முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

எதிர்காலத்தில் 6 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப் அடுத்த 5 வருடங்களில் ஏகப்பட்ட புதிய அறிமுகங்களை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய மூலோபாயத்தில் வெளிவந்த எக்ஸ்யூவி700 மாடலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

இந்த நிலையில் மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனமும் தனது தயார்ப்பு பணிகளை விரிவுப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. இதன்படி, மூன்று-சக்கர மற்றும் குவாட்ரிசைக்கிள் பிரிவில் மொத்தம் 6 மஹிந்திரா எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, மஹிந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் வாகன வர்த்தகத்தில் ரூ.300 கோடியை முதலீடு செய்யவுள்ளது. நடப்பு 2021-22 நிதியாண்டை ஏறக்குறைய 14,000- 15,000 எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையுடன் நிறைவு செய்யும் முனைப்பில் மஹிந்திரா உள்ளது. மஹிந்திராவிற்கு இவி விற்பனையில் சிப்-களுக்கான பற்றாக்குறையே முதன்மையான தடையாக விளங்குகிறது.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

ஆதலால் சிப்களுக்கான பற்றாக்குறை நீக்கினால், அடுத்த நிதியாண்டில் தங்களது எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இரட்டிப்பாகும் என மஹிந்திரா நம்பிக்கை கொண்டுள்ளது. தயாரிப்பு பணிகளை பொருத்தவரையில், பெங்களூரில் உள்ள இவி தயாரிப்பு தளத்தில் இந்த நிதியாண்டில் 30,000 யூனிட்களில் நிறைவு செய்வோம் என மஹிந்திரா & மஹிந்திரா கணித்து வைத்துள்ளது.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

30,000 யூனிட்கள் என்பதையே தற்போதைக்கு மஹிந்திரா எதிர்பார்க்கும் எண்ணிக்கையாக இருப்பினும், 2024-25 நிதியாண்டில் இருந்து வருடத்திற்கு ஒரு லட்ச எலக்ட்ரிக் மூன்று-சக்கர வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மஹிந்திரா எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் சிஇஓ சுமன் மிஷ்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், தங்களது பிராண்ட் மிகவும் வலுவான தேவைக்கு சாட்சியாக உள்ளது எனவும், அடுத்த காலாண்டில் மட்டும் இவி விற்பனை முந்தைய அனைத்து எண்ணிக்கைகளையும் மிஞ்சும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

மேலும் விற்பனையாகும் இவி-களின் அளவு மற்றும் ஒட்டுமொத்த துறையும் கணிசமாக வளரும் என அவர் எதிர்பார்க்கிறார். 3-சக்கர வாகனங்களின் எண்ணிக்கையை பொருத்தவரை, இவி ஊடுருவல் வியத்தகு முறையில் 30%-ஆக அதிகரிக்கும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த பிரிவு 5 முதல் 6 லட்சம் யூனிட்களை எட்டக்கூடும் என்றும் மஹிந்திரா நம்புகிறது.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

ஜியோ-பிபி உடனான கூட்டணியில் ஒரு கிளஸ்டர் அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம், நீக்கக்கூடிய பேட்டரி தீர்வுகளில் முழு வரம்பையும் கொண்டுவருவது குறித்து மஹிந்திரா ஆலோசித்து வருகிறது. எப்படியோ வேகமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிவரும் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்ப, இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் க்ரூப்பான மஹிந்திரா & மஹிந்திரா தன்னை தகவமைத்து கொள்வது நல்ல விஷயமே ஆகும்.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

கடந்த செப்டம்பரில் இந்திய சந்தையில் எக்ஸ்யூவி700 மாடலை அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. பல வருடங்களுக்கு பிறகு அப்டேட்டை பெறும் ஸ்கார்பியோ வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு புறங்களிலும் அப்டேட்டை பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

கிட்டத்தட்ட அறிமுகத்திற்கு தயாராகிவிட்ட அப்டேட் செய்யப்பட்ட புதிய ஸ்கார்பியோ கடந்த பல மாதங்களாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சமயங்களில் கார் முழுவதுமாக மறைப்பால் மறைக்கப்பட்டு இருந்ததால், காரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன என்பதை தெளிவாக அறிய முடியவில்லை. இருப்பினும் பல வருடங்களுக்கு பிறகு அப்டேட்டை பெறுவதால் நிச்சயமாக ஸ்கார்பியோவின் வெளிப்புற தோற்றம் முற்றிலுமாக திருத்தியமைக்கப்படும்.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

புதிய ஸ்கார்பியோவில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவற்றுடன் மேனுவல் & ஆட்டோமேட்டில் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படலாம். 2020 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் எலக்ட்ரிக் வெர்சனை காட்சிப்படுத்தி இருந்தது.

முதற்கட்டமாக 6 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!! ஜியோ உடனான கூட்டணி உதவுமென நம்பிக்கை!

அதற்கு முந்தைய 2018 ஆட்டோ எக்ஸ்போவில் இகேயூவி100 என்ற அளவில் சிறிய எலக்ட்ரிக் காரை மஹிந்திரா காட்சிப்படுத்தியது. இவை இரண்டும் எதிர்காலத்தில் விற்பனை கொண்டுவரப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குவாட்ரிசைக்கிளை பொருத்தவரையில், பிரபலமான ஆட்டம் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனை தற்சமயம் இந்தியாவில் சாலை சோதனை ஓட்டங்களில் மஹிந்திரா உட்படுத்தி வருகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra electric is reportedly planning to introduce close to 6 evs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X