சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

கியா சொனெட் எச்டிஎக்ஸ் வேரியண்ட்டில் புதியதாக வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் புதிய ஸ்பை படங்களின் மூலம் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கியா நிறுவனம் அதன் புதிய கார்பிரேட் லோகோவையும், பிராண்டின் புதிய ‘ஊக்கமளிக்கும் இயக்கம்' என்ற தத்துவத்தையும் வெளியிட்டது.

சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

இதில் கியாவின் புதிய லோகோ இந்தியாவில் விற்பனையில் உள்ள அதன் கார்களுக்கு எப்போது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் பிராண்டின் புதிய லோகோவை பெற்ற சொனெட் கார்கள் இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கின.

சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

புதிய லோகோவை பெற்ற கியா கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் இன்னும் சில நாட்களில் துவங்கப்படவுள்ள நிலையில், சொனெட்டின் சில வேரியண்ட்கள் அப்டேட் செய்யப்பட்டிருப்பது தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

சொனெட் மட்டுமின்றி செல்டோஸிலும் சில வேரியண்ட்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் இந்த இரு எஸ்யூவி கார்களில் தற்போதைய சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படவுள்ளன.

சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

அவற்றிற்கு பதிலாக கியா சொனெட்டில் எச்டிஎக்ஸ் இண்டெலிஜண்ட் மேனுவல் (ஐஎம்டி) பெட்ரோல், எச்டிஎக்ஸ் டிசிடி பெட்ரோல், எச்டிஎக்ஸ் மேனுவல் டீசல் மற்றும் எச்டிஎக்ஸ் ஆட்டோமேட்டிக் டீசல் என்ற புதிய வேரியண்ட்கள் கொண்டுவரப்படவுள்ளன.

சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

சொனெட்டின் இந்த எச்டிஎக்ஸ் வேரியண்ட்களில் இரட்டை-நிற அலாய் சக்கரங்கள், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், இஎஸ்சி, எச்ஏசி, விஎஸ்எம் உள்ளிட்ட அம்சங்களும், எச்டிஎக்ஸ் டிசிடி பெட்ரோல் வேரியண்ட்டில் கூடுதலாக பல ட்ரைவிங் மோட்களும் வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்லேன் தெரிவித்துள்ளது.

சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

எச்டிஎக்ஸ் டிசிடி பெட்ரோல் வேரியண்ட் ஆனது சொனெட்டின் எச்டிகே ப்ளஸ் & ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டின் விலை ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.11.50 வரையில் எதிர்பார்க்கிறோம்.

சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

ஆட்டோமேட்டிக் தேர்வில் டீசல் என்ஜின் தற்சமயம் எச்டிகே+ மற்றும் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த தேர்வு விரைவில் புதிய எச்டிஎக்ஸ் வேரியண்ட்டிலும் கொடுக்கப்படவுள்ளது.

சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

ஏற்கனவே கூறியதுபோல், சொனெட்டை போன்று கியா செல்டோஸ் மாடலிலும் இண்டெலிஜண்ட் மேனுவல் (ஐஎம்டி) எச்டிகே+ மற்றும் டர்போ ஜிடிஎக்ஸ்(O) மேனுவல் என்ற இரு புதிய வேரியண்ட்கள் வழங்கப்படவுள்ளன.

சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...

இதில் ரூ.17- 17.5 லட்சத்தில் விலையினை பெறலாம் என கூறப்படும் டர்போ வேரியண்ட் செல்டோஸின் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படவுள்ளது. இவை மட்டுமில்லாமல் செல்டோஸின் கிராவிட்டி எடிசனையும் இந்திய சந்தைக்கு கொண்டுவர இந்த தென்கொரிய நிறுவனம் தயாராகி வருகிறது.

Most Read Articles

மேலும்... #கியா #kia #kia sonet
English summary
Kia Sonet HTX Variant To Get Alloys, Traction Control – New Spy Shots.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X