நம்பவே முடியல! இவ்ளோ அதிகமான விலையுள்ள காரையா அந்த நடிகர் வாங்கினார்!! விலையை கேட்டு வாயடைத்த மக்கள்...

லம்போர்கினி நிறுவனத்தின் சொகுசு கார்களில் ஒன்றான உருஸ் எஸ்யூவியை பிரபல நடிகர் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காரோட விலையை கேட்டு வாயடைத்து போன மக்கள்... உச்சபட்ச விலையுள்ள சொகுசு காரை பிரபல நடிகர்...

லம்போர்கினி நிறுவனத்தின் அதி-திறன் மற்றும் மிக அதிக விலைக் கொண்ட காராக உருஸ் எஸ்யூவி இருக்கின்றது. இந்த காரையே பிரபல நடிகர் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்திக் ஆர்யன் இவரே லம்போர்கினி உருஸ் காரை வாங்கியவர் ஆவார்.

காரோட விலையை கேட்டு வாயடைத்து போன மக்கள்... உச்சபட்ச விலையுள்ள சொகுசு காரை பிரபல நடிகர்...

கார்த்திக் ஆர்யன் வாங்கியிருக்கும் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த உச்சபட்ச விலைக் கொண்ட காரையே கார்திக் ஆர்யன் தற்போது சொகுசு பயணங்களுக்காக வாங்கியிருக்கின்றார்.

காரோட விலையை கேட்டு வாயடைத்து போன மக்கள்... உச்சபட்ச விலையுள்ள சொகுசு காரை பிரபல நடிகர்...

லம்போர்கினி நிறுவனம் உருஸ் எஸ்யூவி காரை 2018ம் ஆண்டிலேயே இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காரை இந்தியாவின் பல முன்னணி நடிகர்கள் பயன்பாட்டில் வைத்திருக்கின்றனர். சௌந்தர்யா ரஜினிகாந்த், ரன்வீர் சிங், ரோஹித் ஷெட்டி, முகேஷ் அம்பானி என முக்கிய பிரபலங்கள் பலர் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர்.

காரோட விலையை கேட்டு வாயடைத்து போன மக்கள்... உச்சபட்ச விலையுள்ள சொகுசு காரை பிரபல நடிகர்...

இந்த நிலையிலேயே, உருஸ் எஸ்யூவி காரை பயன்படுத்தி வரும் பிரபலங்களின் வரிசையில் கார்திக் ஆர்யன் தற்போது இணைந்துள்ளார். மேலும், தனது லம்போர்கினி உருஸ் காருக்கு கார்த்திக் ஆர்யன் ஃபேன்சியான நம்பரையும் வாங்கியிருக்கின்றார். எம்எச் 02 எஃப்என் 9595 எனும் பதிவெண்ணே கார்த்திக் ஆர்யன் உருஸ் காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

காரோட விலையை கேட்டு வாயடைத்து போன மக்கள்... உச்சபட்ச விலையுள்ள சொகுசு காரை பிரபல நடிகர்...

லம்போர்கினி நிறுவனம் உருஸ் எஸ்யூவி காரில் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

காரோட விலையை கேட்டு வாயடைத்து போன மக்கள்... உச்சபட்ச விலையுள்ள சொகுசு காரை பிரபல நடிகர்...

இதே திறன் வசதிக் கொண்ட பென்ட்லீ பென்டேகா, ஆடி ஆர்எஸ் க்யூ8, போர்ஷே கயன்னே உள்ளிட்ட கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இவற்றில் இருக்கக்கூடியதைக் காட்டிலும் உருஸ் காரில் இருக்கும் எஞ்ஜினே அதிகம் திறனை வெளிப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றது.

காரோட விலையை கேட்டு வாயடைத்து போன மக்கள்... உச்சபட்ச விலையுள்ள சொகுசு காரை பிரபல நடிகர்...

லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் மணிக்கு 305 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இக்கார் 3.6 செகண்டுகளிலேயே மணிக்கு 200கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இத்தகைய அதி திறன் வசதியையே இக்கார் பெற்றிருக்கின்றது. எனவேதான், அதிக லக்சூரி மற்றும் சூப்பர் திறன் கொண்ட காரைத் தேடுவோர் மத்தியில் லம்போர்கினி உருஸ் அதிக பிரபலமானதாக காட்சியளிக்கின்றது.

இந்த காரில் சப்பியா, டெர்ரா, நெவே, ஈகோ எனும் நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றம் மிகவும் கவர்ச்சியான ஸ்டைலில் இருக்கின்றது. இதன் காரணத்தினாலும் இக்காருக்கு இந்திய திரைப்பிரபலங்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற காரணமாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kartik Aryan Buys 3 Crore Rupee Worthable Lamborghini Urus SUV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X