விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்ச் படமே வேற லெவல்ல இருக்கு!

கியா கேரன்ஸ் (Kia Carens) காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த படங்களின் வாயிலாக கார் பற்றிய பல்வேறு தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

கியா (Kia) நிறுவனம் மிக விரைவில் கேரன்ஸ் (Carens) எனும் மாடல் எம்பிவி ரக வாகனத்தை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் நிறுவனம் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. வரும் டிசம்பரம் 16ம் தேதி அன்று இக்கார் நமது நாட்டில் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

அதாவது, வரும் 16ம் தேதி அன்றே கியா கேரன்ஸ் எம்பிவி இந்தியாவில் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. இந்த நிலையில் இக்காரின் பக்கம் இந்தியர்களைக் கவரும் பொருட்டு நிறுவனம் கேரன்ஸின் ஸ்கெட்ச் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

இந்த ஸ்கெட்ச் படங்கள் கியா கேரேன்ஸின் டிசைன் மற்றும் உருவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது இக்காரின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் எம்பிவி கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

ஸ்கெட்ச் படங்கள் கேரன்ஸின் முகப்பு பகுதி, பக்கவாட்டு பகுதி மற்றும் பின் பகுதி ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. தொடர்ந்து, ஆங்கில எழுத்து 'ஒய்' (Y) வடிவிலான பகல்நேரத்தில் எரிய கூடிய மின் விளக்கு, லம்போர்கினி உருஸ் காரில் இடம் பெறுவதைப் போல பிரத்யேக வடிவமைப்புக் கொண்ட வால் பகுதி மின் விளக்கு ஆகியவையும் இந்த காரில் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

இதுமட்டுமின்றி, டிஆர்எல்களை பொருத்துவதற்காக உருவாக்கப்பட்ட மடிப்பு போன்ற தோற்றம் முன்பக்க கதவு வரை நீட்டிக்கப்பட்டிருப்பதையும் தற்போது வெளியாகியிருக்கும் ஸ்கெட்ச் படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதே மடிப்பு மீண்டும் பின் பக்க கதவில் தொடங்கி வால் பகுதி மின் விளக்கு வரை நீட்டிக்கப்பட்டிருக்கும்.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

இதுமாதிரியான தனித்துவமான உருவ தோற்றத்திலேயே கியா கேரன்ஸ் வர இருக்கின்றது என்பதை புதிய ஸ்கெட்ச் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து, தனி தனியாக பிரித்து வைக்கப்பட்ட ஹெட்லேம்ப், முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன வகையிலான ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. மேலும், இதன் பானெட்டும் அதிக கட்டுமஸ்தான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

கியா நிறுவனம் புதிய கேரன்ஸ் காரில் 5 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீலையே பயன்படுத்த இருக்கின்றது. இதுமாதிரியான எண்ணற்ற அம்சங்களுடன் இந்த கார் இந்தியாவைக் களம் காண இருப்பதனாலேயே இக்காரின் மீது இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

கியா நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய மூன்று விதமான கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே தனது நான்காவது மாடலாக புதிய கேரன்ஸ் எம்பிவியை களமிறக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

இது மூன்று வரிசை இருக்கைகள் வசதிகள் கொண்ட வாகனமாகும். தற்போது நாட்டில் விற்பனையில் இருக்கும் மாருதி சுசுகி எர்டிகா, எக்எல்6 மற்றும் இன்னோவா க்ரிஸ்டா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இதன் வருகை ஹூண்டாய் அல்கஸார், மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் போட்டியை ஏற்படுத்த இருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 20 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை மற்றும் இக்காரில் இடம் பெற இருக்கும் பிற சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் வரும் 16ம் தேதி அன்றே வெளியிடப்பட இருக்கின்றன. அதாவது, எஞ்ஜின் மற்றும் சொகுசு வசதிகளாக என்னென்ன சிறப்பம்சங்கள் இக்காரில் இடம் பெற இருக்கின்றன என்பது பற்றிய தகவல்கள் அன்றைய தினமே வெளியிடப்பட இருக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Kia Carens காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு! ஸ்கெட்சிலேயே இந்த கார் அசத்தலா இருக்குதே!

அதேநேரத்தில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் கியா கேரன்ஸ் காரில் 10.25 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அடாஸ் தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்டன் ஸ்பாட் மானிட்டரிங், தானியங்கி பிரேக்கிங் அம்சம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்டம், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Kia revealed carens official design sketches
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X