புதிய மஹிந்திரா பொலிரோ நியோ அறிமுக தேதி கசிவு! அட இவ்ளோ சீக்கிரமாவே அறிமுகமாகுதா? எதிர்பார்க்கவே இல்ல!!

மஹிந்திரா நிறுவனத்தின்கீழ் விரைவில் அறிமுகமாக இருக்ககும் புதுமு பொலிரோ நியோ காரின் அறிமுக தேதி விபரம் கசிதந்துள்ளது.

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ அறிமுக தேதி கசிவு! அட இவ்ளோ சீக்கிரமாவே அறிமுகமாகுதா? எதிர்பார்க்கவே இல்ல!!

மஹிந்திரா நிறுவனம் மிக விரைவில் புதுமுக பொலிரோ நியோ காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரை நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த டியூவி300 காரின் டிசைன் தாத்பரியங்களைத் தழுவி உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ அறிமுக தேதி கசிவு! அட இவ்ளோ சீக்கிரமாவே அறிமுகமாகுதா? எதிர்பார்க்கவே இல்ல!!

இந்த நிலையில், இப்புதிய கார் எப்போது அறிமுகமாகம் என்பது பற்றிய தகவலும் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது. இதுகுறித்து கார்வேல் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, புதிய மஹிந்திரா பொலிரோ நியோ இம்மாதம் ஜூலை 15ம் தேதி அறிமுகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ அறிமுக தேதி கசிவு! அட இவ்ளோ சீக்கிரமாவே அறிமுகமாகுதா? எதிர்பார்க்கவே இல்ல!!

இந்த நிறுவனத்தின் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், பொலிரோ நியோ விரைவில் அறிமுகமாக இருப்பதை முன்னிட்டு, நிறுவனம் புதுமுக கார்களை விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றது.

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ அறிமுக தேதி கசிவு! அட இவ்ளோ சீக்கிரமாவே அறிமுகமாகுதா? எதிர்பார்க்கவே இல்ல!!

அவ்வாறு, ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொலிரோ நியோ கார்கள் ஏற்கனவே ஷோரூம்களில் காட்சியளிக்க தொடங்கிவிட்டன. இந்த படங்கள் அனைத்தும் டியூவி 300 காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக பொலிரோ நியோ உருவாகியிருப்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன.

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ அறிமுக தேதி கசிவு! அட இவ்ளோ சீக்கிரமாவே அறிமுகமாகுதா? எதிர்பார்க்கவே இல்ல!!

அதேசமயம், சில புதிய உடற்கூறுகளை பொலிரோ நியோ பெற்றிருப்பதையும் தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் உறுதிப்படுத்துகின்றன. அந்தவகையில், புதிய முகப்பு பகுதி பம்பர், மாற்றப்பட்ட ஹெட்லேம்ப்கள் மற்றும் கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்ட எல்இடி டிஆர்எல் விளக்குகள் உள்ளிட்டவை பொலிரோ நியோவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து, அகலமான ஏர் டேம்கள், வட்ட வடிவ பனி மின் விளக்கு மற்றும் அடிப்பகுதி பம்பர் ஆகியவை புதிய அம்சங்களாக பொலிரோ நியோவில் சேர்க்கப்பட்டுள்ளன. எம்ஹாவ்க் 100 டீசல் எஞ்ஜினே இப்புதிய காரில் மஹிந்திரா பொருத்தியிருக்கின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 100பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் இது விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், இரு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார் என பலதரப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நியோ விற்பனைக்குக் கிடைக்க இருக்கிறது.

இத்துடன், தார் எஸ்யூவி காரில் இடம் பெற்றிருப்பதைப் போல அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆர்ம் ரெஸ்ட், ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிக் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என கூடுதல் பிரீமியம் அம்சங்களும் புதிய பொலிரோ நியோ காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Bolero Neo Launch Date Leaked Via Online. Read In Tamil.
Story first published: Thursday, July 8, 2021, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X