கொரோனா போட்டு தாக்கிய ஆண்டில் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கி குவித்த மக்கள்... இவ்வளவு கார்கள் விற்பனையா?

2020ம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் எத்தனை சூப்பர் கார்களை விற்பனை செய்துள்ளது? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா போட்டு தாக்கிய ஆண்டில் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கி குவித்த மக்கள்... இவ்வளவு கார்கள் விற்பனையா?

விற்பனை அடிப்படையில் 2020ம் ஆண்டு தங்களின் இரண்டாவது சிறந்த ஆண்டு என லம்போர்கினி நிறுவனம் கூறியுள்ளது. 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 7,430 சூப்பர்கார்களை லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது உண்மையில் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது.

கொரோனா போட்டு தாக்கிய ஆண்டில் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கி குவித்த மக்கள்... இவ்வளவு கார்கள் விற்பனையா?

ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டில்தான் கோவிட்-19 வைரஸ் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இந்த பிரச்னை காரணமாக ஏராளமான தொழில் துறைகள் பாதிக்கப்பட்டன. இதில், ஆட்டோமொபைல் துறையும் மிக முக்கியமானது. கோவிட்-19 வைரஸ் பிரச்னையால், வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா போட்டு தாக்கிய ஆண்டில் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கி குவித்த மக்கள்... இவ்வளவு கார்கள் விற்பனையா?

அப்படிப்பட்ட ஒரு மோசமான ஆண்டை தங்களின் இரண்டாவது சிறந்த ஆண்டாக லம்போர்கினி நிறுவனம் மாற்றியிருப்பது சிறப்பான ஒரு விஷயம்தான். லம்போர்கினி நிறுவனத்தை பொறுத்தவரை விற்பனை அடிப்படையில் பார்த்தால், கடந்த 2019ம் ஆண்டுதான் மிக சிறப்பான ஒரு ஆண்டாக இருந்து வருகிறது. ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் 8,205 கார்களை டெலிவரி செய்திருந்தது.

கொரோனா போட்டு தாக்கிய ஆண்டில் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கி குவித்த மக்கள்... இவ்வளவு கார்கள் விற்பனையா?

அதன்பின் வந்த 2020ம் ஆண்டில் 7,430 சூப்பர் கார்கள் விற்பனை என்பது ஓரளவிற்கு குறைவான எண்ணிக்கை என்பதை மறுக்க முடியாது. ஆனால் கோவிட்-19 பிரச்னையால் ஏற்பட்ட உற்பத்தி மற்றும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளுக்கு மத்தியிலும் லம்போர்கினி நிறுவனம் இத்தனை கார்களை விற்பனை செய்துள்ளதால், இது மிக சிறப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

கொரோனா போட்டு தாக்கிய ஆண்டில் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கி குவித்த மக்கள்... இவ்வளவு கார்கள் விற்பனையா?

லம்போர்கினி நிறுவனத்தை பொறுத்தவரையில் அமெரிக்காதான் மீண்டும் ஒரு முறை அதன் முக்கியமான சந்தை என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 2,224 கார்களை லம்போர்கினி நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியில் 607 கார்களை லம்போர்கினி நிறுவனம் டெலிவரி செய்து அசத்தியுள்ளது.

கொரோனா போட்டு தாக்கிய ஆண்டில் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கி குவித்த மக்கள்... இவ்வளவு கார்கள் விற்பனையா?

லம்போர்கினி நிறுவனத்தை பொறுத்தவரை சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் மற்ற முக்கியமான சந்தைகளாக உள்ளன. சீனா, ஹாங்காங் மற்றும் மாக்கோவில் லம்போர்கினி கடந்த 2020ம் ஆண்டு 604 கார்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜப்பானில் 600 கார்கள் லம்போர்கினி நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா போட்டு தாக்கிய ஆண்டில் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கி குவித்த மக்கள்... இவ்வளவு கார்கள் விற்பனையா?

லம்போர்கினி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அதிக கார்களை விற்பனை செய்த நாடுகளின் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது இங்கிலாந்து ஆகும். இங்கு 517 கார்கள் விற்பனையாகியுள்ளன. அதே சமயம் இத்தாலியில் 347 கார்களை லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையிலும் லம்போர்கினி கார்களை தற்போது அதிகம் பேர் வாங்க தொடங்கியுள்ளனர்.

கொரோனா போட்டு தாக்கிய ஆண்டில் லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கி குவித்த மக்கள்... இவ்வளவு கார்கள் விற்பனையா?

குறிப்பாக லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவின் சாலைகளுக்கு ஏற்ற சிறப்பம்சங்களை லம்போர்கினி உருஸ் கொண்டிருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். இந்தியாவின் தொழில் அதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் பலர் லம்போர்கினி உருஸ் காரை சொந்தமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, March 19, 2021, 17:05 [IST]
English summary
Lamborghini Delivers 7,430 Supercars Worldwide In 2020 - Here Are All The Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+