கார் பாக்க முரட்டுத்தனமாக இருக்கு... ஓட்றதுக்கு எப்படி இருக்கு தெரியுமா? மஹிந்திரா பொலிரோ நியோ ரிவியூ வீடியோ!
இந்திய சந்தையில் மஹிந்திரா பொலிரோ நியோ கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலையில், இந்த புதிய காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த வீடியோவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மஹிந்திரா பொலிரோ நியோ கார், 8.48 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா பொலிரோ நியோ காரை டெலிவரி செய்யும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications








