Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி ப்ளே ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலியை தயாரிப்பாளர் கூகுள் பிளோ ஸ்டோரில் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றார். இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம்.

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்யூவி 700 (XUV700) எஸ்யூவி ரக காரை மிக சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இக்கார் ரூ. 11.99 லட்சம் தொடங்கி ரூ. 19.79 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆகையால், ஆன்ரோடில் சற்று கூடுதலான விலையுடன் அது விற்பனைச் செய்யப்படும்.

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

வரும் அக்டோபர் 7 ம் தேதி முதல் இக்காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த தயாரிப்பு பல மடங்கு சிறப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது. விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளை எக்ஸ்யூவி700 பெற்றிருக்கின்றது.

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

அந்தவகையில், காரில் இடம் பெற்றிருக்கும் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றே இணைப்பு வசதி. இந்த இணைப்பு வசதியை கையாளுவதற்கு ஏதுவாகவே தற்போது மஹிந்திரா நிறுவனம் ஓர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அட்ரினோஎக்ஸ் (AdrenoX) எனும் செயலியையே நிறுவனம் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்திருக்கின்றது.

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

இந்த செயலியின் வாயிலாக 64 சிறப்பு வசதிகளை நிறுவனம் வழங்க இருக்கின்றது. காரை ஆன் செய்வது/ஆஃப் செய்வது, க்ளைமேட் கன்ட்ரோலை கட்டுப்படுத்துவது, சன்ரூஃப்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளை அட்ரினோஎக்ஸ் செயலியின் வாயிலாக எக்ஸ்யூவி 700 கார் பயனர்களாக பெற்றுக் கொள்ள முடியும்.

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

தொலைநிலை அம்சங்கள் (Remote Features control), ஸ்மார்ட் அம்சங்கள் (Smart Features), வாகன தகவல் எச்சரிக்கைகள் (Vehicle Information Alerts), இடம் சார்ந்த அம்சங்கள் (Location-based Features) மற்றும் பாதுகாப்பு அம்சங்ககள் (Safety Features) என ஐந்து தொகுப்புகளின்கீழ் ஒவ்வொரு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

அட்ரினோஎக்ஸ் கார் இணைப்பு வசதியை மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரின் ஏஎக்ஸ் சீரிஸ்களில் மட்டுமே வழங்குகின்றது. ஏஎக்ஸ் 3, ஏஎக்ஸ் 5 மற்றும் ஏஎக்ஸ் 7 ஆகிய ட்ரிம்களில் மட்டுமே அட்ரினோஎக்ஸ் வசதியை பெற முடியும். இந்த ட்ரிம்கள் ஐந்து மற்றும் ஏழு இருக்கை வசதிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

இதில் ஏஎக்ஸ் 7 ட்ரிம்மில் கூடுதல் லக்சூரி பேக்கேஜ் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றது. இத்துடன், அனைத்து வீல் இயக்கமும் கூடுதல் தேர்வாக எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்படுகின்றது. ரூ. 1.8 லட்சம் மற்றும் ரூ. 1.3 லட்சம் என்ற கூடுதல் விலையில் இந்த அம்சங்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 2.0 லிட்டர் எம்ஸ்டால்லியன் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜின் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 197 பிஎச்பியையும், டீசல் மோட்டார் 182 பிஎச்பி திறனையும் வெளியேற்றக் கூடியது.

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

மேலும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் ஆகிய வசதிகளும் எக்ஸ்யூவி700 காரில் கிடைக்கும். மஹிந்திர எக்ஸ்யூவி 700 கார் ஒட்டுமொத்தமாக 28 வேரியண்ட்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா ஹாரியர், சஃபாரி, எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகிய கார்களுக்கு போட்டியாக இது விற்பனைக் வந்திருக்கின்றது.

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

எக்ஸ்யூவி 700 விலை பட்டியலைக் கீழே காணலாம்:

ஐந்து இருக்கை தேர்வில் விற்பைனைக்குக் கிடைக்கும் எக்ஸ்யூவி700 காரின் விலை பட்டியல்:

MX petrol MT - Rs 11.99 lakh

MX diesel MT - Rs 12.29 lakh

AX3 petrol MT - Rs 13.99 lakh

AX3 diesel MT - Rs 14.99 lakh

AX5 petrol MT - Rs 14.99 lakh

AX5 diesel MT - Rs 15.99 lakh

AX5 petrol AT - Rs 16.29 lakh

AX5 diesel AT - Rs 17.29 lakh

AX5 diesel AT AWD - Rs 18.79 lakh

AX5(O) petrol AT - Rs 16.99 lakh

AX5(O) petrol AT AWD - Rs 18.49 lakh

AX5(O) diesel AT - Rs 17.99 lakh

AX5(O) diesel AT AWD - Rs 19.49 lakh

Mahindra XUV700 காருக்கான பிரத்யேக செயலி பிளோ ஸ்டோரில் அறிமுகம்... இந்த செயலியை வச்சு இவ்ளோ செய்ய முடியுமா?

ஏழு இருக்கை தேர்வின் விலை பட்டியல்:

MX diesel MT - Rs 13.19 lakh

AX5 petrol MT - Rs 15.69 lakh

AX5 petrol AT - Rs 16.99 lakh

AX5 petrol AT AWD - Rs 18.49 lakh

AX5 diesel MT - Rs 16.69 lakh

AX5 diesel AT - Rs 17.99 lakh

AX5(O) petrol AT - Rs 17.69 lakh

AX5(O) diesel AT - Rs 18.69 lakh

AX7 petrol AT - Rs 18.49 lakh

AX7 petrol AT AWD - Rs 19.99 lakh

AX7(O) petrol AT - Rs 19.19 lakh

AX7(O) petrol AT AWD - Rs 20.69 lakh

AX7 diesel AT - Rs 19.49 lakh

AX7(O) diesel AT - Rs 20.19 lakh

AX7(O) diesel AT AWD - Rs 21.69 lakh

More from DriveSpark

Article Published On: Monday, October 4, 2021, 11:46 [IST]
English summary
Mahindra launched adrenox app on google play store for xuv700
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+