மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சேமிப்பு மற்றும் தள்ளுபடி சலுகைகளை மஹிந்திரா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த மாதமும் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு ரூ.3.36 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் விபரங்களை மாடல் வாரியாக தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா கேயூவி100

மஹிந்திரா நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி மாடலான கேயூவி100NXT எஸ்யூவிக்கு ரூ.28,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. நேரடியாக ரூ.25,000 வரை தள்ளுபடியும், ரூ.3,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த ஆஃபர்கள் நிபந்தனைக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் பெறும் வாய்ப்பபு இருக்கிறது.

மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.12,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் பெற முடியும்.

மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.49,000 வரை தள்ளுபடி பெற முடியும். இதில், ரூ.30,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.4,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா மராஸ்ஸோ

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு ரூ.40,200 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். ரூ.25,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,200 கார்ப்பரேட் சேமிப்பாகவும் பெற முடியும்.

மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு ரூ.84,500 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.53,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.6,500 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் பெற வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவிக்கு ரூ.3.36 லட்சம் வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.2.75 லட்சம் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.11,500 வரை கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா கார்களை வாங்க இதுவே சரியான தருணம்... ரூ.3.36 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

ஆஃபர் காலம்

இந்த மாதம் புதிய மஹிந்திரா காரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். ஆனால், இவை நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அருகாமையிலுள்ள மஹிந்திரா டீலரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 11, 2021, 11:44 [IST]
English summary
Mahindra is offering huge discount and savings offers for its familiar models in India.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+