விலையுயர்ந்த பென்ஸ் காரை வலை விரித்து தேடும் கேரள போலீஸ்... சிக்கினா விடவே மாட்டாங்க போலிருக்கே! என்ன காரணம்?

விலையுயர்ந்த கார் பென்ஸ் கார் ஒன்றை கேரள போலீஸ் வலை விரித்து தேட ஆரம்பித்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விலையுயர்ந்த பென்ஸ் காரை வலை விரித்து தேடும் கேரள போலீஸ்... சிக்கினா விடவே மாட்டாங்க போலிருக்கே! என்ன காரணம்?

போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக கேரளா மோட்டார் வாகனத் துறை போர்க்கொடு தூக்கி வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே கடந்த காலங்களில் சில அதிரடி சம்பவங்கள் அம்மாநிலத்தில் அரங்கேறின. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், வீட்டின் கராஜிக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட காரை இத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விலையுயர்ந்த பென்ஸ் காரை வலை விரித்து தேடும் கேரள போலீஸ்... சிக்கினா விடவே மாட்டாங்க போலிருக்கே! என்ன காரணம்?

இதேபோன்று, வைரலாகிய வீடியோவின் அடிப்படையில் விதிமீறிய வாகன ஓட்டிகளை வீடு தேடிச் சென்று, அவர்களையும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் கொத்தாக தூக்கினர். அண்மையில்கூட தவறான பாதையில் பயணித்த காரணத்திற்காக தனியார் பேருந்து ஒன்றை ஓட்டுநர் ஒருவருடன் தூக்கினர்.

விலையுயர்ந்த பென்ஸ் காரை வலை விரித்து தேடும் கேரள போலீஸ்... சிக்கினா விடவே மாட்டாங்க போலிருக்கே! என்ன காரணம்?

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே கேரள மோட்டார் வாகனத் துறையினர் வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ 200 மாடல் சொகுசு காரை தூக்குவதற்காக ஸ்கெட்ச் போட்டு வருகின்றனர். இந்த வாகனத்தில் பதிவெண்களுக்கு பதிலாக 'ஜஸ்ட் மேரிட்' எனும் ஆங்கில வார்த்தைகள் கொண்ட பலகைப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

விலையுயர்ந்த பென்ஸ் காரை வலை விரித்து தேடும் கேரள போலீஸ்... சிக்கினா விடவே மாட்டாங்க போலிருக்கே! என்ன காரணம்?

இதன்காரணத்தினாலேயே இந்த வாகனத்தை தேடும் பணியில் மோட்டார் வாகனத் துறையினர் களமிறங்கியிருக்கின்றனர். இந்த வார்த்தைக்கு இப்போதே கல்யாணம் என்பதே தமிழ் பொருள் ஆகும். இந்த வார்த்தையை நம்பர் பிளேட்டிற்கு பதிலாக பயன்படுத்தியிருப்பதன் காரணத்தினால் தற்போது சிக்கலில் சிக்கியிருக்கின்றது.

விலையுயர்ந்த பென்ஸ் காரை வலை விரித்து தேடும் கேரள போலீஸ்... சிக்கினா விடவே மாட்டாங்க போலிருக்கே! என்ன காரணம்?

கார்குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து பெரும் சர்ச்சை எழும்பியது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் இப்போது இக்காரை தேடி வருவதாக அறிவித்திருக்கின்றனர். ஆகையால், விரைவில் இந்த விலையுயர்ந்த சொகுசு காரை பறிமுதல் செய்து, விதிமீறலுக்கான அபராதத்தை அதிகாரிகள் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலையுயர்ந்த பென்ஸ் காரை வலை விரித்து தேடும் கேரள போலீஸ்... சிக்கினா விடவே மாட்டாங்க போலிருக்கே! என்ன காரணம்?

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, இந்த சொகுசு கார் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தது என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், விரைவில் போலீஸார் இக்காரை பறிமுதல் செய்துவிடுவர் என நம்பப்படுகின்றது. வாகனம்குறித்த தகவல்களைச் சேகரிக்கும் பணியில் தற்போது போலீஸார் ஈடுபட்டிருக்கின்றனர். எனவேதான் விரைவில் இக்கார் பறிமுதல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலையுயர்ந்த பென்ஸ் காரை வலை விரித்து தேடும் கேரள போலீஸ்... சிக்கினா விடவே மாட்டாங்க போலிருக்கே! என்ன காரணம்?

அண்மையில் இதேபோன்று ஓர் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ 200 கார் டோல் கட்டணம் செலுத்துவதில் முறைகேடாக செயல்பட்டது. இந்த குற்றத்திற்காக போக்குவரத்துத்துறையினர் காரை சுமார் 20 நாட்கள் வரை பிணை எடுத்தனர். இதன் பின்னரே அபராதத்துடன் கார் உரிமையாளரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

விலையுயர்ந்த பென்ஸ் காரை வலை விரித்து தேடும் கேரள போலீஸ்... சிக்கினா விடவே மாட்டாங்க போலிருக்கே! என்ன காரணம்?

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மற்றுமொரு பென்ஸ் சொகுசு கார் ஜஸ்ட் மேரிட் எனும் வாசகத்தைக் கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. மோட்டார் வாகன விதியின்படி மிகப்பெரிய குற்றமாகும். வாகனத்தில் பொருத்தப்படும் பதிவெண்கள் மாற்றாக வேறொரு நம்பர் பிளேட்டையோ அல்லது இனம் காண முடியாத பிற பலகையைப் பயன்படுத்துவதோ உச்சபட்ச தண்டனைக்குரிய தவறாகும்.

விலையுயர்ந்த பென்ஸ் காரை வலை விரித்து தேடும் கேரள போலீஸ்... சிக்கினா விடவே மாட்டாங்க போலிருக்கே! என்ன காரணம்?

இந்த காரணத்தினால்தான் இந்த காரை தேடும் வேட்டையை கேரள மோட்டார் வாகனத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதுபோன்ற விதிமீறல்களைத் தவிர்க்கும் நோக்கிலேயே புதிய உயர் பாதுகாப்பு வசதிக் கொண்ட நம்பர் பிளேட்ட திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களாக இந்த புதிய விதிக்கு மாறி வருவதும் குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: 2 மற்றும் 3 வது படத்தைத் தவிர பிற அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டை ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala MVD Planning To Hunt Who Use Just Married Plate Instead Of Registration No In Car. Read In Tamil.
Story first published: Thursday, February 11, 2021, 17:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X