கியாவின் புதிய லோகோ அறிமுகம்... புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ், சொனெட் கார்களின் அறிமுகம் எப்போது?

கியா நிறுவனம் அதன் புதிய லோகோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கியாவின் புதிய லோகோ அறிமுகம்... புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ், சொனெட் கார்களின் அறிமுகம் எப்போது?

பிரபல தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா அதன் பிராண்ட் லோகோவை அண்மையில் அப்டேட் செய்தது. அதாவது புதிய லோகோவை நிறுவனம் உலகளவில் அறிமுகம் செய்தது. இப்புதிய லோகோவிலேயே தனது அனைத்து தயாரிப்புகளையும் வரும் காலங்களில் விற்பனைக்குக் கொண்டு வர கியா திட்டமிட்டிருக்கின்றது.

கியாவின் புதிய லோகோ அறிமுகம்... புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ், சொனெட் கார்களின் அறிமுகம் எப்போது?

இந்த புதிய லோகோவினையே கியா இன்று (ஏப்ரல் 27) இந்தியாவில் வெளியீடு செய்தது. ஆன்லைன் நேரலையாக வாயிலாக நடைபெற்ற லோகோ அறிமுக விழாவில் கியா நிறுவனத்தின் பல்வேறு முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

கியாவின் புதிய லோகோ அறிமுகம்... புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ், சொனெட் கார்களின் அறிமுகம் எப்போது?

கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய மூன்று விதமான கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இதில், செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரு எஸ்யூவி கார்களே முதன் முதலில் புதிய லோகோவை பெற இருக்கின்றன.

கியாவின் புதிய லோகோ அறிமுகம்... புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ், சொனெட் கார்களின் அறிமுகம் எப்போது?

ஆமாங்க, இவ்விரு கார்களையே புதிய லோகோவில் முதலில் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க கியா திட்டமிட்டிருக்கின்றது. புதிய லோகோவை பெறும் செல்டோஸ் மற்றும் சொனெட் எஸ்யூவி கார்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கியாவின் புதிய லோகோ அறிமுகம்... புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ், சொனெட் கார்களின் அறிமுகம் எப்போது?

இதன் பின்னரே கியா கார்னிவல் பிரீமியம் வசதிக் கொண்ட எம்பிவி கார் புதிய லோகோவைப் பெற இருக்கின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் புதிய லோகோவிலான செல்டோஸ் மற்றும் சொனெட் கார்கள் ஷோரூம்களில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக கியா தெரிவித்துள்ளது.

கியாவின் புதிய லோகோ அறிமுகம்... புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ், சொனெட் கார்களின் அறிமுகம் எப்போது?

இதற்கு முன்னதாகவே புதிய லோகோவைக் கொண்ட கியா சொனெட் இந்திய சாலைகளில் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டன. மிக சமீபத்தில் கேரளாவில் இக்கார்கள் எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

கியாவின் புதிய லோகோ அறிமுகம்... புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ், சொனெட் கார்களின் அறிமுகம் எப்போது?

இதுதவிர கியா கார் விற்பனையாளர்கள் சிலரின் கார் நிறுத்துமிடத்தில் புதிய லோகோ கொண்ட கியா கார்கள் நின்றுக் கொண்டிருப்பதைப் போன்ற படங்களும் வெளியாகி வருகின்றன. கியா நிறுவனம் உலக நாடுகள் சிலவற்றில் புதிய லோகோ கொண்ட கார்களை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

கியாவின் புதிய லோகோ அறிமுகம்... புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ், சொனெட் கார்களின் அறிமுகம் எப்போது?

ஸ்டிங்கர், இவி6 மற்றும் புதிய தலைமுறை கார்னிவல் ஆகிய கார்களை புத்தம் புதிய லோகோவுடன் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவில் இன்று புதிய லோகோவை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
Kia Unveiled New Logo In India: Updated Seltos and Sonet Will Be Launch In Next Month; Here Is More Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X