2-கதவுகளை கொண்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.76.57 லட்சம்

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 கார் இந்திய சந்தையில் ரூ.76.57 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லேண்ட் ரோவர் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.76.57 லட்சம்

இரு கதவுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைவுள்ள இது ஸ்டாண்டர்ட் லேண்ட் ரோவர் டிஃபெண்டரின் குறை-வீல்பேஸ் வெர்சனாகும். இதன் பெயரில் உள்ள 90 என்பது இந்த வாகனத்தின் வீல்பேஸ் அளவை குறிக்கிறது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.76.57 லட்சம்

இந்த இந்திய டிஃபெண்டர் 90 காரை 2.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 3.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 3.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளில் வாங்கலாம். இதில் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 221 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனையும், 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 294 கிலோவாட்ஸ் மற்றும் 550 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.76.57 லட்சம்

டீசல் என்ஜினின் மூலம் 221 கிலோவாட்ஸ் பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் பெறலாம். இந்த என்ஜின் தேர்வுகள் அனைத்திலும் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் மற்றும் 8-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படவுள்ளது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.76.57 லட்சம்

அதேநேரம் அட்வான்ஸான பாதை ரெஸ்பான்ஸ் 2 அமைப்பையும் கூடுதல் தேர்வாக பெறலாம் என்கிறது தயாரிப்பு நிறுவனம். புதிய டிஃபெண்டர் 90, டைனாமிக், எக்ஸ்-டைனாமிக் மற்றும் டிஃபெண்டர் எக்ஸ் உள்பட சில மாடங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இவற்றை எஸ், எஸ்.இ, மற்றும் எச்.எஸ்.இ தொகுப்புகளுடன் வாங்கலாமாம்.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.76.57 லட்சம்

இந்த மாடல்கள் அனைத்திலும் லெதர் உள்ளமைப்புகள் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றை காட்டிலும் புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 காரில் மிக முக்கிய அம்சமாக உட்புறத்தில் 6 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.76.57 லட்சம்

2 கதவுகள் மட்டுமே வழங்கப்பட்டு இருப்பினும் பிரத்யேகமான முன் மைய கன்சோல் பகுதியினால் இது சாத்தியமாகியுள்ளது. டேஸ்போர்டில் பேக்அப் பேட்டரி மற்றும் உள்ளுணர்வு இடைமுகத்துடன் லேண்ட் ரோவரின் பிவி இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.76.57 லட்சம்

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் எப்போதும் நவீன மென்பொருளை பெறும் வகையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள்-ஓவர்-தி-ஏர் அப்டேட்களை லேண்ட் ரோவர் நிறுவனம் வழங்கியுள்ளது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.76.57 லட்சம்

புதிய டிஃபெண்டர் 90 மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது குறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ரோகித் சுரி கருத்து தெரிவிக்கையில், டிஃபெண்டர் 110 மாடலுக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து வலுவாக உள்ளது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.76.57 லட்சம்

டிஃபெண்டர் 90-ஐ அறிமுகப்படுத்துவது டிஃபெண்டர் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டின் மீதான மக்களின் கவனத்தை மேலும் மேம்படுத்தும். லேண்ட் ரோவர் வடிவமைப்பின் சுருக்கமாக விளங்கும் டிஃபெண்டர் 90-ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என கூறினார்.

Most Read Articles

English summary
Jaguar Land Rover India today announced that following a successful launch of Defender 110, sales of Defender 90 have begun in India. The Defender 90 is available in three powertrain options, 2.0 l petrol delivering power of 221 kW and torque of 400 Nm, 3.0 l petrol delivering power of 294 kW and torque of 550 Nm and 3.0 l diesel delivering power of 221 kW and torque of 650 Nm. Prices of Defender 90 start from ₹ 76.57 lakh, ex-showroom in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X