வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

பிரபல நிறுவனம் ஒன்று யூஸ்டு கார் சந்தையில் நுழையவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

இந்தியாவின் யூஸ்டு கார் சந்தையில் நுழைவது தொடர்பாக தனக்கு இருக்கும் விருப்பத்தை கியா நிறுவனம் தற்போது வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு யூஸ்டு கார் பிஸ்னஸை தொடங்கவுள்ளதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கியா நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளதால், வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

கியா இந்தியா நிறுவனத்தின் துணை தலைவரும், சேல்ஸ் பிரிவின் மார்க்கெட்டிங் தலைவருமான ஹர்தீப் ப்ரார் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்தியாவில் தற்போது யூஸ்டு கார் தொழில் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பிறகு யூஸ்டு கார்களுக்கான தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதையே பாதுகாப்பான தேர்வாக கருதுகின்றனர். ஆனால் புதிய வாகனங்களின் விலை அதிகமாக இருக்கிறது.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

எனவே குறைவான விலையில் கிடைக்கும் யூஸ்டு கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. மேலும் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக பொது போக்குவரத்திற்கு அவ்வப்போது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும், தடைகளும் கூட சொந்த வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி வருகின்றன.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து யூஸ்டு கார்களுக்கான தேவையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. குறைவான விலையில் கார்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை யூஸ்டு கார் சந்தைதான் திருப்திபடுத்துகிறது. இந்தியாவின் யூஸ்டு கார் சந்தை வளர்ந்து கொண்டே வருவதால், கியா நிறுவனமும் அதனை பயன்படுத்தி கொள்ள விருப்பம் காட்டுகிறது.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

இதுகுறித்து ஹர்தீப் ப்ரார் கூறுகையில், ''தற்போதைய நிலையில் புதிய கார் சந்தையை விட யூஸ்டு கார் சந்தை கிட்டத்தட்ட 1.4 மடங்கு பெரிதாக உள்ளது. அதே நேரத்தில் வரும் 2025ம் ஆண்டில் இது அப்படியே இரண்டு மடங்காக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன'' என்றார்.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

ஆனால் யூஸ்டு கார் தொழில் தொடர்பாக விரிவான தகவல்களை கியா இந்தியா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும் இந்தியாவில் மற்ற நிறுவனங்களின் யூஸ்டு கார் தொழிலை போலவேதான் கியா நிறுவனத்தின் யூஸ்டு கார் தொழிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மாருதி சுஸுகி, மஹிந்திரா போன்ற ஒரு சில நிறுவனங்கள் ஏற்கனவே யூஸ்டு கார் தொழிலில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

இந்த வரிசையில் கியா நிறுவனமும் விரைவில் இணையவுள்ளது. கியா நிறுவனத்தை பொறுத்தவரையில் அதன் செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கு அதிக ரீ-சேல் வேல்யூ இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது. புதிய கார்களை வாங்குபவர்கள் அதிக காத்திருப்பு காலத்தால் பொறுமை இழக்கின்றனர்.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

குறிப்பாக தற்போது செமி கண்டக்டர் சிப்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறையால் கார்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டு நீண்ட காத்திருப்பு காலம் நிலவி வருகிறது. இதுதவிர புதிய கார்களின் விலையும் அவ்வப்போது உயர்ந்து கொண்டே உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து யூஸ்டு கார்களை வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக மாற்றுகின்றன.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

கியா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கேரன்ஸ் என்ற எம்பிவி காரை கியா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இது இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள 4வது கார் ஆகும்.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு... யூஸ்டு கார் சந்தையில் நுழைய போகும் முன்னணி நிறுவனம்... எதுன்னு தெரியுமா?

இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்னதாக இங்கு எஸ்யூவி மற்றும் எம்பிவி ஆகிய செக்மெண்ட்களில்தான் அதிக கவனம் செலுத்த போவதாக கியா நிறுவனம் தெரிவித்தது. அதற்கு ஏற்ற வகையில் தொடர்ந்து எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களையே கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. கியா கேரன்ஸ் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Kia india will start selling used cars check details here
Story first published: Tuesday, December 14, 2021, 22:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X