சொகுசு கார்களை அதிகளவில் விற்பது யார்? மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி...

கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சொகுசு கார்களை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சொகுசு கார்களை அதிகளவில் விற்பது யார்? மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி...

இந்திய சந்தையை பொறுத்தவரையில் சொகுசு கார்களின் விற்பனையில் பெரும்பாலும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் கை தான் ஓங்கி இருக்கும். அதற்கடுத்த நிலையில் சில 100 யூனிட்கள் வித்தியாசத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் இருப்பது வழக்கம்.

சொகுசு கார்களை அதிகளவில் விற்பது யார்? மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி...

அது கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் அவ்வாறுதான் தொடர்ந்துள்ளது. ஆனால் இம்முறை புதிய கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்ததினால் கிட்டத்தட்ட மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு இணையான எண்ணிக்கையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் கார்களை இந்தியாவில் விற்றுள்ளது.

Source: Autopunditz

Rank Brand Feb-21 Feb-20 Growth (%)
1 Mercedes-Benz 649 911 -28.8
2 BMW 626 755 -17.1
3 JLR 188 298 -36.9
4 Audi 187 314 -40.4
5 Volvo 88 123 -28.5
6 Porsche 33 40 -17.5
7 Bentley 3 4 -
8 Ferrari 2 2 0.0
9 Lamborghini 2 2 0.0
10 Rolls-Royce 1 2 -50.0
சொகுசு கார்களை அதிகளவில் விற்பது யார்? மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி...

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 649 ஆகும். அதுவே 2020 பிப்ரவரியில் 911 கார்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், மெர்சிடிஸின் விற்பனை சுமார் 28.8 சதவீதம் குறைந்துள்ளது.

சொகுசு கார்களை அதிகளவில் விற்பது யார்? மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி...

பிஎம்டபிள்யூவின் 2021 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை மெர்சிடிஸை காட்டிலும் வெறும் 23 யூனிட்கள் மட்டுமே குறைவாகும். இந்த எண்ணிக்கை 2020 பிப்ரவரி மாதத்தை (755) காட்டிலும் 17.1% குறைவுதான் என்றாலும், மொத்த சொகுசு கார் விற்பனையில் பெரிய அளவிலான பங்கை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

சொகுசு கார்களை அதிகளவில் விற்பது யார்? மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி...

கடந்த சில மாதங்களில் 3 சீரிஸ் க்ராண்ட் லிமௌசைன் (ரூ.51.50 லட்சம்), 2 சீரிஸ் க்ரான் கூபே பெட்ரோல், 2 சீரிஸ் க்ரான் கூபே ப்ளாக் ஷேடோ, எக்ஸ்3 எம் மற்றும் எக்ஸ்5 எம் உள்ளிட்ட புதிய கார்களுடன் இந்தியாவில் வணிகத்தை தீவிரமாக விரிவுப்படுத்தி வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம் மிக சமீபத்தில் கூட செயல்திறன்மிக்க புதிய எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காரை ரூ.62.90 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

சொகுசு கார்களை அதிகளவில் விற்பது யார்? மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி...

இதனால் வரும் மாதங்களில் விற்பனையில் மெர்சிடிஸை இந்த நிறுவனம் முந்தினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. அதேபோல் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் இந்திய வணிக நடவடிக்கைகளும் கடந்த சில மாதங்களாக சிறப்பாக இருந்து வருகிறது.

சொகுசு கார்களை அதிகளவில் விற்பது யார்? மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி...

இதன் விளைவாக எப்போதும் இந்த மூன்றாவது இடத்தை பிடிக்கும் ஆடியை கடந்த மாத விற்பனையில் ஜேஎல்ஆர் நிறுவனம் வெறும் ஒரே ஒரு தயாரிப்பு வாகனத்தை அதிகமாக விற்பனை செய்துள்ளதன் மூலம் முந்தியுள்ளது. இருப்பினும் ஜாகுவார் லேண்ட் ரோவர், ஆடி நிறுவனங்களது விற்பனை 2020 பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில் முறையே 36.9% மற்றும் 40.4% குறைந்துள்ளது.

சொகுசு கார்களை அதிகளவில் விற்பது யார்? மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி...

இந்த இரு நிறுவனங்கள் மட்டுமின்றி லிஸ்ட்டில் உள்ள நிறுவனங்கள் அனைத்தின் விற்பனையும் வழக்கத்தை காட்டிலும் சற்று குறைவாகவே உள்ளது. இதில் இருந்து, கொரோனா வைரஸ் பரவலினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளில் இருந்து இன்னும் எந்த நிறுவனமும் முழுமையாக மீளவில்லை என்பதை அறிய முடிகிறது. இதனை சரி செய்யவே புதிய புதிய கார்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 13, 2021, 15:19 [IST]
English summary
Luxury Car Sales in India for February 2021. Read In Tamil.
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+