ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் விற்பனை 1 மில்லியனை கடந்தது!! முதல் கார் எப்போது அறிமுகமானது தெரியுமா?

விற்பனையில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் 1 மில்லியனை கடந்து புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது. இந்த லேண்ட் ரோவர் கார் கடந்த வந்த பாதையை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் விற்பனை 1 மில்லியனை கடந்தது!! முதல் கார் எப்போது அறிமுகமானது தெரியுமா?

ரேஞ்ச் ரோவரின் விற்பனையில் ஒரு மில்லியன் என்ற இமாலய உயரத்தை எட்டியுள்ளதை லேண்ட் ரோவர் நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் விற்பனை 1 மில்லியனை கடந்தது!! முதல் கார் எப்போது அறிமுகமானது தெரியுமா?

மற்றபடி விற்பனையில் இந்த புதிய மைல்கல்லை அடைந்திருப்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. முதல் தலைமுறை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2005ல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் விற்பனை 1 மில்லியனை கடந்தது!! முதல் கார் எப்போது அறிமுகமானது தெரியுமா?

அதனை தொடர்ந்து இதன் இரண்டாம் தலைமுறை 2013ல் நியூயார்க் ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை இந்த எஸ்யூவி வாகனம் 2017ல் பெற்றது.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் விற்பனை 1 மில்லியனை கடந்தது!! முதல் கார் எப்போது அறிமுகமானது தெரியுமா?

2017 லாஸ் ஏஞ்சல்ஸ் கார் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் தயாரிப்பு பணிகள் 2018ல் துவங்கப்பட்டன. ஒவ்வொரு வருடத்திலும் கணிசமான எண்ணிக்கைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ள இந்த லக்சரி எஸ்யூவி கார் அதிகப்பட்சமாக 2019ல் 81,700 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் விற்பனை 1 மில்லியனை கடந்தது!! முதல் கார் எப்போது அறிமுகமானது தெரியுமா?

2020 ஆரம்பித்த தருவாயில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் ஒட்டு மொத்த விற்பனை எண்ணிக்கை 7.47 லட்சத்தை கடந்துவிட்டது. இதற்கிடையில் இந்த பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனம் மை2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தியது.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் விற்பனை 1 மில்லியனை கடந்தது!! முதல் கார் எப்போது அறிமுகமானது தெரியுமா?

இந்த 2021 மாடலின் விலைகள் ரூ.89.13 லட்சத்தில் இருந்து ரூ.1.43 கோடி வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எஸ், எஸ்இ, எச்எஸ்இ, எச்எஸ்இ டைனாமிக், சுயசரிதை டைனமிக், எச்எஸ்இ சில்வர் மற்றும் எச்எஸ்இ டைனாமிக் ப்ளாக் என்ற 7 விதமான வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ள 2021 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரினை 10 விதமான நிறத்தேர்வுகளில் (என்ஜின் தேர்வை பொறுத்து) தேர்ந்தெடுக்கலாம்.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் விற்பனை 1 மில்லியனை கடந்தது!! முதல் கார் எப்போது அறிமுகமானது தெரியுமா?

3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் செட்அப் உடன் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ற மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும் இந்த ப்ரீமியம் எஸ்யூவி காரில் ட்ரான்ஸ்மிஷனுக்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் விற்பனை 1 மில்லியனை கடந்தது!! முதல் கார் எப்போது அறிமுகமானது தெரியுமா?

இதில் மைல்ட்-ஹைப்ரீட் தேர்வில் அதிகப்பட்சமாக மணிக்கு 225கிமீ வேகத்திலும், டர்போசார்ஜ்டு பெட்ரோல் வேரியண்ட்டில் 201கிமீ வேகத்திலும், டீசல் வெர்சனில் 209கிமீ வேகத்திலும் காரை இயக்க முடியும். இவற்றுடன் ஆற்றல்மிக்க 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை பெறும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர்-இன் பெயரும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Land Rover Range Rover Sport Crosses 1 Million Sales Milestone
Story first published: Monday, February 8, 2021, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X