கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று குருவாயூர் கோவில் தேவஸ்வம் போர்டுக்கு இந்தியர்களின் பிரியமான கார் மாடலை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக மஹிந்திரா குழுமம் (Mahindra Group) இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் மாடலான தார் (Thar) எஸ்யூவியே தற்போது கோவிலுக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் டிமாண்ட் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

தொடர்ச்சியாக இக்காருக்கான முன் பதிவுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி மஹிந்திரா தார் எஸ்யூவி 75 ஆயிரம் புக்கிங்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய புகழ்மிக்க கார் மாடலையே கேரளாவின் திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோயிலுக்கு மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்கியிருக்கின்றது.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

தேவஸ்வம் போர்டு தலைவர் கேபி மோகன்தாஸிடம் காருக்கான சாவி மற்றும் ஆவணங்களை மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரிகள் ஒப்படைத்தனர். சிவப்பு நிற, நான்கு வீல்கள் இயக்கம் கொண்ட கார் தார் எஸ்யூவி தற்போது குருவாயூர் கோவிலுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

மஹிந்திரா நிறுவனம் புதிய தார் எஸ்யூவி காரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு மிக மிக அமோகமான டிமாண்ட் கிடைத்து வருகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு வருடம் வரை இக்காருக்காக காத்திருக்க காலம் நிலவி வருகின்றது.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

இத்தகைய அமோக வரவேற்பைப் பெற்று வரும் ஓர் கார் மாடலையே மஹிந்திரா நிறுவனம் தாமாக முன் வந்து குருவாயூர் தேவஸ்வம் போர்டிற்கு பரிசாக வழங்கி இருக்கின்றது. இது தேவஸ்தன பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

மஹிந்திரா தார் ஓர் அதிக விற்பனையைப் பெற்று வரும் கார் மாடல் மட்டுமில்லைங்க. இந்த வாகனம் மிகவும் அதிக பாதுகாப்பு திறன் கொண்டதும்கூட. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் இக்கார் ஐந்திற்கு நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

கடந்த காலங்களில் ஆஃப் பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து இந்த கார், தற்போது குடும்பங்களுக்கு ஏற்ற வாகனமாகவும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதனாலேயே கடந்த ஆண்டு அறிமுகமான புதிய தலைமுறை எஸ்யூவிக்கு புக்கிங் தற்போதும் குறையாமல் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

மஹிந்திரா தார் எஸ்யூவி ஒட்டுமொத்தமாக 10 வேரியண்ட்களில், 2 விதமான நிறத் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறன் வெளிப்படுத்தும்.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

இதன், 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் 130 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறன் வரை வெளிப்படுத்தக் கூடியது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் தாரில் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து, ஹார்ட் டாப் மற்றும் சாஃப்ட் டாப் ஆகிய தேர்வுகளிலும் தார் விற்பனைக்குக் கிடைக்கிறது.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 12.10 ஆகவும், உயர் நிலை வேரியண்டின் விலை ரூ. 14.15 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே அம்சங்களுடன் கூடிய தொடு திரை வசதியும் இந்த காரில் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

கோவிலுக்கு பரிசளிக்கப்பட்ட பிரபல கார் மாடல்! தனி நபர் கொடுக்கல பிரபல கார் நிறுவனம் கொடுத்திருக்கு!

இதுமாதிரியான சிறப்பம்சங்களின் காரணத்தினாலேயே இக்காருக்கு ஓராண்டுகளைக் கடந்தும் நல்ல டிமாண்ட் இந்தியாவில் நிலவி வருகின்றது. மஹிந்திரா நிறுவனம் இந்த காரை மிக விரைவில் ஐந்து மற்றும் மூன்று கதவுகள் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பு: சில படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra donated thar suv guruvayur temple
Story first published: Monday, December 6, 2021, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X