குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

டாடா மோட்டார்ஸ், 1945ஆம் ஆண்டில் இருந்து இந்திய சந்தையில் ஒலித்து கொண்டிருக்கும் பெயர். இத்தனை வருடங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கமர்ஷியல் வாகன பிரிவிலும் சரி, பயணிகள் வாகன பிரிவிலும் சரி அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

டாடா தயாரிக்கும் வாகனங்கள் அனைத்தையும் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்புகள் என கூறலாம். இந்தியாவில் டாடா பிராண்டின் கீழ் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்ட்கள் செயல்படுகின்றன. ரத்தன் டாடாவின் ஆசிர்வாதத்துடன் தற்போது வரையில் சிறப்பாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

குறிப்பாக பயணிகள் கார்கள் விற்பனையில் வளர்ச்சியை நோக்கி இந்த நிறுவனம் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு கடந்த செப்டம்பர் மாத விற்பனை தான் உதாரணம். கடந்த மாதத்தில் மொத்தம் 25,729 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இது 2020 செப்டம்பரை காட்டிலும் 21.4% அதிகமாகும். பலர் டாடா கார் பிராண்டை தேர்வு செய்வதற்கு முக்கியமான சில காரணங்களை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

அசாத்தியமான பாதுகாப்பு

கார்களில் பயணிகள் பாதுகாப்பு என்றாலே நமது நினைவிற்கு முதலாவதாக வருவது டாடா தான். அந்த அளவிற்கு இந்த இந்திய கார் தயாரிப்பு நிறுவனத்தின் கார்கள் (டியாகோ & டியாகோ - ஐந்திற்கு 4 நட்சத்திரம், அல்ட்ராஸ் & நெக்ஸான் - முழு நட்சத்திரம்) உலகளாவிய NCAP சோதனையில் மதிப்பெண்களை வாரி குவித்துள்ளன.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

தற்சமயம் இந்திய சந்தையில் இந்த அளவிற்கு பாதுகாப்பான கார்களை வேறெந்த நிறுவனமும் தயாரிப்பது இல்லை. இந்தியர்கள் மைலேஜ், கார் டிசைனை தாண்டி கார்களின் பாதுகாப்பு விஷயங்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு கடந்த சில மாத டாடா கார்கள் விற்பனை தான் சாட்சி.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

தயார் நிலையில் இவி ப்ளாட்ஃபாரம்

ரத்தன் டாடாவின் தொலைந்நோக்கு பார்வை எப்போதும் எதிர்காலத்தை பற்றியே இருக்கும். இதனால் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்கால சவால்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. டாடா பிராண்டில் இருந்து தற்சமயம் நெக்ஸான் இவி, மலிவான டிகோர் இவி என்ற எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

இதில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிகோர் இவி இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டிற்கு மிக பெரிய அடித்தளமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார் விற்பனை செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நாடு முழுவதும் எலக்ட்ரிக் காரை கொண்டு செல்ல வேண்டுமென்றால், அதற்கு மொத்த கட்டமைப்பையும் மாற்றியாக வேண்டும்.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

சார்ஜிங் நிலையங்கள் ஒவ்வொரு பகுதியிலும் நிறுவப்பட வேண்டும். நீண்ட ரேஞ்சை வழங்கக்கூடிய பேட்டரியை வடிவமைக்க வேண்டும் என லிஸ்ட் நீளும். ஆனால் இதையெல்லாம் டாடா நிறுவனம் ஏற்கனவே யோசித்து வைத்திருக்கும் என்பது தான் இதில் ஹைலைட்டே. இதனாலேயே எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பலர் டாடா பிராண்டை தேர்வு செய்கின்றனர். எலக்ட்ரிக் வாகனங்கள் கட்டாயமாக்கப்படும்போது எந்த பிரச்சனையும் இருக்காது அல்லவா.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

இந்திய தயாரிப்பு என்ற பெருமிதம்

இண்டிகோவில் ஆரம்பித்து சமீபத்தில் அறிமுகமான டிகோர் இவி வரையில் எல்லா கார்களையும் முழு இந்திய தயாரிப்பாக டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது. எனவே டாடா காரை வாங்கினால் இந்திய தயாரிப்பு வாகனத்தை வாங்கியுள்ளோம் என்ற கர்வம் கொள்வதில் தவறில்லை.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

ஆற்றல் & செயல்திறன்மிக்க என்ஜின்கள்

புதிய மாசு உமிழ்வு விதியினால் இந்திய சந்தையில் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் என்ஜின்களுடன் கார்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு சென்றன. இவ்வளவு ஏன், மாதத்திற்கு சராசரியாக 1.5 லட்ச கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி கூட இந்த விஷயத்தில் சிக்கி கொண்டுள்ளது.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதும் பிஎஸ்6 தரத்தில் டீசல் கார்களை விற்பனை செய்கிறது. மிகவும் கண்டிப்பான பிஎஸ்6 விதிமுறைகளை ஸ்மார்ட்டாக எதிர்க்கொண்ட டாடா மோட்டார்ஸின் ரெவோடார்க் & ரெவோட்ரான் வரிசை என்ஜின்கள் அட்டகாசமான செயல்திறன் மற்றும் சிறந்த மைலேஜை வழங்குகின்றன.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

சவுகரியமான பயணம் மற்றும் வசதிகள்

பாதுகாப்பான காராக வடிவமைக்கப்படும் அதேநேரம் பயண சவுகரியம் மற்றும் ஆன்போர்டு வசதிகளிலும் டாடா கார்களில் பெரியதாக எந்த குறையும் இருந்ததில்லை. மிடில் கிளாஸ் மக்கள் வாங்கக்கூடிய மலிவான டியாகோ ஹேட்ச்பேக் காராக இருந்தாலும், அல்லது மாடார்ன் தரத்திலான டாடா சஃபாரி காராக இருந்தாலும் அதில் காற்றோட்டமான கேபின் மற்றும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக டாடா கார்களை பலர் தேடி செல்வதற்கு காரணங்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் தெரிஞ்சிக்க வேண்டியவை!

அனைத்து வகையான டாடா கார்களிலும் வெவ்வேறு விதமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பார்க்கிங் உதவி மற்றும் தரமான சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. டாடா நிறுவனம் சில குறிப்பிட்ட வாகனங்கலில் ஐஆர்ஏ இணைப்பு கார் தொழிற்நுட்பத்தையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Unique Things You Will Only Find In Cars Built By Tata Motors.
Story first published: Wednesday, October 6, 2021, 1:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X