யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

மஹிந்திரா நிறுவனம் பதிவு செய்துள்ள புதிய பெயர், வாடிக்கையாளர்களை பெருமிதம் கொள்ள செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

இந்திய சந்தையில் வரும் நாட்களில் புதிய எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது. இது மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ள புத்தம் புதிய எஸ்யூவி ரக கார் ஆகும். சமீபத்தில்தான் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரை பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

அன்றைய தினமே, இன்னும் சொல்லப்போனால் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கான விலைகளையும் மஹிந்திரா நிறுவனம் அறிவித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் இன்னும் ஒரு சில வேரியண்ட்களுக்கான விலைகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

அதனை மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ளது.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இதன் இன்ஜின் செயல்திறனும் அருமையாக உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த கார் எங்களை முழுமையாக வசீகரித்து விட்டது. எங்களை போலவே, வாடிக்கையாளர்களும் இந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படுவதற்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக ஆச்சரியம் அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், ஜாவ்லின் (Javelin) என்ற பெயரை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 2 பெயர்களை பதிவு செய்துள்ளது.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

மஹிந்திரா ஜாவ்லின் (Mahindra Javelin) மற்றும் ஜாவ்லின் பை மஹிந்திரா (Javelin By Mahindra) என்பதுதான் அந்த இரண்டு பெயர்கள். ஜாவ்லின் என்ற பெயரை கேட்டதும், நீரஜ் சோப்ரா உங்கள் நியாபகத்திற்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. சமீபத்தில் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றார்.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

இதன் மூலம் அவர் வரலாற்று சாதனையை படைத்தார். ஈட்டி என்ற தமிழ் வார்த்தையின் ஆங்கில பெயர்தான் ஜாவ்லின். எனவே நீரஜ் சோப்ராவையும், ஈட்டி எறிதல் விளையாட்டையும் கௌரவிக்கும் வகையில், மஹிந்திரா நிறுவனம் இந்த பெயர்களை பதிவு செய்திருக்கலாம் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

முன்னதாக நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற உடனேயே, அவருக்கு எக்ஸ்யூவி700 காரை பரிசாக அளிக்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராதான் இதற்கான அறிவிப்பையும் உடனடியாக சமூக வலை தளங்கள் வாயிலாக வெளியிட்டார்.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

எனவே மஹிந்திரா நிறுவனம் பதிவு செய்துள்ள ஜாவ்லின் என்ற பெயர் தற்போது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் எக்ஸ்யூவி700 காருக்கும், இந்த ஜாவ்லின் என்ற பெயருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

அப்படி நடந்தால், அதற்கு ஜாவ்லின் என்ற பெயர் சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது எக்ஸ்யூவி700 காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டால் அதற்கு ஜாவ்லின் என்ற பெயர் சூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது. அல்லது முற்றிலும் புதிய கார் ஒன்றுக்கு இந்த பெயரை மஹிந்திரா நிறுவனம் சூட்டுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

மஹிந்திரா நிறுவனம் வரும் காலங்களில் நிறைய புதிய வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வாகனங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஜாவ்லின் என்ற பெயரை மஹிந்திரா சூட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் யூகங்களின் அடிப்படையிலானவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

யாருக்குமே வராத கெத்தான ஐடியா... இதுதான் புதிய மஹிந்திரா காரின் பெயரா? என்னனு தெரிஞ்சா வாங்க ஆசைப்படுவீங்க!

ஏனெனில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் மஹிந்திரா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து உறுதியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அதேபோல் பதிவு செய்யப்படும் அனைத்து பெயர்களும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சில பெயர்களை ஒரு சில நிறுவனங்கள் பதிவு செய்வதுடன் அப்படியே கைவிட்டு விடுகின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra javelin name trademarked in india here are all the details
Story first published: Tuesday, August 31, 2021, 17:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X