவு, அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் என பல்வேறு நிவாரணங்களை அவை மேற்கொண்டு வருகின்றன.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

Source: Starofmysore

இந்த மாதிரியான சூழ்நிலையில் உணவு வழங்கியதற்காக இளைஞர்கள் இருவர்மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ததற்காக இளைஞர்கள் மீது வனத் துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

இளைஞர்கள் காட்டில் வாழும் மானுக்கு உணவளித்திருக்கின்றனர். இதன் காரணத்தினாலேயே அவர்கள்மீது பண்டிபூர் புலிகள் காப்பக வன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். வன விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது என்பது விதியாகும்.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

எனவேதான் வன விலங்கு சரணாலயம் அல்லது தேசிய பூங்கா அல்லது காட்டு வழியாக பயணம் மேற்கொள்ளும் போது விலங்குகளுக்கு உணவளிக்க கூடாது என வன அதிகாரிகள் அறிவுறுத்துவர். இருப்பினும், பலர் இதனை புறக்கணித்து விடுகின்றனர்.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

உணவைக் கொடுப்பதைப் போல் கொடுத்து அவற்றுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவே பலர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர். மேலும், உணவைக் காட்டி அருகில் அழைத்து அவற்றை வேடிக்கை பார்ப்பதற்காகவும் சிலர் இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

இது சில நேரங்களில் வீண் விபரீதத்தில் போய் முடிகின்றது. மனித-விலங்கு மோதல் அல்லது பார்வையாளர்கள் கொடுக்கும் உணவால் விலங்குககள் உடல் உபாதைக்கு உள்ளாவது போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டே விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

இந்த அறிவுறுத்தல்களை வன பகுதிக்குள் நுழையும்போது அறிவுரையாகவும், படங்கள் வாயிலாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனை மீறும் வகையிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் வந்த இளைஞர்கள் மானுக்கு உணவளித்திருக்கின்றனர்.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

இதுகுறித்து தகவலறிந்த கர்நாடகா புண்டிபூர் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் அந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். மானுக்கு உணவை வழங்கியவர் ஓர் பத்திரிக்கையாளர் என கூறப்படுகின்றது. அவர் புதுதில்லியைச் சேர்ந்தவர் ஆவார்.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

தேசிய சேனல் ஒன்றில் பணியாற்றும் இவர் கடந்த 3ம் தேதி அன்று காலை 11 மணியளவில் பண்டிபூர் வழியாக ஊட்டி வந்திருக்கின்றார். அப்போதே மானுக்கு உணவளிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கின்றார். இதுகுறித்த புகைப்படமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

இந்த படத்தின் அடிப்படையிலேயே பத்திரிக்கையாளர் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். மானுக்கு உணவளிப்பதுகுறித்த புகைப்படம் பத்திரிக்கையாளர் எடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்படத்தை எதிர் புறத்தில் வந்த மற்றுமொரு வாகன ஓட்டி எடுத்திருக்கின்றார்.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

அப்படமே வைரலாகி, பத்திரிக்கையாளர்மீது நடவடிக்கைக் காரணமாக அமைந்துள்ளது. நடவடிக்கையின்கீழ் பத்திரிக்கையாளரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கின்றது. இதன் பின்னர் சில அறிவுறுத்தல்களுடன் அவர்களை வனத்துறை அதிகாரிகள் விடுத்திருக்கின்றனர்.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

வன விலங்குகளுக்கு மனிதர்கள் உணவளிப்பதால் சில விலங்குகள் தேடிச் சென்று உணவை உண்பதற்கு பதிலாக சாலையோரங்களிலேயே நிற்க தொடங்கிவிடுகின்றன. பயணிகளிடம் உணவுக்கு நிற்கும் நிலைக்கு அவை தள்ளப்படுகின்றன. ஆகையால், அடர் காட்டுக்குள் இருக்க வேண்டிய விலங்குகள் எல்லாம் தற்போது சாலையில் தஞ்சமடைய தொடங்கியிருக்கின்றன.

உணவு கொடுத்தது ஒரு குத்தமா? விலையுயர்ந்த காருடன் இளைஞர்களை தூக்கிய அதிகாரிகள்! நடவடிக்கைக்கான முழு காரணம்!

இதன் விளைவாக சில அதிக வேகத்தில் வரும் வாகனங்களில் சிக்கி பரிதாபமாக இறக்கின்றன. இதுமாதிரியான அவலங்களை நீக்கும் பொருட்டே வனத்துறையினர் விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என கூறுகின்றனர். இருப்பினும், பலர் அதனை மீறி உணவளிக்கின்றனர். இந்த மாதிரியான செயலைத் தடுக்கும் பொருட்டு இணையத்தில் வைரலாகிய புகைப்படத்தின் அடிப்படையில் வனத்துறையினர் பத்திரிக்கையாளர் மீது நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka forest department takes action against mahindra xuv500 driver for feeding wild animal
Story first published: Saturday, August 7, 2021, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X