செல்டோஸா? சொனெட்டா? கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவன கார் எது? என்ற தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செல்டோஸா? சொனெட்டா? கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் எதுன்னு தெரியுமா?

கியா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக 19,056 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கியா நிறுவனம் இந்தியாவில் 15,450 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 23 சதவீத வளர்ச்சியை கியா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

செல்டோஸா? சொனெட்டா? கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் எதுன்னு தெரியுமா?

அத்துடன் கடந்த ஜனவரி மாதம் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. வழக்கம் போல் கடந்த ஜனவரி மாதமும் செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய 2 கார்களும்தான் கியா நிறுவனத்திற்கு மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்துள்ளன.

செல்டோஸா? சொனெட்டா? கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் எதுன்னு தெரியுமா?

இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை செல்டோஸ் எஸ்யூவி பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கியா நிறுவனம் 9,869 செல்டோஸ் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் இந்த எண்ணிக்கை 15,000 ஆக இருந்தது.

செல்டோஸா? சொனெட்டா? கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் எதுன்னு தெரியுமா?

இதன் மூலம் விற்பனையில் 34 சதவீத வீழ்ச்சியை கியா செல்டோஸ் எஸ்யூவி பதிவு செய்துள்ளது. அதே சமயம் கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவன கார்களின் பட்டியலில் சொனெட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கியா நிறுவனம் 8,859 சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது.

செல்டோஸா? சொனெட்டா? கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் எதுன்னு தெரியுமா?

கியா நிறுவனம் சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காரை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எனவே அதன் விற்பனை எண்ணிக்கையை 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட முடியாது. அதே சமயம் கடந்த ஜனவரியில் அதிகம் விற்பனையான கியா கார்களின் பட்டியலில் மூன்றாவது மற்றும் கடைசி இடத்தை கார்னிவல் பிரீமியம் எம்பிவி பிடித்துள்ளது.

செல்டோஸா? சொனெட்டா? கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் எதுன்னு தெரியுமா?

கியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 328 கார்னிவல் பிரீமியம் எம்பிவி கார்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 450 ஆக இருந்தது. இது 27.1 சதவீத வீழ்ச்சியாகும். கியா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்த மூன்று கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

செல்டோஸா? சொனெட்டா? கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் எதுன்னு தெரியுமா?

இதில், செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய 2 கார்களும் முறையே மிட்-சைஸ் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவி காரானது, ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. அதே சமயம் கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

செல்டோஸா? சொனெட்டா? கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் எதுன்னு தெரியுமா?

இந்த 2 கார்களும், பல்வேறு இன்ஜின், டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் மற்றும் அட்டகாசமான வசதிகளுடன், மிக சவாலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்த 2 கார்களின் டிசைனும் கவர்ச்சியாக உள்ளது. எனவே விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. அதே சமயம் கார்னிவல் எம்பிவி காரானது, விலை உயர்ந்த பிரீமியம் மாடலாக உள்ளது. இதன் விலையை கணக்கில் கொண்டால், கார்னிவல் எம்பிவியும் கியா நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையைதான் ஈட்டி தந்து கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 6, 2021, 23:58 [IST]
English summary
Kia Registers 23 Per cent Growth In January 2021 - Model Wise Sales. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+