2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்! எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்கா

2021இல் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னணி நடிகர்கள் சிலர் மிக மிக உயரிய விலைக் கொண்ட கார்களை வாங்கியிருக்கின்றனர். அவர்கள் யார், அவர்கள் வாங்கியிருக்கும் காரின் விலை எவ்வளவு என்பது பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

2021ம் ஆண்டு முடிவடைய இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டில் பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அந்தவகையில், பாலிவுட் திரையுலகையே மிரட்டும் வகையில் நடிகர்கள் சிலர் நடப்பு 2021ம் ஆண்டில் வாங்கியிருக்கின்றனர். அந்தவகையில், பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கொள்முதல் செய்யப்பட்ட 5 முன்னணி நடிகர்களின் விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

சாரா அலி கான் (Sara Ali Khan) - மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி (Mercedes G350D)

ரன்பீர் கபூரைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் சாரா அலி கான் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் சொகுசு காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தனித்துவமான பெட்டகம் தோற்றத்தில் விற்பனைக்கு வந்து பலரை இக்கார் கவர்ந்து வருகின்றது. பெரும்பாலும் திரைப் பிரபலங்களையும், தொழிலதிபர்களையும் இக்கார் கவர்ந்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

இந்தியாவில் இக்கார் ரூ. 1.3 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ரெட்ரோ தோற்றத்தில் காட்சியளிக்கும் இக்கார் ஓர் எஸ்யூவி ரக வாகனமாகும். இந்த காரில் 9 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் எஞ்ஜின் அதிகபட்சமாக 285 பிஎஸ் மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan) - லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus)

2021ம் ஆண்டில் பலர் இந்த காரை வாங்கியிருக்கின்றனர். ஆனால், கார்த்திக் ஆர்யன் இக்காரை வாங்கிய விதமே இந்த இடத்தில் அவரைப் பற்றி நம்மை படிக்க வைத்திருக்கின்றது. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காருக்கு உலகளவில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது, இந்தியாவிலும்தான். ஆகையால், காத்திருப்பு காலம் சற்றே அதிகம்.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

இந்த காத்திருப்பு காலத்தைத் தவிர்க்கும் பொருட்டு பெரும் தொகையை அவர் வாரி இரைத்திருக்கின்றார். ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் இக்கார் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. நாட்டில் ரன்வீர், ரோஹித் ஷெட்டி மற்றும் ரஜினிகாந்தின் மகள் ஆகியோர்கள் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர்.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

பிரபாஸ் (Prabhas) - லம்போர்கினி அவென்டேடர் எஸ் ரோட்ஸ்டர் (Lamborghini Aventador S Roadster)

ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் வசித்து வரும் நடிகர் பிரபாஸ் மிக பெரிய ஆடம்பர கார் பிரியராக இருக்கின்றார். இவர், அண்மைடில் லம்போர்கினி அவென்டேடார் எஸ் ரோட்ஸ்டர் காரை வாங்கியதனால் ஒட்டுமொத்த வாகன உலகின் தலைப்பு செய்தியாக மாறினார். இதுவே இந்த தகவலை மீண்டும் இங்கு நமக்கு நினைவுப்படுத்தியுள்ளது.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

அவர் வாங்கியிருக்கும் சூப்பர் காரின் விலை ரூ. 5 கோடிக்கும் அதிகம் ஆகும். இக்காரில் 6.5 லிட்டர் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் வெறும் 3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட உதவும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 350 கிமீ ஆகும்.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

ரன்வீர் சிங் (Ranveer Singh) - மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS 600)

நடப்பு 2021ம் ஆண்டில் திரைப்பிரபலங்கள் அதிகப்பேர் வாங்கிய சொகுசு காராக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 600 இருக்கின்றது. ஆனால், இதனை முதன் முதலில் வாங்கிய நடிகராக ரன்வீர் சிங்கே இருக்கின்றார். இதன் காரணத்தினாலேயே அவரும், அவருடைய ஜிஎல்எஸ் 600 சொகுசு காரும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 600 சொகுசு இந்தியாவில் ரூ. 2.43 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இக்காரில் 4.0 லிட்டர் வி8 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 558 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், சொகுசு கப்பல் போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அம்சங்களை இக்கார் தாங்கியிருக்கின்றது.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

ஷாகித் கபூர் (Shahid Kapoor) - பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி (BMW X7 M50d)

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி ஓர் க்ராஸோவர் எஸ்யூவி ரக சொகுசு காராகும். இந்த காரில் பன்மடங்கு சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த காரை இந்தியாவில் ஷாகித் கபூர் மட்டுமல்ல அஜய் தேவகனும் பயன்படுத்தி வருகின்றார். ஆனால், 2021ம் ஆண்டில் இக்காரை வாங்கிய நபராக ஷாகித் கபூர் இருக்கின்றார்.

2021 ஸ்பெஷல்: 2021ல் பெருசா பேசப்பட்ட கார் கொள்முதல்... எல்லாமே முன்னணி நடிகர்கள் வாங்கியது! இந்த பட்டியல்ல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

எக்ஸ்7 எம்50டி காரில் சொகுசு அம்சங்கள் மட்டுமின்ற அதிக திறன் வாய்ந்த எஞ்ஜினும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த காரில் 2998 சிசி திறன் கொண்ட குவாட்-டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமசாக 388 பிஎச்பி மற்றும் 760 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
List of most expensive cars bought by five famous hindi actors in 2021
Story first published: Saturday, December 18, 2021, 18:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X