இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட லக்சரி கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

ஃபடா (FADA) எனப்படும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்களின் வாகன பதிவு விபரங்களை வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தோமேயானால், கடந்த மாதத்தில் சொகுசு & லக்சரி கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

இருப்பினும் சில நிறுவனங்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. இதனை ஃபடா வெளியிட்டுள்ள லிஸ்ட் தெளிவாக வெளிக்காட்டுகிறது. லக்சரி கார்களை அதிகம் விற்பனை செய்தவர்கள் லிஸ்ட்டில் வழக்கம்போல் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமே முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

கடந்த மாதத்தில் வெற்றிக்கரமாக விற்பனை செய்யப்பட்ட மெர்சிடிஸ் கார்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து 1,001 ஆக வந்துள்ளது. ஆனால் 2020 அக்டோபரில் இதனை காட்டிலும் சற்று குறைவாக 916 பென்ஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இத்தகைய சொகுசு கார்கள் லிஸ்ட்டில் கடந்த பல மாதங்களாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

அதேபோல் இரண்டாவது இடத்திலும் எப்போதும் போல் பிம்டபிள்யூ நிறுவனமே தொடர்ந்துள்ளது. பென்ஸ் கார்களின் விற்பனை அதிகரித்தால் பிஎம்டபிள்யூ கார்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்ற நிலையே காணப்படுகிறது. கடந்த அக்டோபரில் 756 பிஎம்டபிள்யூ கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 அக்.இல் இதனை காட்டிலும் சற்று குறைவாக 631 பிஎம்டபிள்யூ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

இந்த வகையில் பிஎம்டபிள்யூ கார்களின் விற்பனை கிட்டத்தட்ட 19.81% அதிகரித்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் 174 யூனிட் கார்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தை தனதாக்கியுள்ளது. 2020 அக்டோபரிலும் ஏறக்குறைய இந்த எண்ணிக்கையிலே ஜாகுவார் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால், கடந்த மாதத்தில் 11 ஜாகுவார் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

இவற்றை தொடர்ந்து வால்வோ நிறுவனம் 21.57% வளர்ச்சி உடன் 4வது இடத்தில் உள்ளது. 120 வால்வோ கார்கள் கடந்த மாதத்தில் நம் நாட்டு சந்தையில் விற்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020 அக்டோபரை காட்டிலும் 21.57% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 153 கார்களை இந்தியாவில் வால்வோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

ஆடி நிறுவனம் இவற்றிற்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. உலகளவில் பிரபலமான சொகுசு கார்கள் தயாரிப்பு நிறுவனமான ஆடியின் விற்பனை சமீப மாதங்களாக இந்தியாவில் வெகுவாக குறைந்து வருகிறது. ஏன் சமீப ஆண்டுகளாக என்று கூட சொல்லலாம். இருப்பினும் கடந்த அக்டோபர் மாதத்தில் ஆடி கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

கடந்த மாதத்தில் 105 ஆடி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 105 என்பதே அதிகமா? என நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால் 2020 அக்டோபரில் வெறும் 7 ஆடி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை. மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ கார்களுக்கு இணையாக ஆடி கார்கள் இந்தியாவில் விற்பனையாகாததற்கு முக்கிய காரணம், ஆடி கார்களுக்கு வழங்கப்படும் குறைவான அப்டேட்கள்.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களை போன்று ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் தனது கார்களை அவ்வப்போது அப்டேட் செய்வதில்லை. இருப்பினும் 2020 அக்டோபருடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் ஆடி கார்களின் விற்பனை சுமார் 1,400% அதிகரித்துள்ளது. இதனால் இம்முறை விற்பனையில் போர்ஷேவை ஆடி முந்தியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

2020 அக்.இல் 23 போர்ஷே கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்திலும் இதே அளவிலான எண்ணிக்கையில் தான் (25 கார்கள்) போர்ஷே கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. இதற்கடுத்துள்ள நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை ஐந்திற்கும் குறைவானதாகவே உள்ளது. இதில் அதிகப்பட்சமாக 4 லம்போர்கினி கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மீண்டும் எழுச்சி காணும் ஆடி கார்களின் விற்பனை!! அக்.இல் 100 யூனிட்களை கடந்தது!

ஆனால் கடந்த ஆண்டு அக்டோபரில் 1 லம்போர்கினி கார் மட்டுமே விற்கப்பட்டு இருந்தது. ஆனால் 2020 அக்.இல் 2 பெண்ட்லீ கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில் கடந்த மாதத்திலும் இதே எண்ணிக்கையில் தான் பெண்ட்லீ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Luxury car sales 2021 october mercedes tops the list details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X