இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

கியா நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையில் ஓர் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

தென் கொரியா நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம் கியா. இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை நாட்டில் 3 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனைச் செய்து அசாத்திய சாதனையைப் படைத்துள்ளது, கியா.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

இதனால், நாட்டின் மிக வேகமான கார் உற்பத்தியாளர் என்ற பெயரை கியா பெற்றிருக்கின்றது. நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கால் தடம் பதித்த முதல் ஆண்டிலேயே 2 லட்சம் என்ற விற்பனை இலக்கை எட்டியிருந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக இந்தியாவில் மிக வேகமாக வளர்ச்சியைப் பெறும் காராக கியா மாறியிருக்கிறது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

இந்த நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. கியா 2019ம் ஆண்டு செல்டோஸ் எஸ்யூவி காரை அறிமுகம் செய்ததன் வாயிலாகவே நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. இந்த மிக குறுகிய காலத்திலேயே தற்போது மூன்று லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை என்ற இலக்கை கியா எட்டியுள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

இந்தியாவில் கியா நிறுவனம் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் சொகுசு எம்பிவி ஆகிய கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய கார் மாடல்களுக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

இந்த வரவேற்பை கார்னிவல் பக்கம் லேசாக திருப்ப வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட கியா கார் விற்பனையாளர்கள் ரூ. 3.5 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையை அறிவித்துள்ளனர். இந்த தள்ளுபடியால் இன்னோவாவைக் காட்டிலும் குறைந்த விலைக்கு கார்னிவல் சொகுசு கார் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

டொயோட்டா இன்னோவாவின் உயர்நிலை வேரியண்ட் ரூ. 21.8 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதைவிட குறைவான விலையிலேயே கார்னிவல் எம்பிவியின் ஆரம்ப நிலை வேரியண்ட் இந்தியாவில் தள்ளுபடியின் காரணமாக விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

இதுமாதிரியான சிறப்பு சலுகை மற்றும் செலவழிக்கும் பணத்திற்கு ஏற்ற சிறப்பம்சங்கள் ஆகியவற்றுடன் கியா கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் கியாவின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

இதன் விளைவாக நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களையே ஓரங்கட்டும் வகையில் விற்பனையில் புதிய சாதனையை தற்போது படைத்திருக்கின்றது, கியா. தற்போது விற்பனையாகியிருக்கும் 3 லட்சம் யூனிட் கியா கார்களில் 66 சதவீதம் விற்பனையை செல்டோஸ் எஸ்யூவி பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

இதனால் நிறுவனத்தின் மாபெரும் நாயகனாக செல்டோஸ் தென்படுகின்றது. இதற்கு அடுத்ததாக சொனெட் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடல் இருக்கின்றது. ஒட்டுமொத்த விற்பனையில் இந்த கார் 32 சதவீதம் எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது. இவற்றைக் காட்டிலும் கியா கார்னிவல் சொகுசு காருக்கு இந்தியாவில் மிக குறைவாக வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

இதுவரை , ஒட்டுமொத்தாக கார்னிவல் எம்பிவி 7310 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. எனவேதான் இதன் விற்பனையைச் சூடுபிடிக்க செய்ய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட சில டீலர்கள் குறிப்பிட்ட கார்னிவல் எம்பிவி காரின் தேர்வுகளுக்கு ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடி விலையை அறிவித்திருக்கின்றனர்.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

இதுமட்டுமின்றி தற்போது தனது நிறுவனத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையில் தனது விற்பனைதாரர்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் கியா களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையில், 300 முதல் 360 டச் பாயிண்டுகளை புதிதாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

தற்போது நாட்டின் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே கியாவின் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இத்துடன், 3ம் மற்றும் நான்காம் நிலை நகர்புறப் பகுதிகளிலும் தனது ஷோரூம்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகளுடன், தனது தயாரிப்புகளை மேலும் கவர்ச்சியானதாக மாற்றும் முயற்சியிலும் கியா களமிறங்கியிருக்கின்றது. அந்தவகையில், அண்மையில் நிறுவனத்தின் சின்னம் (லோகோ) மாற்றப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இது வரலாற்று சிறப்புமிக்க சாதனை... இந்தியாவில் விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியது கியா!

வாகனங்களில் மட்டுமின்றி விற்பனையாளர்களும் புதிய சின்னத்திற்கு ஏற்ப தங்களின் விற்பனையகத்தை மாற்றியிருக்கின்றனர். இந்த யுக்தியும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles

English summary
Kia achieves 3 lakh units sales milestone in india
Story first published: Friday, August 6, 2021, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X