மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்! வழக்கமானதை காட்டிலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன்

கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் மாருதி சுசுகி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் மாடல்குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

மாருதி சுசுகி நிறுவனம் தயாரித்து வரும் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் வேகன்ஆர்-ம் ஒன்று. இந்த கார் மாடலிலேயே நிறுவனம் தற்போது ஓர் பதிப்பை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. எக்ஸ்ட்ரா எடிசன் எனும் பதிப்பை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

இது சிறப்பு பதிப்பு வேகன்ஆர் மாடலாகும். ஆகையால், வழக்கமான வேகன்ஆர் கார் மாடலைக் காட்டிலும் இப்புதிய எக்ஸ்ட்ரா எடிசன் பதிப்பில் பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனை மாருதி சுசுகி நிறுவனம் வேகன்ஆர் கார் மாடலின் விஎக்ஸ்ஐ மேனுவல் வேரியண்டை தழுவி உருவாக்கியிருக்கின்றது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

ஆகையால், விஎக்ஸ்ஐ மேனுவல் வேரியண்டில் இடம் பெற்றிருக்கும் அனைத்து சிறப்பு வசதிகளும் புதிய சிறப்பு பதிப்பு எக்ஸ்ட்ரா எடிசன் வேகன்ஆர் கார் மாடலிலும் கிடைக்கும். இத்துடன் இன்னும் பல சிறப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

எனவே தற்போது விற்பனையில் இருக்கும் வேகன்ஆர் காரைக் காட்டிலும் சற்று கூடுதல் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். புதிய எக்ஸ்ட்ரா எடிசன் வேகன்ஆர் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 1.0 லிட்டர் எம்டி மற்றும் 1.2 லிட்டர் எம்டி என இரு விதமான எஞ்ஜின் தேர்வே அக்காரில் வழங்கப்படுகின்றது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

இதில், 1.0 லிட்டர் எம்டி எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் எக்ஸ்ட்ரா பதிப்பு வேகன்ஆர் காருக்கு ரூ. 5,35,990 என்ற விலையும், 1.2 லிட்டர் எம்டி எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் எக்ஸ்ட்ரா பதிப்பு வேகன்ஆருக்கு ரூ. 5,71,490 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

இது எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் விஎக்ஸ்ஐ வேரியண்ட் ரூ. 5.13 லட்சம் மற்றும் ரூ. 5.48 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதனைக் காட்டிலும் கூடுதல் விலையைக் புதிய பதிப்பு எக்ஸ்ட்ரா எடிசன் பெற்றிருப்பதை நம்மால் தெளிவாக உணர முடிகின்றது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

இந்த அதிக விலைக்கு காரணமாக இருப்பது கூடுதல் சிறப்பு வசதி சேர்ப்பு மட்டுமே ஆகும். என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

முன் மற்றும் பின் பக்கத்தில் பம்பரை பாதுகாக்கும் பாகம்

பக்கவாட்டு ஸ்கர்ட்

வீல் ஆர்ச்சுகளுக்கான கிளாடிங்

பக்கவாட்டு உடல் பகுதிக்கான மோல்டிங்

ஃபாக் லேம்ப் கார்னிஷ்

க்ரில்லின் மேற்பகுதியில் குரோம் கார்னிஷ்

நம்பர் பிளேட்டில் கார்னிஷ் வேலை

முழு கவர்ச்சியான உட்பகுதி

டயர் இன்ஃபிளேட்டர்

ட்ரங்க் ஆர்கனைசர்

கார் சார்ஜர் எக்ஸ்டெண்டர் உள்ளிட்ட அம்சங்களே கூடுதலா புதிய எக்ஸ்ட்ரா எடிசன் வேகன்ஆர் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

மேலே பார்த்தத் தவிர வேறு எந்த சிறப்பு வசதி சேர்ப்பு பணியும் வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் காரில் சேர்க்கப்படவில்லை. கூடுதல் சிறப்பு வசதிகளுடன் இந்தியர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் கார் மாடல் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

1.0 லிட்டர் எஞ்ஜினில் கிடைக்கும் வேகன்ஆர் கார் அதிகபட்சமாக 68பிஎஸ் மற்றும் 90 என்எம் டார்க்கை வெளியேற்றும். இது 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் கிடைக்கும் வேகன்ஆர் வெளியேற்றும் திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

ஆனால், 1.2 லிட்டரில் கிடைக்கும் வேகன்ஆர் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த எஞ்ஜின் 83 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் வரையிலான திறனை வெளியேற்றக் கூடியது. இந்த கார் இந்தியாவில் டாடா டியாகோ, ஹூண்டாய் சேன்ட்ரோ ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனையில் இருக்கின்றது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... வழக்கமானதை காட்டிலும் எக்கசக்க சிறப்பம்சங்களுடன்!!

மாருதி சுசுகி நிறுவனம் வேகன்ஆர் காரை எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்கு வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஏற்கனவே இக்காரை சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைச் செய்யக் கூடிய ஸ்பெஷல் பதிப்பு வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Most Read Articles

English summary
Limited edition maruti wagonr xtra edition launched in india
Story first published: Thursday, August 5, 2021, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X