ஏப்ரலிலும் தொடரும் ஆஃபர்கள்... மஹிந்திரா கார்கள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு!
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மஹிந்திரா கார்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலான டிஸ்கவுண்ட் ஆஃபர் வழங்கப்படுகிறது. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு ஆஃபர் உள்ளது என்பது குறித்த விரிவான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு கொரோனா பிரச்னைக்கு பிறகு கார் சந்தை மிக வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. புதிய வாங்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில், மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து ஆஃபர்களை வழங்கி வருகிறது. அதிகபட்சமாக ரூ.3.06 லட்சம் வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பை அந்நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில், ஏப்ரல் மாதத்திற்கான ஆஃபர் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு ரூ.44,500 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்பவர்களுக்கு ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்டாக ரூ.5,000 வரையிலும், இதர சேமிப்பாக ரூ.5,000 வரையிலும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500
மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு ரூ.85,800 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.36,800 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.9,000 கார்ப்பரேட் போனஸாகவும், ரூ.15,000 வரை இதர சேமிப்புத் திட்டங்கள் மூலமாக பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.36,542 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.7,042 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.4,500 கார்ப்பரேட் போனஸாகவும், ரூ.10,000 இதர சேமிப்புச் சலுகைகள் மூலமாக பெற முடியும்.

மஹிந்திரா பொலிரோ
மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு ரூ.17,500 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில், ரூ.3,500 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.4,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் தள்ளுபடியாகவும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா கேயூவி100NXT
மஹிந்திரா கேயூவி100நெக்ஸ்ட் எஸ்யூவிக்கு ரூ.62,055 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.38,055 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.4,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ
மஹிந்திரா மராஸ்ஸோ 7 சீட்டர் எம்பிவி காருக்கு ரூ.41,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.20,000 விலையில் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.6,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் தள்ளுபடியாகவும் பெற முடியும்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4
மஹிந்திராவின் விலை உயர்ந்த எஸ்யூவி மாடலாக விற்பனையில் உள்ள அல்டுராஸ் ஜி4 எஸ்யூவிக்கு ரூ.3.06 லட்சம் வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.2.20 லட்சம் வரை விலையில் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.16,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும், ரூ.20,000 வரை இதர சேமிப்புச் சலுகைகளாகவும் பெற முடியும்.

சலுகை காலம்
வரும் 30ந் தேதி வரை புதிய மஹிந்திரா கார்களை புக்கிங் செய்வோருக்கு இந்த சேமிப்புச் சலுகைகள் பொருந்தும். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள மஹிந்திரா கார் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு மட்டும் எந்த சலுகைகளும் இல்லை. மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு 50,000 புக்கிங் குவிந்துள்ள நிலையில், இதுவரை நான்கில் ஒரு பங்கு கார்கள் மட்டுமே டெலிவிரி கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








