ரெண்டு வருசம்தான் ஆகுது! விற்பனையில் கெத்து காட்டுது! Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

Kia நிறுவனம் இந்தியாவில் மிக ஆழமாக காலூன்றியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனத்தின் Seltos எஸ்யூவி கார் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியிருக்கின்றது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்கலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரெண்டு வருசம்தான் ஆகுது... விற்பனையில் கெத்து காட்டுது... Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

தென் கொரியாவைச் சேர்ந்த Kia நிறுவனம் இந்தியாவில் மிக ஆழமாக காலூன்றியிருக்கின்றது. ஆம், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இதனால், நாட்டின் மிக வேகமாக வளர்ச்சியடையும் கார் உற்பத்தி நிறுவனமாக அது வளர்ச்சியடைந்துள்ளது.

ரெண்டு வருசம்தான் ஆகுது... விற்பனையில் கெத்து காட்டுது... Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

Kia நிறுவனத்தின் Seltos கார் தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 2 லட்சம் யூனிட் வரை Kia Seltos கார் மாடல் நாட்டில் விற்பனையாகியிருக்கின்றது.நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இரண்டு ஆண்டுகளே ஆகின்றன.

ரெண்டு வருசம்தான் ஆகுது... விற்பனையில் கெத்து காட்டுது... Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

இதற்குள்ளாக நாட்டில் ஒற்றை மாடலை மட்டும் இத்தனை அதிக யூனிட்டில் Kia விற்பனைச் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. Seltos இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இதையே நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து தனது முதல் காராக நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ரெண்டு வருசம்தான் ஆகுது... விற்பனையில் கெத்து காட்டுது... Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

அறிமுகமானதில் இருந்து தற்போது வரை இக்காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது நாட்டில் 2 லட்சம் யூனிட் விற்பனையைக் கடந்து இக்கார் விற்பனையாகிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக சமீபத்தில் இந்நிறுவனம் நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சம் வாகனங்களை விற்பனைச் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

ரெண்டு வருசம்தான் ஆகுது... விற்பனையில் கெத்து காட்டுது... Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

அதற்குள்ளாக Kia Seltos கார்கள் இரண்டு லட்சத்தை தாண்டி அமோக விற்பனையைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. Kia-வின் ஒட்டுமொத்த விற்பனையில் Seltos எஸ்யூவி மட்டும் 66 சதவீத பங்கினைக் கொண்டிருக்கின்றது.

ரெண்டு வருசம்தான் ஆகுது... விற்பனையில் கெத்து காட்டுது... Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

இந்த 66 சதவீதத்தில் பெருவாரியாக டாப்-எண்ட் (உயர் நிலை) வேரியண்டுகளே அதிகம் விற்பனையாகி வருகின்றன. ஆமாங்க, அதிக விலைக் கொண்ட உயர் நிலை Kia Seltos தேர்வுகளுக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. 58 சதவீதம் உயர் நிலை வேரியண்டுகளுக்கும், 35 சதவீதம் தானியங்கி வேரியண்டுகளுக்கும் இந்தியர்கள் பேராதரவு வழங்கி வருகின்றனர்.

ரெண்டு வருசம்தான் ஆகுது... விற்பனையில் கெத்து காட்டுது... Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

Kia நிறுவனம் ஏற்கனவே 1.5 லட்சம் இணைக்கப்பட்ட தொழில்நுட்ப வசதிக் கொண்ட கார்களை இந்தியாவில் விற்பனைச் செய்துவிட்டது. நாட்டின் ஒட்டுமொத்த இணைக்கப்பட்ட தொழில்நுட்பம் கார்களின் விற்பனையில் நிறுவனத்தின் பங்களிப்பு 78 சதவீதமாக இருக்கின்றது. அதிலும், இந்த இணைப்பு வசதிக் கொண்ட HTX 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்டிற்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

ரெண்டு வருசம்தான் ஆகுது... விற்பனையில் கெத்து காட்டுது... Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

Kia நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களை மட்டுமின்றி மிக விரைவில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களையும் விற்பனைக்குக் களமிறக்கும் திட்டத்தில் களமிறங்கியிருக்கின்றது. இதற்கான திட்டத்தை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தற்போதே ஆய்வு பணிகளில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அண்மையில் தெரிவித்தது.

ரெண்டு வருசம்தான் ஆகுது... விற்பனையில் கெத்து காட்டுது... Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

கடந்த காலங்களைக் காட்டிலும் இந்தியாவில் தற்போது மின் வாகனங்களுக்ககான தேவை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கி வருகின்றன. மேலும், சில நிறுவனங்கள் விரைவில் நாட்டை புதிய மின் வாகனத்தால் அலங்கரிக்க இருப்பதாக அறிவித்து வருகின்றன. இதன் வரிசையில் மிக விரைவில் kia இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெண்டு வருசம்தான் ஆகுது... விற்பனையில் கெத்து காட்டுது... Kia-வின் வளர்ச்சியை கண்டு பொறாமையில் போட்டி நிறுவனங்கள்!

அதேசமயம், kia நிறுவனம் அதன் seltos மற்றும் sonet ஆகிய இரண்டு எஸ்யூவி கார் மாடல்களிலும் பேடில் ஷிஃப்ட் போன்ற சிறப்பு வசதிகளை அறிமுகம் செய்தது. தொடர்ந்து ஐஎம்டி, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் வசதிக் கொண்ட ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், யுவோ கார் இணைப்பு தொழில்நுட்பம், குரல் கட்டளை வசதி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டு வருகின்றன. இத்துடன், இரு எஸ்யூவி கார்களையும் தனது புதிய சின்னத்தில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

Most Read Articles

English summary
Kia celebrates seltos suv crosses two lakh sales milestone in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X