விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லேண்ட் ரோவர் வழக்கமான டிஃபெண்டர் எஸ்யூவி கார்களைக் காட்டிலும் அதிக திறன் வெளிப்பாடுக் கொண்ட புதிய டிஃபெண்டர் வி8 எனும் சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை மற்றும் பிற சிறப்பு வசதிகள் பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லேண்ட் ரோவர் அதன் ஓர் புதுமுக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டிஃபெண்டர் வி8 எனும் பெயரில் அந்த கார் களமிறங்கியிருக்கின்றது. இது ஓர் அதி-திறனை வெளிப்படுத்தும் சொகுசு காராகும். இக்காருக்கு தயாரிப்பு நிறுவனம் மிக அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

ஆகையால், நாட்டின் மிக மிக விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8 சொகுசு காரும் ஒன்றாக மாறியுள்ளது. ஆம், இக்காருக்கு தயாரிப்பு நிறுவனம் ரூ. 1.90 கோடி என்ற மிக அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்ரோடில் வாங்கும்போது ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் இது விற்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த காரில் அதிவேக திறன் வெளிப்பாட்டிற்காக அதன் பவர்ஃபுல் எஞ்ஜின்களில் ஒன்றான வி8 இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜினை தனது ஜாகுவார் கார்களில் நிறுவனம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், ஜாகுவார் சொகுசு கார்களுக்கு இணையான திறன் வெளிப்பாட்டை புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8 வெளியேற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

5.0 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜட் எஞ்ஜினே லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8 சொகுசு காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 525 பிஎஸ் பவரையும், 625 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 240 கிமீ வேகம் ஆகும். மேலும், இக்கார் வெறும் 5.4 செகண்டுகளிலேயே இந்த உச்சபட்ச வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டதாக இருக்கின்றது.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

இதன் இழுவை திறன் மிகவும் பிரம்மிக்கை வைக்கும் வகையில் இருக்கின்றது. அதாவது, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8 3.5 டன் எடைக் கொண்ட பொருட்களைக் கூட மிக சுலபமாக டோவ் செய்துவிடும் என கூறப்படுகின்றது. இந்த அதீத திறனை 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் வாயிலாக வி8 எஞ்ஜின் வெளிப்படுத்துகின்றது. இது, நான்கு வீல்ககளுக்கும் இயங்கு திறனை வழங்குகின்றது. இத்துடன் இருவிதமான நிலபரப்பை சமாளிக்கக் கூடிய தொழில்நுட்ப வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

மற்றுமொரு முக்கிய அம்சமாக இந்த காரில் குவாட் வெளியேற்றும் குழாய் மற்றும் பெரிய 22 இன்சிலான அலாய் வீல்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, உருள் எதிர்ப்பு திறன் கொண்ட சஸ்பென்ஷனும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காரின் இயக்கத்தை மிக சிறப்பானதாக மாற்ற உதவும்.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8 காரின் உட்பகுதி வழக்கமான டிஃபெண்டர் மாடல்களைக் காட்டிலும் சற்று மாறுபட்டதாகத் தென்படுகின்றது. முழுவதுமாக கருப்பு நிறத்தால் இதன் உட்பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கரிப்பானது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8 காரை ஓர் ஸ்போர்ட்ஸ் தயாரிப்பிற்கு இணையானதாக காட்சியளிக்க உதவுகின்றது. இத்துடன், வி8 எனும் எழுத்து அச்சுக்கள் ஆங்காங்கே வழங்கப்பட்டிருக்கின்றன.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

இது மேலும் அக்கார் மாடலுக்கு கவர்ச்சியை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், காரின் கதவு மற்றும் இருக்கைகளில் லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிக பிரீமியம் மற்றும் சொகுசு வசதியை வழங்குவதற்கு உதவியாக இருக்கின்றது. மற்றபடி அனைத்தும் வழக்கமான டிஃபெண்டருக்கு இணையதாகவே புதிய வி8 காட்சியளிக்கின்றது.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

அதாவது, உருவ தோற்றம் மற்றும் பிற வசதிகளில் வழக்கமான டிஃபெண்டருக்கு இணையானதாகவே வி8 டிஃபெண்டர் காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பகல் நேர எல்இடி மின் விளக்கு, க்ரில், பம்பர், ஃப்ரேம் சேஸிஸ் உள்ளிட்டவை ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. ஆனால், இக்காரை லேண்ட் ரோவர் நிறுவனம் லேடர்-ஃப்ரேம் சேஸிஸால் (ladder-frame chassis) உருவாக்கவில்லை என்பது வறுத்தமளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

இருப்பினும், லேடர்-ஃப்ரேம் சேஸிஸைக் காட்டிலும் புதிய சேஸிஸ் அதிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் என லேண்ட் ரோவர் தெரிவித்திருக்கின்றது. வழக்கமான டிஃபெண்டர் கார்கள் 2.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகிய மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினானது 292 பிஎச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

இதற்கு அடுத்தபடியாக மேல் இடத்தில் இருக்கும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 296 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்ததாக டாப் பிளேசில் இருக்கும் டீசல் எஞ்ஜின் 296 பிஎச்பி மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டதாக இருக்கின்றது.

விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8... மிக மிக அதிக விலையில் அறிமுகம்!

இவையனைத்தைக் காட்டிலும் அதிக பவர்ஃபுல் எஞ்ஜின் கொண்ட டிஃபெண்டர் காரை மிக விரைவில் லேண்ட் ரோவர் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இது அதிகாரப்பூர்வமற்ற தகவலாகும். இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள், 4.4 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 எஞ்ஜின் கொண்ட டிஃபெண்டர் காரே மிக விரைவில் அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 600 பிஎச்பி வரை வெளியேற்றும் திறன் கொண்டதாம்.

Most Read Articles

English summary
Land rover defender v8 launched in india at rs 1 9 crores
Story first published: Saturday, August 14, 2021, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X