அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

வெறும் 12 மாதங்களுக்கு உள்ளாகவே 1 லட்சம் கியா சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

கியா சொனெட் கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். கியா நிறுவனத்தின் செல்டோஸ் காரை போலவே, சொனெட்டும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உடனடியாக பிரபலமானது. அதிநவீன வசதிகள், சூப்பரான டிசைன், குறைவான விலை ஆகியவையே இதற்கு காரணம்.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

இந்த சூழலில், இந்திய சந்தையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சொனெட் கார்களை விற்பனை செய்துள்ளதாக கியா இந்தியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 12 மாதங்களுக்கு உள்ளாக இந்த பிரம்மாண்டமான மைல்கல்லை கியா சொனெட் எட்டி பிடித்துள்ளது.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுடன் கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது. இந்தியாவில் கோவிட்-19 பிரச்னை காரணமாக கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறை மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

உதிரிபாகங்களை சப்ளை செய்வதில் ஏற்பட்ட பிரச்னை, ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகிய காரணங்களால் கார் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நேரத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அனைத்து தடைகளையும் கடந்து கியா சொனெட் மிகவும் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாறியுள்ளது.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

உண்மையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய காராக கியா சொனெட் பார்க்கப்படுகிறது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் கார் விற்பனையில் 17 சதவீத பங்களிப்பை கியா சொனெட் வழங்கி வருகிறது. இது மிகப்பெரிய விஷயம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

அதே நேரத்தில் கியா இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 32 சதவீத பங்களிப்பை சொனெட் வழங்குகிறது. எஞ்சிய பங்களிப்பை கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் கார்னிவல் ஆகிய கார்கள் வழங்கி வருகின்றன. கியா சொனெட் காரில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

இதில், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், ட்யூயல்-டோன் மெஷின் கட் அலாய் வீல்கள், முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், போஸ் பிரீமியம் ஸ்பீக்கர் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை மிகவும் முக்கியமானவை.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

இதுதவிர மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் கியா சொனெட் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் பல்வேறு இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகள் உடன் கியா சொனெட் கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் ஒன்று. இந்த இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

இதற்கு அடுத்தபடியாக 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் தேர்வு இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் உடன் இந்த இன்ஜின் கிடைக்கிறது. மூன்றாவதாக இருப்பது 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின். இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிசிடி மற்றும் 6 ஸ்பீடு ஐஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 6.89 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.55 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு கியா சொனெட் காரில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. எனவே இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதில் சந்தேகமில்லை.

அதுக்குள்ள 1 லட்சம் கியா சொனெட் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? இந்த விலைக்கு கிடைச்சா கண்டிப்பா வாங்க ஆசை வரும்!

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் வரும் நாட்களில் பல்வேறு கார்கள் களமிறங்கவுள்ளன. கியா சொனெட்டை தொடர்ந்து நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த செக்மெண்ட் கார்களுக்கு கிடைத்து வரும் அதிக வரவேற்புதான் இதற்கு காரணம்.

Most Read Articles

English summary
Kia sonet compact suv sales cross 1 lakh mark in india here are all the details
Story first published: Wednesday, September 15, 2021, 18:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X