போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் 3 புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இன்று ஒரே நாளில் மூன்று யுவோ டெக்-ப்ளஸ் (Yuvo Tech+) டிராக்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. விவசாயிகளுக்கு தாரளமான தேர்வு வசதியை வழங்கும் பொருட்டு இந்த டிராக்டர்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த மேலும் விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இன்று ஒரே நாளில் (அக்டோபர் 13) மூன்று புதிய டிராக்டர் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகளை மிரள வைக்கும் வகையில் மூன்று புதிய டிராக்டர்களை நாட்டில் ஒரே நாளில் நிறுவனம் களமிறக்கியிருக்கின்றது.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

யுவோ டெக்-ப்ளஸ் (Yuvo Tech+) எனும் டிராக்டர் வரிசையிலேயே மூன்று புதிய டிராக்டர்களும் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றன. யுவோ டெக்-ப்ளஸ் 275 (Yuvo Tech+ 275), யுவோ டெக்-ப்ளஸ் 405 (Yuvo Tech+ 405) மற்றும் யுவோ டெக்-ப்ளஸ் 415 (Yuvo Tech+ 415) ஆகிய மாடல் டிராக்டர்களையே மஹிந்திரா இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

நிறுவனத்தின் இந்த செயல் போட்டி நிறுவனங்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதே நேரத்தில் இந்த அனைத்து டிராக்டர் மாடல்களும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்காது என நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், " உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், பிஹார், ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலேயே முதல் கட்டமாக தற்போது அறிமுகமாகி இருக்கும் டிராக்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கும்" என தெரிவித்திருக்கின்றது.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

புதிய டிராக்டர்களுக்கு ஆறு வருடங்கள் வாரண்டியை நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இது ஓர் அதி-திறன் வசதிக் கொண்ட டிராக்டர் ஆகும். புதிய எம்ஜிப் (mZIP) 3 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் உயர் க்யூபிக் கேபிசிட்டி தொழில்நுட்பம் கொண்ட மோட்டார் ஆகும்.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

தற்போது அறிமுகமாகி இருக்கும் ஒவ்வொரு மாடல் டிராக்டரும் வெவ்வேறு விதமான திறன் வெளிப்பாடு வசதியைக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், 37 பிஎச்பி தொடங்கி 42 பிஎச்பி வரையிலான திறன் வெளிப்பாட்டில் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

இத்துடன், 12எஃப் (forward) மற்றும் 3ஆர் (reverse) ஆகிய டிரான்ஸ்மிஷன் வசதியையும் இந்த டிராக்டர் பெற்றிருக்கின்றது. இந்த கியர்பாக்ஸில் 3 ஸ்பீடு ரேஞ்ஜ் (H-M-L) ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இது நில பரப்பிற்கு ஏற்ப வேகத்தை அதிகரிக்க, குறைக்க உதவும். தொடர்ந்து, உயர் பிரசிஷன் கட்டுப்பாடு வால்வுகள் மற்றும் 1700 கிலோ எடையுள்ள பொருளை தூக்கும் திறன் உள்ளிட்டவை டிராக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

யுவோ டிராக்டர்களின் அடுத்த தலைமுறை தயாரிப்பாக யுவோ டெக்-ப்ளஸ் வரிசையில் விற்பனைக்கும் வரும் டிராக்டர்கள் இருக்கின்றன. கூடுதல் திறன் வெளிப்பாடு மற்றும் அதிக சிறப்பம்சங்களை அவை கொண்டிருக்கும். நவீன கால விவசாயிகளுக்கு ஏற்றதாகவும், பணியை சுலபமானதாக மாற்றவும் பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த டிராக்டர்களில் வழங்கப்பட்டுள்ளன.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

மஹிந்திரா நிறுவனம் புதுமுக தயாரிப்புகளின் வாயிலாக இந்தியர்களைக் கவர்ந்து வருகின்றது. அந்தவகையில் அண்மையில் எக்ஸ்யூவி700 எனும் புதுமுக எஸ்யூவி ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் நாட்டில் ஐந்து மற்றும் ஏழு இருக்கை தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன் இன்னும் பல சிறப்பு வசதிகளை மஹிந்திரா இக்காரில் வாரி வழங்கி இருக்கின்றது.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

ஆகையால், தற்போது இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. புக்கிங் தொடங்கப்பட்ட இரண்டே நாட்களில் 50 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை இக்கார் பெற்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், புக்கிங் தொடங்கி முதல் நாள் முதல் ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கும், இரண்டாம் நாள் முதல் இரண்டு மணி நேரத்தில் (2 மணி நேரங்கள் 8 நிமிடத்திற்குள்) மற்றொரு 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கையும் பெற்றது.

போட்டி நிறுவனங்களை கலங்கடித்த Mahindra... ஒரே நாளில் மூன்று புதிய டிராக்டர்கள் அறிமுகம்... விவசாயிகளுக்கு ஏற்றது!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 12.49 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. முன்னதாக ரூ. 11.99 லட்சமாக இதன் விலை நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. முதல் 25 ஆயிரம் யூனிட் புக்கிங்கிற்கு இந்த விலை உயர்வை மஹிந்திரா செய்தது குறிப்பிடத்தகுந்தது. 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு பின்னர் விலை உயர்த்தப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படியே அனைத்து வேரியண்டுகளின் விலையிலும் ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra launched three new age yuvo tech plus tractors in india
Story first published: Wednesday, October 13, 2021, 18:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X