கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

கூகுள் மேப்பை அதிகம் நம்பக் கூடாது என்பதை வெளிக்காட்டக் கூடிய ஓர் சம்பவம் நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

கூகுள் மேப்பை பார்த்தவாறு சென்ற ஓர் குடும்பத்தினர் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எப்படி நடந்தது இந்த சம்பவம் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

வழி தெரியாத பயணங்களுக்கு எல்லாம் வழிகாட்டி நண்பனாக இருக்கிறது கூகுள் மேப். தொழில்நுட்பத்தின் ஓர் மிகச் சிறந்த வரபிரசாதம் என்று கூட இதனைக் கூறலாம். அந்தளவிற்கு வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய ஓர் செயலியாக கூகுள் மேப் இருக்கின்றது.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

இந்த செயலியை பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்களை பார்ப்பது மிகவும் கடினம். உலகின் அனைத்து மூலை முடுக்குகளையும் கண்டறிந்து செல்ல இச்செயலி உதவுகிறது. இத்தகைய ஓர் பயனுள்ள செயலியே எங்களின் பயணத்தை மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளிவிட்டதாக கேரளாவைச் சேர்ந்த ஓர் குடும்பத்தினர் வேதனைத் தெரிவித்திருக்கின்றனர்.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

காட்டுக்குள் சிக்கிய வேகன்ஆர் காரின் படம்.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் நவாப். இவர் மிக சமீபத்தில் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான மூணாறு சென்றிருக்கின்றார். அங்கு தேவிகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கிய மருத்துவ குடும்பத்தினர், அங்கிருந்து அருகில் இருக்கும் வட்டவாடா கிராமத்தில் உள்ள மலை உச்சிக்கு செல்ல திட்டமிட்டனர்.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

மிகவும் அழகான மலைப்பாதைக் கொண்ட பகுதி இதுவாகும். இந்த பகுதி தனக்கு புதியது என்பதால் மருத்துவர் கூகுள் மேப்பை பார்த்தவாறு சென்றிருக்கின்றார். அது காட்டிய வழியைப் பின் தொடர்ந்தவாறே அவர் தனது பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார். அவ்வாறு பயணத்தைத் தொடர்ந்தபோதே ஓர் கரடு முரடான காட்டுப் பாதையில் அவர் காருடன் சிக்கியிருக்கின்றார்.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

ஆம், கூகுள் மேப் நவாப் குடும்பத்தினரை பாதையே இல்லாத ஓர் காட்டுக்குள் பயணிக்க வழி நடத்தியிருக்கின்றது. இதை சற்று உணராத நவாப் அது காட்டிய அனைத்து வழிகளையும் பின் தொடர்ந்து சென்றிருக்கின்றார். ஒரு கட்டத்தில் கார் மேலே செல்ல முடியாத வகையில் ஓர் சகதியில் சிக்கியது. அப்போதுதான் தாங்கள் வழி தவறி வந்துவிட்டோம் என்பதையே உணர்ந்திருக்கின்றனர்.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

இதையடுத்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் உதவியை நவாப் நாடியிருக்கின்றார். தகவல் கொடுத்தும் மீட்புப் பணியினரால் நவாப் குடும்பத்தினை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அது ஓர் மலைப் பகுதி என்பதால் செல்போனுக்கான சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. ஆகையால் மீட்புப் படையினரால் நவாப் குடும்பத்தினரைக் கண்டுபிடிப்பதில் பெருத்த சிக்கல் ஏற்பட்டது.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

அதேசமயம், அடர்ந்த காட்டுக்குள் நவாப் குடும்பத்தினர் சிக்கியிருந்தனர். இது மீட்புப் பணியினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இதன் பின்னர் மலை உச்சிக்கு சென்று வெளிச்சத்தைக் காட்டச் சொல்லி மருத்துவர் சிக்கியிருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

நவாப் குடும்பம் சிக்கியிருந்தது ஓர் அடர்ந்த காடு மட்டுமில்லைங்க அது யானைகள் மற்றும் புலிகள் அதிகம் நடமாடும் பகுதியாகும். ஆனால், இவற்றால் நவாப் குடும்பத்தினர் எந்த பிரச்னையும் சந்திக்கவில்லை என்பது மகிழ்ச்சியான தகவலாக உள்ளது. மேலும், குழுவினர் பயன்படுத்தி மாருதி வேகன்ஆர் காரும் பத்திரமாக மீட்கப்பட்டது.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

ஒன்பது பேர் அடங்கிய பாதுகாப்பு குழுவினரே நவாப் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இதுபோன்று புதிய பகுதிகளுக்கு பயணிக்கும்போது தொழில்நுட்பத்துடன் சேர்த்து உள்ளூர் வாசிகளின் உதவியை நாடுவதும் மிக சிறந்தது என்பதை விளக்கும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளது. கூகுள் மேப்பைப் பார்த்தவாறு சென்று வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல.

கூகுள் மேப்பை ரொம்ப நம்பாதீங்க... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா இனி அந்த ஆப்-பை பயன்படுத்தவே மாட்டீங்க!!

Source: Manoramaonline

இதற்கு முன்னதாகவும் இதுபோன்று பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஏன், ஒரு சிலர் தங்களின் உயிர்களை தவறான கூகுல் மேப் வழிகாட்டுதலால் இழந்திருக்கின்றனர். ஆகையால், ஏதேனும் சந்தேகம் ஏற்படும் வகையில் கூகுள் மேப் வழிகாட்டுமானால் வழிபோக்கர்கள் அல்லது உள்ளூர்வாசிகளிடம் ஒரு முறை விசாரித்துவிடுவது நல்லது என்பதே எங்களின் கருத்தாகும். மேலும், தற்போது கேரளாவில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவத்தில் வேகன்ஆர் காருக்கும், அதில் பயணித்தவர்களுக்கும் எந்தவொரு காயமோ, சிறு கீரல்களோகூட ஏற்படவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala tourists lost their way after using google map here is full details
Story first published: Tuesday, August 10, 2021, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X