இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பலேனோ காரின் மோதல் சோதனை முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) திகழ்கிறது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இந்த செக்மெண்ட்டில் டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களுடன் மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு கொண்டுள்ளது.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

ஆனால் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார் என்றால், அது மாருதி சுஸுகி பலேனோதான். இது 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு ஆகும். குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் ஆலையில் பலேனோ கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சப்ளை செய்யப்பட்டு, இந்தியாவில் பலேனோ விற்பனை செய்யப்படுகிறது.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

மேலும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்த சூழலில் 'மேட் இன் இந்தியா' சுஸுகி பலேனோ காரை, லத்தின் என்சிஏபி அமைப்பு (Latin NCAP) மோதல் சோதனைக்கு உட்படுத்தியது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த மோதல் சோதனையில் சுஸுகி பலேனோ 0 (பூஜ்ஜியம்) ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள் தொடர்ச்சியாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தி வரும் நிலையில், 'மேட் இன் இந்தியா' சுஸுகி பலேனோ 0 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 'மேட் இன் இந்தியா' சுஸுகி பலேனோ கார்தான் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

ஆனால் இந்த கார் 0 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளதாக லத்தீன் என்சிஏபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 20.03 சதவீதத்தையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 17.06 சதவீதத்தையும், பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 64.06 சதவீதத்தையும், பாதுகாப்பு அஸிஸ்ட்டில் 6.98 சதவீதத்தையும் மட்டுமே சுஸுகி பலேனோ பெற்றது.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

நாங்கள் ஏற்கனவே கூறியபடி 'மேட் இன் இந்தியா' டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளிலேயே அசத்தி வருகின்றன. இதுவரை டாடா நிறுவனத்தின் நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய மூன்று கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

அதே நேரத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் என்பதால், இது இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் பெருமை என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பலேனோ 0 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியிருப்பது இந்தியாவிற்கும், சுஸுகி நிறுவனத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பலேனோவின் காரின் மிக முக்கிய போட்டியாளரான டாடா அல்ட்ராஸ் குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

இந்தியாவில் சமீப காலமாக டாடா நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் விழிப்புணர்வே இதற்கு முக்கியமான காரணம். முன்பெல்லாம் கார் வாங்கும்போது விலை, மைலேஜ், டிசைன், கலர் ஆகிய அம்சங்களைதான் வாடிக்கையாளர்கள் அதிகமாக பார்ப்பார்கள்.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

ஆனால் தற்போது மோதல் சோதனைகளில் எத்தனை ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை கார் வாங்கியுள்ளது? என்பதையும் வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் டாடா நிறுவனம் தொடர்ந்து அசத்தி வருவதால், அந்த நிறுவனத்தின் கார் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்களில் ஒன்றான பன்ச் சமீபத்தில்தான் விற்பனைக்கு வந்தது.

இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?

இது மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும். பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குவதால், நெக்ஸான், அல்ட்ராஸ் ஆகிய கார்களை போன்று பன்ச் காரும் விற்பனையில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விலை குறைவான கார் என்பது கூடுதல் சிறப்பம்சம். வரும் காலங்களில் டாடா நிறுவனத்திடம் இருந்து இன்னும் நிறைய பாதுகாப்பான கார்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Made in india suzuki baleno safety rating
Story first published: Thursday, October 28, 2021, 23:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X