இந்திய சாலையில் உலாவந்த புதிய மஹிந்திரா இ-கேயூவி100!! ஸ்பை படங்கள் வெளியீடு!

புதிய மஹிந்திரா இ-கேயூவி100 காரின் ஸ்பை படங்கள் பிரத்யேகமாக நமது செய்திதளத்திற்கு கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சாலையில் உலாவந்த புதிய மஹிந்திரா இ-கேயூவி100!! ஸ்பை படங்கள் வெளியீடு!

மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக அறிமுகப்படுத்த புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ உள்பட ஏகப்பட்ட புதிய கார்களை தயார்படுத்தி வருகிறது.

இந்திய சாலையில் உலாவந்த புதிய மஹிந்திரா இ-கேயூவி100!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இதில் மைக்ரோ-எஸ்யூவி காரான கேயூவி100 கார் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனும் ஒன்றாகும். இதற்கிடையில் தான் தற்போது இ-கேயூவி100 கார் இந்தியாவில் பொது சாலை ஒன்றில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சாலையில் உலாவந்த புதிய மஹிந்திரா இ-கேயூவி100!! ஸ்பை படங்கள் வெளியீடு!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை. நிறுவனத்தின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மஹிந்திராவின் லோகோ மட்டுமே மறைக்கப்பட்டுள்ளது.

இந்திய சாலையில் உலாவந்த புதிய மஹிந்திரா இ-கேயூவி100!! ஸ்பை படங்கள் வெளியீடு!

மஹிந்திரா இகேயூவி100 காரின் முன் பம்பரின் இரு பக்கங்களிலும் ஃபாக் விளக்குகளுடன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால் அவ்வாறான விளக்குகளை இந்த சோதனை காரில் பார்க்க முடியவில்லை. இதனால் மஹிந்திரா இகேயூவி100 காரின் முன்பக்க அழகே குறைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்திய சாலையில் உலாவந்த புதிய மஹிந்திரா இ-கேயூவி100!! ஸ்பை படங்கள் வெளியீடு!

ஹெட்லைட் அமைப்பும் எளிமையானதாக காட்சியளிக்கிறது. இதனால் ஹெட்லைட் அமைப்பு தற்காலிகமாக பொருத்தப்பட்டிருக்கலாம். பக்கவாட்டில் அலாய் சக்கரங்களுக்கு மாற்றாக இரும்பு சக்கரங்களும் கதவு கைப்பிடிகள் காரின் வெள்ளை நிறத்திற்கு பதிலாக கருப்பு நிறத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சாலையில் உலாவந்த புதிய மஹிந்திரா இ-கேயூவி100!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இதன் காரணமாக இந்த சோதனை கார் விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கலாம். முந்தைய சோதனை ஓட்டங்களில் சிஎன்ஜி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதை தெரியப்படுத்தும் விதமாக காரின் பின்பக்கத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

இந்திய சாலையில் உலாவந்த புதிய மஹிந்திரா இ-கேயூவி100!! ஸ்பை படங்கள் வெளியீடு!

ஆனால் இது எலக்ட்ரிக் கார் என்பதால் அவ்வாறான ஸ்டிக்கர் எதுவும் இல்லை. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் ஆரம்ப கட்ட நிலையில் தான் இருந்தாலும், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து தனது ஈடுப்பாட்டை காட்டி வருகிறது.

இந்திய சாலையில் உலாவந்த புதிய மஹிந்திரா இ-கேயூவி100!! ஸ்பை படங்கள் வெளியீடு!

மஹிந்திரா இகேயூவி100 கார் முதன்முதலாக சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் கான்செப்ட் மாடலாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பின் தயாரிப்பு வெர்சனில் கடந்த ஆண்டு 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்திய சாலையில் உலாவந்த புதிய மஹிந்திரா இ-கேயூவி100!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கப்படவுள்ள பேட்டரி தொகுப்பு உள்ளிட்ட தொழிற்நுட்பங்களின் விபரங்கள் தற்போதைக்கு இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மலிவான எலக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்படவுள்ள இகேயூவி100 காரின் ஆரம்ப விலை ரூ.9 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Mahindra KUV100 Spotted. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X