மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவையை இந்தியாவின் குறிப்பிட்ட ஒற்றை மாநிலத்தில் மட்டும் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் கொத்து கொத்தாக மாண்டு வருகின்றனர். குறிப்பாக, தலை நகர் டெல்லி, உபி மற்றும் மஹாராஷ்டிராவின் முக்கியமான நகரங்கள் சிலவற்றில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிக அதிகளவில் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.

மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

இந்த மாதிரியான சூழ்நிலையில் மஹிந்திரா நிறுவனம் வீடு தேடி வந்து ஆக்சிஜன் டெலிவரியை வழங்கும் சேவையைத் தொடங்கியிருக்கின்றது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல உயிர்கள் போராடி வரும் நிலையில் இச்சேவையை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியுள்ளது.

மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

'ஆக்ஸிஜன் ஆன் வீல்ஸ்' எனும் பெயரில் இச்சேவையை மஹிந்திரா தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழே மருத்துவமனைகள், இல்லங்கள் என ஆக்சிஜன் தேவைப்படும் அனைத்து இடங்களிக்கும் மஹிந்திரா லோடு வாகனங்கள் வாயிலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

இதுமட்டுமின்றி, தனது உற்பத்தி ஆலை வாயிலாக தயாராகும் ஆக்சிஜன்களை ஜம்போ சிலிண்டர்கள் (ஆக்சிஜன் டேங்கர் லாரிகள்) வாயிலாகவும் அனுப்பி வைக்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கணிசமாக ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தவிர்க்க முடியும் என நம்பப்படுகின்றது.

மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

இச்சேவையை மஹிந்திரா நிறுவனம் மஹாராஷ்டிராவில் மட்டுமே தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக, நாசிக், மும்பை, தானே, நாக்பூர் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இச்சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

மாநிலத்திலேயே அதிகம் தொற்றைச் சந்தித்த நகரங்களாக மேற்கூறிய நகரங்கள் மாறியிருக்கின்றன. எனவேதான் இந்த நகரங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அடங்கிய பொலிரோக்களை மஹிந்திரா உலா வர செய்துள்ளது.

மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

ஏற்கனவே, பல வாகனங்கள் களமிறக்கப்பட்டுள்ளநிலையில், மிக விரைவில் 50 தொடங்கி 75 வரையிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள் அடங்கிய பொலிரோக்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

அதேசமயம், 'ஆக்ஸிஜன் ஆன் வீல்ஸ்' சேவையை மஹாராஷ்டிராவில் மட்டுமின் இந்தியாவின் பிற நகரங்களில் விரிவாக்கும் செய்யும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட தொடங்கியுள்ளது. தற்போது மஹாராஷ்டிராவில் 20 பொலிரோக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் வலம் வருவது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

முன்னதாக ஆயிரக் கணக்கில் மட்டுமே தொற்று பரவி வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கானோர் புதிதாக வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, நாள் ஒன்று 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மஹிந்திராவின் வீடு தேடி வரும் ஆக்சிஜன் சேவை... இந்தியாவின் இந்த மாநிலத்தில் மட்டும் அறிமுகம்...

தொடர்பு இறப்பின் எண்ணிக்கையும் மிகக் கடுமையாக உயர்ந்திருக்கின்றது. நாள் ஒன்றிற்கு இறப்போரின் ஆயிரத்தைத் தொட்டு வருகின்றது. இதில் பலர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே ஆக்சிஜனை டூர் டெலிவரி செய்யும் சேவையை மஹிந்திரா தொடங்கியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra Launches 'Oxygen On Wheels' Service in Maharashtra. Read In Tamil.
Story first published: Monday, May 3, 2021, 18:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X