பிரபல கால் டாக்சியின் 100 சதவீத பங்கை வாங்கியது மஹிந்திரா... எத்தனை கோடி செலவில் தெரியுமா?..

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா இந்தியாவின் முன்னணி வாடகை சேவை நிறுவனங்களில் ஒன்றை முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல கால் டாக்சியின் 100 சதவீத பங்கை வாங்கியது மஹிந்திரா... எத்தனை கோடி செலவில் தெரியுமா?..

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, மெரு கால் டாக்சி சேவை நிறுவனத்தின் முழு பங்கையும் கையகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணிசமான பங்குகளை ஏற்கனவே இந்நிறுவனம் கையகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது 100 சதவீத பங்கையும் மஹிந்திரா தனக்கு உரித்தானதாக மாற்றியிருக்கின்றது.

பிரபல கால் டாக்சியின் 100 சதவீத பங்கை வாங்கியது மஹிந்திரா... எத்தனை கோடி செலவில் தெரியுமா?..

நீரஜ் குப்தா மற்றும் ஃபர்ஹத் குப்தா ஆகியோரிடத்தில் இருந்த பங்கினையே மஹிந்திரா நிறுவனம் தற்போது கையகப்படுத்தியுள்ளது. 44.14 சதவீதம் பங்கினை நீரஜ் குப்தாவும், 12.66 சதவீத பங்கினை ஃபர்ஹத் குப்தாவும் வைத்திருந்தனர். இந்த பங்குகளையே மஹிந்தரா தற்போது வாங்கியிருக்கின்றது.

பிரபல கால் டாக்சியின் 100 சதவீத பங்கை வாங்கியது மஹிந்திரா... எத்தனை கோடி செலவில் தெரியுமா?..

ரூ. 76.03 கோடியை செலவு செய்து நீரஜ் குப்தாவின் பங்கையும், ரூ. 21.63 கோடியை வழங்கி ஃபர்ஹத்தா குப்தாவின் பங்கையும் மஹிந்திரா வாங்கியிருப்பதாக குறிப்பிடத்தகுந்தது. இதனால், ஒட்டுமொத்த பங்கும் மஹிந்திரா நிறுவனத்தின் கை வசம் சேர்ந்திருக்கின்றது.

பிரபல கால் டாக்சியின் 100 சதவீத பங்கை வாங்கியது மஹிந்திரா... எத்தனை கோடி செலவில் தெரியுமா?..

ஏற்கனவே, 43.20 சதவீத பங்கினை மஹிந்திரா வைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. முழு பங்கினையும் மஹிந்திரா கொள்முதல் செய்திருப்பதால் மெரு கேப்ஸ் நிறுவனத்தின் அனைத்து முக்கிய அதிகாரிகளும் மாற்றப்பட இருக்கின்றனர்.

பிரபல கால் டாக்சியின் 100 சதவீத பங்கை வாங்கியது மஹிந்திரா... எத்தனை கோடி செலவில் தெரியுமா?..

மெரு கேப்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக பிரவின் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக கடந்த 2017ம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கால் டாக்சியின் 100 சதவீத பங்கை வாங்கியது மஹிந்திரா... எத்தனை கோடி செலவில் தெரியுமா?..

அதேசமயம், தற்போது சிஇஓ-வாக இருக்கும் நீர்ரஜ் குப்தா வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை சிஇஓ-வாக நீடிப்பார் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் பின்னரே புதிய சிஇஓ முழு பொறுப்பையும் ஏற்க இருக்கின்றார்.

பிரபல கால் டாக்சியின் 100 சதவீத பங்கை வாங்கியது மஹிந்திரா... எத்தனை கோடி செலவில் தெரியுமா?..

கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டதே மெரு கேப்ஸ் நிறுவனம். ஓலா, ஊபர் போன்று கால் டாக்சி சேவையில் நல்ல வரவேற்பைப் பெற்று நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனம், எரிபொருளால் இயங்கக் கூடிய எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் மட்டுமின்றி மின்சாரத்தால் இயங்கக் கூடிய வாகனங்களையும் தனது சேவையில் பயன்படுத்தி வருகின்றது.

பிரபல கால் டாக்சியின் 100 சதவீத பங்கை வாங்கியது மஹிந்திரா... எத்தனை கோடி செலவில் தெரியுமா?..

குறிப்பாக, இந்நிறுவனம் விமான நிலையம் போன்ற மிக முக்கியமான இடங்களிலேயே தனது சேவையை பிரதானமாக செய்து வருகின்றது. இத்தகைய நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையே மஹிந்திரா நிறுவனம் முழுமையாக கொள்முதல் செய்திருக்கின்றது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து புதிய கார்களின் விற்பனையைப் போல் கால்டாக்சி சேவையிலும் மஹிந்திரா நிறுவனம் மிக தீவிரமான செயல்பாட்டைத் தொடங்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra And Mahindra Buys 100 Percent Stakes In Meru Cabs. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X