பொங்கல் கொண்டாட்டம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

கியா கேரன்ஸ் எம்பிவி காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் கார் வெகு சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இது இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 4வது கார் ஆகும். இதற்கு முன்னதாக செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய கார்களை கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்த அனைத்து கார்களும் தங்களது செக்மெண்ட்டில் மிக சிறப்பாக விற்பனையாகி கொண்டுள்ளன. இந்த வரிசையில் கியா கேரன்ஸ் காரும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா கேரன்ஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதால், கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போல் இதுவும் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

கியா கேரன்ஸ் கார் 2022ம் ஆண்டின் தொடக்கத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வரும் மார்ச் மாதத்திற்கு உள்ளாக கியா கேரன்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடலாம். ஆனால் கியா கேரன்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

எனினும் கியா கேரன்ஸ் காருக்கு எப்போது முன்பதிவுகள் தொடங்குகின்றன? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்படி கியா கேரன்ஸ் காருக்கு வரும் ஜனவரி 14ம் தேதியில் இருந்து முன்பதிவுகள் ஏற்கப்படவுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கியா நிறுவனம் இன்றுதான் (டிசம்பர் 30) வெளியிட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி கியா கேரன்ஸ் காருக்கு முன்பதிவு தொடங்கப்படவிருப்பதால், வாடிக்கையாளர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

கியா கேரன்ஸ், எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஆனால் எஸ்யூவி ரக கார்களின் டிசைன் அம்சங்களையும் இது பெற்றுள்ளது. கியா கேரன்ஸ் காரில், எல்இடி ஹெட்லேம்ப்களும் மற்றும் பகல் நேர விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஸ்போர்ட்டியான பம்பர்கள், ட்யூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவற்றையும் கியா கேரன்ஸ் கார் பெற்றுள்ளது.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

பின் பகுதியை பொறுத்தவரையில், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் எல்இடி பட்டை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உட்புறத்தை பொறுத்தவரையில், கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போல், கேரன்ஸ் எம்பிவி காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பெரிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மிகவும் முக்கியமானது.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இதனுடன் அனைத்து வகையான கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்படவுள்ளது. தற்போது கார்களில் வேகமாக பிரபலமாகி வரும் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தையும் கியா கேரன்ஸ் பெற்றுள்ளது. அதேபோல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவையும் இந்த காரின் முக்கியமான வசதிகளாக உள்ளன.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

அதேபோல் கேரன்ஸ் எம்பிவி காரை கியா நிறுவனம் மிகவும் பாதுகாப்பானது என கூறியுள்ளது. ஏனெனில், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்சி, ஹில்-ஸ்டார்ட் அஸிஸ்ட், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் கியா கேரன்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், 115 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். இதுதவிர 140 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் கியா கேரன்ஸ் எம்பிவி கார் பெற்றுள்ளது.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7 ஸ்பீடு டிசிடி தேர்வுகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்து எடுக்கலாம். அத்துடன் 115 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் கியா கேரன்ஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

ஆவலா வெயிட் பண்றோம்... Kia Carens காருக்கு புக்கிங் தொடங்கும் தேதி அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஒட்டுமொத்தத்தில் கவர்ச்சிகரமான டிசைன், அட்டகாசமான வசதிகள், அருமையான பாதுகாப்பு, பல்வேறு வகையான இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகள் என வாடிக்கையாளர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் எம்பிவி காராக கியா கேரன்ஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 30, 2021, 18:36 [IST]
English summary
Kia carens mpv bookings to open on january 14 check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+