இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

கியா கார்னிவல் காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இதற்கு உலகளாவிய அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறைதான் முக்கியமான காரணமாக உள்ளது. இதன் காரணமாக கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விற்பனை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

எனினும் நடப்பாண்டு நவம்பர் மாதம் அனைத்து கார்களும் விற்பனையில் தடுமாறவில்லை. ஒரு சில கார்கள் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதில், கியா கார்னிவல் காரும் ஒன்று. கியா நிறுவனம் நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் 636 கார்னிவல் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

கியா கார்னிவல் விலை உயர்ந்த கார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட கார் ஒன்று இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியிருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம்தான். அதுவும் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியுடன் இந்த விற்பனை எண்ணிக்கையை கியா கார்னிவல் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

கியா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 400 கார்னிவல் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 636 ஆக உயர்ந்துள்ளது. இது 59 சதவீத வளர்ச்சியாகும். இங்கே சுவாரஸ்யமான மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். வருடாந்திர ரீதியை போல், மாதாந்திர ரீதியிலும் கியா கார்னிவல் சரியாக 59 சதவீத வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

கியா நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதமும் 400 கார்னிவல் கார்களைதான் விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது. எனவே மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் கியா கார்னிவல் 59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடன் மட்டுமே கியா கார்னிவல் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

அது 2.2 லிட்டர், டர்போசார்ஜ்டு இன்லைன்-4 டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 200 பிஎஸ் பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 6 சீட்டர், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் வேரியண்ட்களில் கியா கார்னிவல் கார் கிடைக்கிறது.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

இந்திய சந்தையில் கியா கார்னிவல் காருக்கு நேரடி போட்டியாளர் என எந்த மாடலுமே இல்லை. எனினும் மஹிந்திரா எக்ஸ்யூவி700, டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் போன்ற கார்களை கியா கார்னிவல் காரின் மறைமுக போட்டியாளர்களாக கருதலாம். அத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரையும் கியா கார்னிவல் காரின் போட்டியாளராக குறிப்பிட முடியும்.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

கியா நிறுவனம் தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய 3 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கேரன்ஸ் என்ற புத்தம் புதிய எம்பிவி காரை கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த புதிய எம்பிவி காரின் அறிமுகத்தை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

கியா தற்போது விற்பனை செய்து வரும் செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய கார்கள் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை. அதே நேரத்தில் கார்னிவல் கார் சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக கியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள கேரன்ஸ் காரும் கூட எம்பிவி ரகத்தை சேர்ந்தது. கியா நிறுவனம் எஸ்யூவி மற்றும் எம்பிவி செக்மெண்ட்களில் கவனம் செலுத்துவதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

இதுவும் கூட கியா நிறுவனம் ஏற்கனவே நமக்கு தெரிவித்துள்ள சங்கதிதான். இந்தியாவின் எஸ்யூவி மற்றும் எம்பிவி செக்மெண்ட்களில் கவனம் செலுத்த போகிறோம் என்பதை கியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு ஏற்ப கியா நிறுவனம் தற்போது செயல்பட்டு வருகிறது. இதுதவிர இந்தியாவின் யூஸ்டு கார் சந்தையிலும் கியா நிறுவனம் விரைவில் நுழையவுள்ளது.

இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியிலும் இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? உண்மையிலேயே கியா கார்னிவல் வேற லெவல்!

இந்தியாவில் மாருதி சுஸுகி போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே யூஸ்டு கார் சந்தையில் செயல்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக கியா நிறுவனமும் இந்த தொழிலில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. இந்தியாவில் தற்போதே யூஸ்டு கார்களுக்கு அதிக தேவை இருக்கிறது. வரும் காலங்களில் இது இன்னும் அதிகமாகலாம் என்பதால், கியா நிறுவனம் யூஸ்டு கார் சந்தையிலும் நுழைய முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 15, 2021, 9:59 [IST]
English summary
Kia carnival mpv sales increased by 59 per cent in november 2021 check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+