கொரோனா வைரசால் புழுதி படிந்த விலையுயர்ந்த கார்கள்! மனசே நொந்துடுச்சு இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை?

வாடகை வாகன நிறுவனத்தின் சொகுசு கார்கள் புழுதியடைந்து, பயன்பாடின்றி நிற்கும் காட்சிகள் காண்போரை சோகமடைய செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரசால் புழுதி படிந்த விலையுயர்ந்த சொகுசு கார்கள்! மனசே நொந்துடுச்சு இந்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

கோவிட்-19 வைரசால் உலக வல்லாதிக்க நாடுகளே இயக்கமற்று உறைந்துகிடக்கின்றன. இதே நிலைதான் இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக நீடித்து வருகின்றது. தற்போது லேசான தளர்வுகளுடன் நாடு மீண்டும் இயங்கத் தொடங்கியிருந்தாலும் மக்கள் மத்தியில் வைரஸ் அச்சுறுத்தல் தலை விரித்தாடிய வண்ணம் இருக்கின்றது.

கொரோனா வைரசால் புழுதி படிந்த விலையுயர்ந்த சொகுசு கார்கள்! மனசே நொந்துடுச்சு இந்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

இந்த நிலை அவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்க வைத்திருக்கின்றது. இதனால், தொழில் துறைகள் முடங்கிய நிலையில் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, வாகன உலகைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

கொரோனா வைரசால் புழுதி படிந்த விலையுயர்ந்த சொகுசு கார்கள்! மனசே நொந்துடுச்சு இந்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்கு விலையுயர்ந்த சொகுசு கார்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ராயல் லிமோஸ். இந்நிறுவனம் கிரிஸ்லர் லிமோசைன், ஜாகுவார் எக்ஸ்எஃப், ரேஞ்ஜ் ரோவர் மற்றும் பென்ஸ், ஆடி போன்ற நிறுவனங்களின் விலையுயர்ந்த கார்களை வாடகைக்கு விட்டு வருகின்றது.

கொரோனா வைரசால் புழுதி படிந்த விலையுயர்ந்த சொகுசு கார்கள்! மனசே நொந்துடுச்சு இந்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

அண்மைக் காலங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தடையால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தொடங்கி இறப்பு வரையிலான துக்க நிகழ்வுகள் வரை மிகவும் குறைவான நபர்களுடன், எளிமையாக அரங்கேறி வருகின்றது. இதனால், பிரமாண்டமாக நடைபெற்று வந்த திருமண நிகழ்வுகள் மிக எளிமையாக அரங்கேறி வருகின்றன.

கொரோனா வைரசால் புழுதி படிந்த விலையுயர்ந்த சொகுசு கார்கள்! மனசே நொந்துடுச்சு இந்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

இந்த நிலையே ராயல் லிமோஸ் நிறுவனம் கடுமையாக பாதிப்படைய காரணமாக அமைந்துள்ளது. மக்கள் அனைவரும் எளிமையான திருமணத்தை நோக்கி நகர்ந்திருப்பதால் வாடகைக்கு வாகனம் எடுப்பது பெருமளவில் குறைந்துள்ளது. இதனால், நிறுவனத்திடம் இருக்கும் கார்கள் வெளியில் எடுக்கப்படாமல் தூசி படிந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

கொரோனா வைரசால் புழுதி படிந்த விலையுயர்ந்த சொகுசு கார்கள்! மனசே நொந்துடுச்சு இந்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

ராயல் லிமோஸ் நிறுவனத்திடம் 12 கார்கள் லக்சூரி மற்றும் சொகுசு கார்கள் உள்ளன. இவையனைத்தையும் பராமரிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாக நிறுவனத்தைச் சேர்ந்த நபர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் புழுதி படிந்த விலையுயர்ந்த சொகுசு கார்கள்! மனசே நொந்துடுச்சு இந்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

திருமண நிகழ்வுகளுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த கார்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன. ஆனால், வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலை தென்படுகின்றது.

கொரோனா வைரசால் புழுதி படிந்த விலையுயர்ந்த சொகுசு கார்கள்! மனசே நொந்துடுச்சு இந்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

இதன் விளைவாக இரு நிலைகளிலும் சொகுசு வாகன வாடகை விடும் பாதிப்படைந்திருக்கின்றன. இந்த நிலை ராயல் லிமோசைன் மட்டுமின்றி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்து வாடகை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கொரோனா வைரசால் புழுதி படிந்த விலையுயர்ந்த சொகுசு கார்கள்! மனசே நொந்துடுச்சு இந்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

கொரோனா வைரசால் புதிய வாடகை வாகன துறை மட்டுமில்லைங்க புதிய வாகனங்களின் விற்பனையும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. நாட்டின் முன்னணி நிறுவனங்கள்கூட பாதிப்படைந்துள்ளன. உற்பத்தி ஆலைகளை தற்காலிமாக மூடுதல், பூஜ்ஜியம் விற்பனை போன்ற சிக்கல்களை அவை கடந்த காலங்களில் சந்தித்தன.

Image Courtesy: OTV

இதுமட்டுமின்றி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல் ரத்து, வாகனங்களுக்கான முக்கிய கூறுகள் கிடைத்தலில் சிக்கல், உற்பத்தி பாதிப்பு, தொடர் விலையுயர்வு போன்ற சிக்கல்களையும் அவை சந்தித்தன. இதனால், தற்போது உரிய நேரத்தில் வாகனங்களை டெலிவரி கொடுப்பதில் நிறுவனங்கள் சிரமப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையே உலக நாடுகள் அனைத்திலும் வாகன துறை சந்தித்து வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lockdown Effect Luxury Cars And Limousines Gathering Dust: Here Is Video. Read In Tamil.
Story first published: Wednesday, July 14, 2021, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X