Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

Mahindra Bolero Neoவின் என்10(O) வேரியண்ட்டில் Lock Rear Differential வசதி புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

புத்தம் புதிய XUV700 எஸ்யூவி காருக்கு முன்னதாக Mahindra நிறுவனத்தில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் தான் Bolero Neo ஆகும். விற்பனையில் இருந்த TUV300 காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக இது கொண்டுவரப்பட்டது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

TUV300 பெயரை கழற்றிவிட்டு, சந்தையில் பிரபலமான Mahindra வாகனங்களுள் ஒன்றாக விளங்கும் Bolero-வின் பெயர் உடன் இந்த புதிய எஸ்யூவி வாகனம் கொண்டுவரப்பட்டது. ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இருப்பினும் வாகனத்தின் முன்பக்கம் மட்டுமின்றி, சுற்றிலும் குறிப்பிடத்தக்க அளவில் அப்டேட் செய்து புத்துணர்ச்சியான தோற்றத்தில் Bolero Neo-வை Mahindra நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

இந்த நிலையில் தற்போது MTT என சுருக்கமாக அழைக்கப்படும் பல்வேறு-பாதை தொழிற்நுட்பத்தை Bolero Neo காரில் Mahindra வழங்கியுள்ளது. இந்த தொழிற்நுட்பம் Bolero Neo-வின் டாப் வேரியண்ட்டான என்10 (O)-வில் மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

மேலும், ஒரு வழியாக Bolero Neo என்10 (O) ட்ரிம் நிலையின் எக்ஸ்-ஷோரூம் விலையினையும் ரூ.10.69 லட்சம் என Mahindra நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை Bolero Neo வேரியண்ட்களின் வரிசையில் இதற்கு அடுத்ததாக உள்ள என்10 உடன் ஒப்பிடுகையில் ரூ.70,000 அதிகமாகும்.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

இந்த எஸ்யூவி காரின் விலைகளை அறிவித்துவிட்டாலும், இந்த தொழிற்நுட்பத்தின் மதிப்பை இந்த நிறுவனம் வெளியிடவில்லை. MTT என்பது இயந்திர ரீதியாக பின் சக்கரங்களை பூட்டுதல் ஆகும். மற்ற சில கார்களிலும் வழங்கப்படும் இந்த வசதியினை MTT என்ற பெயரில் சந்தைப்படுத்த Mahindra விரும்புகிறது.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

Bolero Neo-வின் டாப் வேரியண்ட் என்பதால் இந்த MTT மட்டுமின்றி ஏகப்பட்ட அம்சங்களுடன் Bolero Neo என்10(O) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களில் 7 இன்ச்சில் தொடுத்திரை ஹெட்-யூனிட், முன்பக்க ஆர்ம்ரெஸ்ட்ஸ், மடக்கும் வசதியுடன் ORVMகள், சற்று வளைந்த ஹெட்லேம்ப்கள் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவை அடங்குகின்றன.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

Bolero Neo-வின் உயரம் 3,996மிமீ ஆகும். இதனால் தான் இந்த Mahindra வாகனம் சப்-4 மீட்டர் பிரிவில் உள்ளது. அகலம் 1,795மிமீ, உயரம் 1,817மிமீ ஆகும். வீல்பேஸை 2,680மிமீ நீளத்தில் இந்த எஸ்யூவி கார் கொண்டுள்ளது. இதன் பின்பக்கத்தில் 384 லிட்டர்கள் கொள்ளளவில் பொருட்களை வைக்கும் பகுதி வழங்கப்படுகிறது.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

180மிமீ-இல் க்ரவுண்ட் க்ளியரென்ஸை கொண்டுள்ளதால் Bolero Neo-வை எந்தவொரு பயமுமின்றி எந்த சாலைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். முன்பக்கத்தில் இந்த Mahindra கார் Dual-wishbone-யும், பின்பக்கத்தில் coil சுருள்களையும் சஸ்பென்ஷனிற்கு கொண்டுள்ளது.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

கிட்டத்தட்ட 2 டன்களில் எடையை கொண்டிருந்தாலும், Neo வாகனத்தின் செயல்திறன் தரமானதாக உள்ளது. இந்த Mahindra எஸ்யூவி காரில் 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 3,750 ஆர்பிஎம்-இல் 100 பிஎச்பி மற்றும் 1,750- 2,250 ஆர்பிஎம்-இல் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே தற்போதைக்கு வழங்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் தேர்வு வழங்கப்படவில்லை. என்4, என்8 மற்றும் என்10 என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் Mahindra Bolero Neo அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது புதியதாக என்10(O) வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை Thar மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Scorpio வாகனங்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட புதிய Chasis-இல் தான் Bolero Neo-வும் உருவாக்கப்பட உள்ளது. விற்பனையில் இந்த Mahindra காருக்கு Ford Ecosport, Tata Nexon, Kia Sonet, Hyundai Venue Maruti Suzuki Vitara Brezza உள்ளிட்டவை விற்பனையில் போட்டியாக உள்ளன.

Mahindra Bolero Neo என்10(O) காரின் விலை ஒருவழியாக அறிவிப்பு!! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!!

எதிர்பார்க்கப்பட்ட படி வெவ்வேறு-பாதைக்களுக்கான தொழிற்நுட்பத்துடன் புதிய என்10(O) வேரியண்ட் Bolero Neo-வில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் ராயல் கோல்டு என்ற நிறத்தேர்வையும் இந்த எஸ்யூவி காருக்கு புதியதாக வழங்க Mahindra தயாராகி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 21, 2021, 17:26 [IST]
English summary
Mahindra Bolero Neo N10(O) Grade Will Retail For Rs.10.69 Lakh.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+