Just In
- 29 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சொந்த செலவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை... அரசால் செய்ய முடியாததை மக்களுக்கு வழங்கி வரும் கணவன்-மனைவி...
சொந்த செலவில் கணவன்-மனைவி இருவர் ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகின்றனர். இருவரின் இந்த உன்னதமான செயலுக்கு குடியரசு தலைவர் முதல் பிரதமர் மோடி வரை பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

விபத்தில் சிக்கி உயிருக்காக போராடுபவர்கள் மற்றும் பிற நோயால் அவதிக்குள்ளாவர்களுக்கு உற்ற நண்பனாக உரிய நேரத்தில் மருத்துவமனையில் செல்ல உதவுவதில் அளப்பறியா பங்கினை ஆம்புலன்ஸ்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாது, தங்களை நம்பியிருக்கும் நோயாளியின் நலனுக்காக மிதமிஞ்சிய வேகத்தில் சென்று மருத்துவமனைக் கொண்டுபோய் சேர்க்கின்றனர். இதற்காக அவர்கள் பல்வேறு ரிஸ்குகளை எடுக்கின்றனர்.

எனவேதான் உலகின் மிக உன்னதமான பணிகளில் ஒன்றாக ஆம்புலன்ஸ் சேவையும், அதன் ஓட்டுநர் பணியும் பார்க்கப்படுகின்றது. இத்தகைய ஓர் பணியில் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவழித்து வருகிறார் ஹிமன்சு. இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகின்றார்.

இவர் மட்டுமின்றி இவருடைய மனைவி ட்விங்கிள்-ம் இதே உன்னத பணியில் ஈடுபட்டு வருகின்றார். இச்சேவையில் இருவரும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற காரணத்தினால் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் இவர்களுக்கு பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஹிமன்சு தம்பதியினருக்கு பாராட்டையும், விருதையும் வழங்கியிருக்கின்றனர். தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் இவர்களைப் பெருமிதப்படுத்தும் விதமாக ஓர் வீடியோவை அவர்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.

அது வெளியிட்டிருக்கும் பதிவில், பொலிரோ ஆம்புலன்ஸைப் பயன்படுத்தி வரும் உண்மையான போராளிகளுக்கு சல்யூட். 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றியிருக்கும் ஆம்புலன்ஸ் மேன் மற்றும் ஆம்புலன்ஸ் பெண் இருவரின் 20 வருட கதை இது" என பதிவிட்டு கூடவே ஓர் வீடியோவையும் வெளியிட்டிருக்கின்றது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இவர்கள் இருவரும் கொரோனா காலத்திலும்கூட அயராது பொது சேவையில் ஈடுபட்டிருக்கின்றனர். குறிப்பாக, ஹிமன்சுவின் மனைவி ட்விங்கிள் கொரோனா முன்கள பணியாளராக பணியாற்றியபோது, கொடிய வைரசின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால், அப்போதும் ஹிமன்சு தொடர் இலவச ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டிருக்கின்றார்.

இந்த சிறந்த முன்கள பணிக்காகவே பல அரசு அதிகாரிகள் முதல் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வரை பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையிலேயே இவர்கள் இருவரையும் கவுரவிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் இவ்வீடியோவை வெளியிட்டிருக்கின்றது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரே ஹிமன்சு. இவர் கடந்த 2000மாவது ஆண்டில் இருந்து இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகின்றார். முன்னதாக, இவரது தந்தை மிக மோசமான நிலையில் இருந்தபோது ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வர தவறியிருக்கின்றது. இதன் காரணத்தினால் அவரது கோமா நிலைக்கு சென்றார். தான் பெற்ற இந்த துயரத்தை இனி வரும் காலங்களில் தனது மக்கள் அடையக் கூடாது என்ற காரணத்திற்காக இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கினார் ஹிமன்சு.

அன்றைய தினத்தில் இருந்து தற்போது வரை பத்தாயிரத்திற்கும் அதிகமானோர்க்கும் அவர் உதவியிருக்கின்றார். குறிப்பாக கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த வேலையிலும் நோயைக் கண்டு அஞ்சி ஓர் மூலையிலையில் முடங்கிவிடாமல் மக்களுக்காக முன் நின்று சேவையில் ஈடுபட்டிருக்கின்றார். இந்த காரணத்தினாலயே அனைவராலும் பாராட்டக்கூடிய நபர்களாக ஹிமன்சும், அவரது மனைவி ட்விங்கிளும் மாறியிருக்கின்றனர்.

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த பொலிரோ வாகனத்தை சிலர் பயணிகள் வாகனமாக மட்டுமின்றி ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், பொலிரோ ஆம்புலன்ஸைப் பயன்படுத்தி வரும் நபர்களில் ஹரியானவைச் சேர்ந்த இந்த ஆம்புலன்ஸ் மேனும் ஒருவர் ஆவார். இதனைப் பெருமிதமாக எடுத்துக் கொள்ளும் நோக்கிலேயே இருவர் குறித்த வீடியோவை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.