கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா? அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகிறது...

கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் கார் அடுத்த மார்ச் மாதத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா? அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகிறது...

கியா நிறுவனம் 2027ஆம் ஆண்டிற்கு உள்ளாக 7 முழு-எலக்ட்ரிக் கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில் முதல் எலக்ட்ரிக் கார் தான் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படவுள்ளது.

கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா? அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகிறது...

இந்த முதல் எலக்ட்ரிக் காரை குறித்து கியா கார்பிரேஷனின் தலைவரும் சிஇஒ-வுமான ஹோ சுங் சோங் கருத்து தெரிவிக்கையில், எங்களது முதல் முழு-எலக்ட்ரிக் கார், சிவி என்ற பெயரில் கொண்டுவரப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா? அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகிறது...

மேலும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட கியாவின் புதிய லோகோவை உலகளவில் முதல் மாடலாக சிவி எலக்ட்ரிக் கார் பெறும் என்றும் அவர் உறுதிப்படுத்தி இருந்தார். இந்த புதிய எலக்ட்ரிக் கார் புதிய டிசைன் தத்துவத்தில் வடிவமைக்கப்படும் முதல் காராகவும் வெளிவரவுள்ளதாக கியாவின் துணை தலைவர் & டிசைன் பிரிவின் தலைமை அதிகாரி கரீம் ஹபீப் கூறியுள்ளார்.

கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா? அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகிறது...

இதனால் மிகவும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் கியாவின் முதல் எலக்ட்ரிக் கார் வெளிவரும் என்பது மட்டும் நிச்சயம். இவை தவிர்த்து இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய எந்த விபரத்தையும் எங்களால் கூற இயலவில்லை.

கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா? அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகிறது...

கியாவின் கார்களுக்கு அவற்றின் புலி மூக்குதான் அடையாளம் என்பதால், அந்த அம்சத்தையும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் புதிய சிவி காரிலும் தயாரிப்பு நிறுவனம் வழங்கும். உட்புறத்தில் எலக்ட்ரிக் கார்களுக்கு அதிகளவில் இட வசதியை வழங்கினால்தான் நன்றாக இருக்கும் என கூறிய ஹபீப், புதிய சிவி காரின் மூலமாக கேபினில் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கவுள்ளோம் என்றார்.

கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா? அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகிறது...

முன்னதாக புதிய எலக்ட்ரிக் கார்களை க்ராஸ்ஓவர் வடிவத்தில் வடிவமைக்கவுள்ளதாக கியா நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி பார்க்கும்போது 2019 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் இந்த தென் கொரிய நிறுவனத்தின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 'இமெஜின் பை கியா' என்ற கான்செப்ட் வாகனத்தின் அடிப்படையில் அடுத்த சில கியா எலக்ட்ரிக் கார்கள் வெளிவரலாம்.

கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா? அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகிறது...

கியா நிறுவனம் ஏற்கனவே இ-நீரோ மற்றும் சோல் இவி கார்களை சில நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் சிவி தான் கியாவின் முதல் பேட்டரி பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனமாக விளங்கவுள்ளது.

கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா? அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகிறது...

சிவி எலக்ட்ரிக் கார் 800 வோல்ட் சார்ஜர் உடன் 500கிமீ ரேஞ்சை வழங்கும் பேட்டரியை பெற்றுவரவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து ஹோ சங் சோங் பேசுகையில், எங்களது எலக்ட்ரிக் வாகனங்களை செயல்திறன்மிக்கதாக கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதில் முதல் முழு-எலக்ட்ரிக் கார் சிவி-யும் அடங்குகிறது என்றார்.

கியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா? அடுத்த மார்ச் மாதத்தில் அறிமுகமாகிறது...

எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து கியா நிறுவனத்திடம் தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை. நம் நாட்டை பொறுத்தவரையில் ஆந்திரா பிரதேசத்தில் சார்ஜிங் நிலையங்களையும், ஆந்திரா மாநில அரசாங்கத்திற்கு எலக்ட்ரிக் வாகனங்களை வழங்குவதையும் மட்டுமே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வணிகமாக இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia’s first dedicated EV to be unveiled by March 2021
Story first published: Tuesday, February 9, 2021, 18:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X